Friday, May 31, 2024

தாலி by Veena Shankar



 தாலி, பெண்களுக்கு முதன் முறையாக

ஆண்கள் கட்டினாலும் அவள், அவனுக்கு இரண்டாம் தாரமே!

அலைபேசி வரவால்


 தாலி, பெண்மைக்கு அங்கீகாரம்

ஆண்மைக்கு அதிகாரம்


 பொன்னான பெண் கழுத்தில் தாங்குவதும் பொன்னான தாலியை தான்


இரு மனங்கள் சங்கமித்த பின் தாலியும் ஓர் பொருளே! உலகிற்கு

மட்டுமே பறைசாற்ற


 தாலி, பெண்ணின் கழுத்தில் ஏறுவது

ஆவலில்

சூழலில்

தவிப்பில்

தந்திரத்தில்

தேவையில்

அர்த்த்ம் புரியாமல்

கழுத்தில் ஏறினாலும்

அங்கீகாரம் கொடுப்பதும்

சந்ததியை பெருக்குவதும்

தாலி எனும் மந்திரச் சங்கிலியில்


தாலி


புதிய சூழலில் அடியெடுக்கும் பெண்ணின் புது அடையாளம் 


அதை காப்பதும்

கழட்டுவதும் அவள் துணையின் கையில்

படமும் கருத்தும் by Kiruthika

 


அவள் மாண்டும்..

காதல் -

இங்கே ..

மாண்டு போக வில்லை...!..


வேறு இதயம் ..

தேடி போக வில்லை..!..


ஏனென்றால் .

இது 

மனிதர் உணர்ந்து கொள்ள..

மனித காதல்

இல்லை..!..


அதையும் தாண்டி 

புனிதம் ஆனது..!...

புனிதம் ஆனது..!..

பூஞ்சோலை கிளி by Veena Shankar

 


பூஞ்சோலை கிளி


பூஞ்சோலையில் காத்திருக்கும் கிளியின் மனதில் 


இல்லை

பாசாங்கு

சொன்னதை மட்டுமே சொல்லிப் பழகியதால்


இல்லை 

மனநிற மாற்றம்

பல நிறங்களை தன்னுள் அடக்கியதால்


இல்லை

தடுமாற்றம் 

உடலே இலகுவாய் இருப்பதால்


இல்லை

ஏமாற்றம்

ஏனெனில் தன் அழகை அறியாததால்

Wednesday, May 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 மனிதனின் கையால் சமதியாய் போன தன் காதலிக்கு ஓர் மலர் கொண்டு கண்ணீர் அஞ்சலி


தன் நண்பனின் இடியை தாங்கி கொண்ட உண்மை நண்பன்


 காதலை சொல்ல வாய்ப்பில்லாத நேரத்தில் எதிர்பாராமல் 

நடந்த துயரச் சம்பவத்தில் காதலியை இழந்த காதலனின் காதல் மலர் அவள் சூடா அல்ல

சமாதியில் அர்ப்பணிக்க


 கண்ணுக்கு தெரிவது மாயை 

உண்மையில்லாத புவியில்

Monday, May 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 பால்காரர் பால் ஊற்றும் சமையம் பார்த்து

