Monday, April 11, 2022


முளைப்பாரி பாடல், by Veena Shankar

 



முளைப்பாரி 


                சின்ன சின்ன மண் சட்டியில் 

                சிறிது  சிறிதாய் மண் சேர்த்து 

                பற்பல தானியங்களைத் தூவி விட்டு 

                கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தெளித்து 

               மேலும் கீழுமாய் கிளறிவிட்டு 

                அம்மா உன்னை வேண்டியே 

                நாள்தோறும் கும்பிட்டு வந்தோம்

                மெல்ல மெல்ல மண்ணில் இருந்து 

                எழுந்து வந்த செடியும் 

               அம்மா உன் கை வண்ணமே! 

               செடியை வீட்டிற்குள்ளே வைத்தே

               வளர்த்தோம் உன் பார்வைக்காக 

               முளைப்பாரியை  நடுவில் வைத்து

               கும்மியடித்து    இசைத்தோம் கைகளாலே 

               விரதமிருந்து வளர்ந்த  முளைப்பாரியையும் 

               செழிக்க வைத்தாய் பாசத்தாலே 

               இளம்பச்சை வண்ணத்தால் கம்பளமாய்  

மாறிப் போனது என்  வீடு

பத்தாம் நாள் சொந்த பந்தங்களோடு

மேளச் சத்தத்தோடு   குலவு  செய்து

நடந்து வந்தோம் உன் கோயிலுக்கு 

உன் கருணைக்காக நாங்களும் 

வேண்டி நின்றோம் தாயே! 

உன் பிள்ளைகளாய் எங்களை 

நீ ஏற்க எங்களின் வாழ்வு 

சிறக்க தினம் உன்னை 

மனதால் கும்பிடுகிறோம் தாயே!

அடுத்த முறையும் வருவோம் 

உன் கோயில் வாசலுக்கு 

உனக்கு நன்றி சொல்ல 

கைகளால் முளைப்பாரி ஏந்தி வந்து


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...