Friday, April 1, 2022

தினம் ஒரு சிந்தனை by Veena Shankar

 


இன்றைய சிந்தனை


கடித்து சுவைத்த பழங்கள் கூழாய் போனது, கூலாகவும் போனது பழக்கடையினிலே

 இன்றைய சிந்தனை


கடவுள் எங்கே என்று மனிதன் கேட்டான். மனிதனின் மனதை காட்டி இங்கே இருக்கிறேன் என்றார் கடவுள். நான் வாழ்வதும் (வெளிப்படுவது) உன் கையில் என்றார்

இன்றைய சிந்தனை


பொய்யான போற்றலுக்கு மயங்காதே

மெய்யான வீழ்ச்சிக்கு காரணமாகாதே

இன்றைய சிந்தனை


கண்ணுக்கு தெரியாத இருவருக்கு பயப்படு.

ஒன்று கடவுள் மற்றொன்று உன் மனம்

ஆட்டத்தில் நாட்டம் கொண்டதால் வாழ்க்கையே கலாட்டாவாகி, சிரிப்பை தொலைத்த நம் நாயகி மீண்டு வர சிரத்தையுடன் வேண்டுவோம் அவளை நோட்டமிட்ட, வாட்டத்தை போக்கும் கடவுளிடம்

 இன்றைய சிந்தனை


சிறப்புடன் வாழ பணம் வேண்டும் போதும்

சிரிப்புடன் வாழ மனம் வேண்டுமே

 இன்றைய சிந்தனை


விழிகள் காட்சியை ரசிக்க மட்டுமல்ல, பிறரின் துன்பங்களையும் மனதிற்கு கொண்டு செல்வதற்கே

இன்றைய சிந்தனை


உடைமை நாடி செல்வதும்

கடமை தாண்டி கோவிலுக்கு செல்வதும் மனித இயல்பு

இன்றைய சிந்தனை


கோயில் வாசலில் யாசகம் செய்வதும் கடவுளின் அருளே. சில மணி துளிகள் கோயிலில் தரிசிக்கும் பக்தனை விட பல மணி நேரங்கள் தவம் கிடக்கிறார் யாசிப்பவர், பக்தனிடும் சிறு காசுக்காக

கோயில் வாசல் என்பதாலும் நம்மை விட அதிக நேரம் அவர்கள் செலவிடுவதும் கண்டிப்பாக அருள் தான். எது நம்மால் முடியாமல் அடுத்தவருக்கு கிடைக்கிறதோ அது அருள் தானே? நீங்கள் யாசகமிடுவது உங்கள் மணதிருப்திக்காக என்று இருந்தாலும் உங்களை அறியாமல் கடவுள் யாசிப்பவர்களுக்கு உங்கள் மூலம் படியளக்கிறார் என்பது தான் உண்மை. அதை ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்தால்

 இன்றைய சிந்தனை


ஊசியானது துளைக்கும் போது துணி சற்று விலகி நின்றாலும் தையலால் ஒன்றிணைவது போல மனத்தினால் வெறுக்கப்பட்ட நண்பர்களையும் உறவினர்களையும் காலத்தினாலும் பொறுமையினாலும் ஒன்றிணைக்கலாம்

இன்றைய சிந்தனை


வாழ்வில் இடர்வரினும் வாழ்வு சுடர்விட்டு சிறக்க நம்பிக்கை என்னும் திறவுகோல் வேண்டும்

ஆணின் கரத்தையும் மனத்தையும் சுற்றி வளைக்கும் சங்கிலியாய் இருக்கிறது பித்து பிடித்த பெண்ணின் மனம்

மனதில் வேண்டாதவை புகுந்தால் வேண்டியது மிஞ்சாது

 இன்றைய சிந்தனை


ஒருவன், தான் தன் முடிவை எடுத்த பிறகு அடுத்தவரிடம் தன் முடிவின் நிலைப்பாட்டை விவாதிப்பதும், தன் முடிவை அவர் ஏற்க பேசுவதும்  

இன்றைய சிந்தனை


பசியினால் வரும் கோபத்திற்கும் புசித்த பின் வரும் கோபத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகாரமும் அகங்காரமும்

இன்றைய சிந்தனை


நிதியும் நீதியும் தேவைப்படும்போது கிடைப்பது இல்லை

[08/03, 05:22] Veena Shankar: இன்றைய சிந்தனை


உண்மை வலிக்கும் சில நேரங்களில்

மௌனம் பதிலாகும் பல சமயங்களில்

இன்றைய சிந்தனை


முடிவு தெரியா வாழ்க்கையில் முடிந்து போன சம்பவத்திற்காக மூலையில் அமர்ந்து வருத்தபடுவதை விட முயற்சி செய்து சமரசம் ஆவதே வெற்றியின் ரகசியம்

இன்றைய சிந்தனை


எட்டி நின்றாலும் நம் வாய்ப்பை தட்டி பறிக்காத நட்பு வேண்டும்.

தட்டி பறித்தாலும் மன்னிக்கலாம் நம் நட்பை எட்டி உதைக்காத வரை

 இன்றைய சிந்தனை



அடுத்த பெண்ணை மனிதினியாய் பார், மனைவியாய் பார்க்காதே.

இன்றைய சிந்தனை


மனதினுள்ளே நினைத்ததை, மனதாலே தனக்குள் பேசிக்கொண்டு, தட்டச்சு செய்கிறான் மனிதன், இன்று அலைபேசியில் கூட பேசாமல் பலநேரங்களில் ஊமையாகிறான்

இன்றைய சிந்தனை


நம் கரங்களால் தாங்கும் பொருள் பாரமானாலும் இலகுவானலும் நாம் கொடுக்கும் அழுத்தம் மாறாது.


 நீரே !


கிணறுகளில் இருந்த நீ, 

 ஆழ்துளை கிணறு என்றானாய்

குட்டையில் இருந்த நீ குப்பியில் அடக்கமானாய்

தண்ணீர் சிக்கனம் என்பதனை மனிதன் தவறாக புரிந்து கொண்டானோ?

இன்றைய சிந்தனை


சில நேரங்களில் முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லையென்றால் நாம் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறுவதை விடுத்து இறையருள் பெறவில்லை என்று நினைப்போமேயானால் நமக்கு இறைவன் மீதுள்ள நம்பிக்கை கூடும்

இன்றைய சிந்தனை


காணும் பொருள் யாவும் வேண்டும், கொண்ட பின் யாவும் காட்சி பொருளே!

இன்றைய சிந்தனை


உன் மனதில் குழப்பம் வரும் போது அடுத்தவரின் பேச்சை ஒதுக்காதே. மற்றவருக்கு குழப்பம் வரும்போது நீ ஒதுங்கியே நில்.

இன்றைய சிந்தனை


நிறைய பேச நினைப்பவர்களுக்கு தண்டனை 

மெளனம் 

இன்றைய சிந்தனை


ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆண் (ன்) லைனில் தான் இருந்தாகனும்😂

இன்றைய சிந்தனை


பால் பொங்கி வரும் சமயத்தில் இடுக்கியை தேடுவதை விட தீயின் வேகத்தை குறைக்க வேண்டும். அதுபோல் மனத்தில் ஏற்படும் வலியை நீக்க மருந்து போடுவதை விட அதை மறக்க வழி தேட வேண்டும்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...