Veena Shankar:
துள்ளி திரியும் வயதில்
காவல் காக்கிறாள் இவள்
இதுவே அவள் அரண்மனை என்பதால்
Veena Shankar:
ஓலைக் குடிசையில் தான்
எத்தனை வசதி?
குளிர்சாதனப்பெட்டி இல்லாமல்
அருந்தும் பானை தண்ணீர்
அன்றன்றே சமைக்கும் சத்தான உணவு
கால் கடுக்க நின்று
சமையல் செய்யாது
அமர்ந்து சமைக்கும் வசதி
குளிரூட்டி இல்லாத
கூரையின் இடையில்
தங்கும் காற்று
வசதிக்காக அன்றி
தேவைக்கு மட்டுமே
மிளிரும் விளக்குகள்
ஆடம்பர நாற்காலி அல்லாது
மணல் மேவிய திண்ணை
முற்றத்தில் அமர்ந்து கொண்டால்
கைபேசி கூட தேவையில்லை
அளவான வசதி
நிறைவான வாழ்வு
சண்டை சச்சரவோடு
சமைத்ததை அன்பாய்
பரிமாறும் தலைவி
தலைவியின் காதலில்
திளைக்கும் கணவன்
ஊடலிலும் கூடலிலும்
கிடைத்த பொக்கிஷங்கள்
அறையை ஒதுக்கி முற்றத்தில் கட்டில்
போட்டு நிலவினை
ரசிக்கும் பெருசுகள்
அடுத்தவர் வீட்டு பிரச்சனை
நமக்கும் உண்டு என்ற மனோபாவம்
இத்தனையும் விடுத்து
நான் செல்லவும் வேண்டுமோ
பட்டணத்திற்கு
படிக்கவும் வேலைக்கும்?
என்ற சிந்தனையில்
குழப்பத்தில் சிறுமி
இவள் மட்டுமல்ல
எல்லோர் வீட்டு நிலையும் இதுவே!
Vidhya:
தன் மாளிகையில் மலரும்
புன்னகை, எத்தனை
கொடுத்தாலும் கிடைக்கா
வெகுளிச் சிரிப்பு,அசட்டு வடியும்
முகத்தில் ஒளிரும் மாளிகை
இவள் இல்லையேல்
புன்னகைப்பூத்த மாளிகை
இருளை,தனிமையை பூக்கும்..
பின்னாளில் வீட்டுக்கே
மகாராணியாக பெயருக்கு
இருந்தாலும் தாய்வீட்டில்
இளவரசியாக இருந்ததே உசுரு!

No comments:
Post a Comment