Thursday, March 13, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


கரங்கள் இணைவது எதற்கு? 

கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல


ஆதரவாய் பற்றவும் 

அனுசரணையாய் மாறவும் 

பகையை மறக்கவும்

நட்பை தொடரவும்

தெரிந்ததை தெரிவிக்கவும்

தெரியாததை விளங்கிக் கொள்ளவும் 

இருப்பதை பகிரவும் 

இல்லாததை கொடுக்கவும்

அன்பை பதிக்கவும் 


கரங்கள் அமைதி கொண்டால்

நம்பிக்கை இழக்கும் 

எந்த ஒரு உறவும்

- வீணா

தொடுதல் நம்பிக்கை,அன்பு,

உறவிற்கு பாலம் ...

ஒரு சின்ன உணர்ச்சி தூண்டல்

 மூலம் பாறையும் கரையும்

 பனியாக,அவர் அன்பிற்கு நாம்

 அடிமை!

அதனாலோ என்னவோ பலரும்

 நானே ராஜா என்ற

போக்கில் தொடவிட மாட்டாங்க

 என்னென்றால் தொட்டால்

 நொறுங்கி விடுவோம் என்று

 தெரிந்தே!

- வித்யா


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...