வெள்ளி பாத்திரம் போல் பள பளவென தேய்த்து வைத்திருக்கும் 

பித்தளை வடிகட்டியை

அதன் இடத்தில் அமர்த்தி  

ஆட்களுக்கு தகுந்தாற் போல் மூன்று நான்கு தேக்கரண்டி காபி பொடியை அதில் இட்டு

ஒரு தம்பளர் சூடான கொதி நீரின் பாதியளவை வடிகட்டியின் தலையில் கொட்டி

அதன் வாயை மூடியால் மூடி

காபி பொடி சுடுநீரை சற்றே இழுத்து கொள்ளும் வரை அமைதி காத்து 

மீதி இருக்கும் சுடுநீரை ஊற்றி வைக்க

அதற்குள் காபியின் மணம் மூக்கை துளைக்க

தானாக பிறந்த உமிழ்நீரும் நம் உணர்வை தூண்ட

அந்நேரம் பால்காரரின் மணி சத்தம் கேட்டு பால் வாங்கி வர ஓட

அப்பொழுதே கறந்த பால் ஆனதால் அதன் சூடும் நம் கையில் ஐக்கியமாகும் வரை காத்திருக்க

அந்த பாலையும் அடுப்பில் ஏற்றி உயிர் கொடுக்க

காய்ச்சும் போதே பசும் பாலின் நல்வாடையும் காபி தண்ணீரோடு இணைய

இருமுறை வடித்த காபி தண்ணீரை மற்றொரு கிண்ணத்தில் ஊற்ற 

பால் பொங்குவதற்குள் அதை பல முறை கரண்டி கொண்டு கிளறி விட

பாலும் பொங்கி தன் வேலையை திறம் பட செய்ய

சூடு ஆறுவதற்கு முன் அதன் மேல் படிந்திருக்கும் நுரையையும் பாலடையையும் விலக்கி விட

பாலிற்காக காத்திருந்த 

பித்தளையில் செய்த தம்பளர் மற்றும் அதன் இணையான வட்டையும் மேடை மீது முன்னமே ஆசனம் பிடித்து தன்னை நிரப்பிக் கொள்ள  

வட்டையில் பாலும் மெல்ல மெல்ல அதன் இடத்தை முக்கால்வாசி அடைத்து நிற்க

இரு முறை வடிகட்டி சேகரித்த அந்த அடர் வண்ண காபி தண்ணீரை ஊற்ற

மீதியிருந்த இடத்தை அடைத்துக் கொண்டு சிறிது நுரையோடு மேலெழும்ப

அந்த காபி மணம் அறையை சுற்றி வர

ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் உயிர்த் தியாகம் செய்து அதில் கரைய 

தம்பளரில் உள்ள காபி வட்டைக்கு இரு முறை இடம் மாறி மீண்டும் தம்பளரில் அடைய

அதன் பின் ஒரு தேக்கரண்டி பாலின் நுரையை மட்டும் தம்பளரின் நடுவில் பரவ விட

அதுவும் காணாது என்று மீண்டும் ஒரு முறை காபி தண்ணீரை நடுவில் ஊற்றி அழகுபடுத்த 

அதன் நிறம் மற்றும் மணம் காபி குடிக்காதவருக்கும் அதன் அலங்காரம் பிடித்து போய் தங்கள் நாவினை வெளியே நீட்டி உதட்டை நனைக்க

பிற காட்சிகளெல்லாம் அந்நியப்பட்டு தம்பளரில் மட்டுமே நம் கண்கள் லயிக்க

வேகமாக சென்றால் காபி துளிகளை இழக்க நேரிடும் என்ற மனபாவத்தோடு நம் கால்களை மெல்ல செல்ல மூளை பணிக்க

அதை பொறுமையாய் ருசித்து அருந்த நினைக்கும் நாம்

அறையின் ஓரத்தில் இடம் பார்த்து நாற்காலியை முன்னிழுத்து

இடக்கையில் தம்பளரையும் வலக்கையில் வட்டையில் காபியை ஊற்றி 

தனியேவும் அமர்ந்து குடிக்கும்

சுகம்

ஆனந்தம்

திருப்தி

அமைதி

என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் தகுமே காபியின் சுவைக்கு

என்றும் நான் அடிமை

Friday, May 24, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


 மீனா இல்லை நாளைய மனிதனா தெரியவில்லை

 Vidhya Nivash: காற்றில் உயிர்நிலைப்போய்!

மண்ணில் உயிர்நிலைப்போய்!

நீரிலும் உயிர்நிலைப்போய்!


கடைசியில் இந்த உயிரை காக்கும் துயிர்நிலையை உடலில் சுமந்து நிலாவில் நடந்தால் என்ன பயன்!

Vidhya Nivash: பூமி காலி

நிலாவிற்கு இல்லை போகும் வழியில் எதாவது கிரகம் போவோம் வாங்க!

Vidhya Nivash: முறுக்கு ,சீடை,புளிச்சோறு போய்!

சப்பாத்தி,ரொட்டி,ஊறுக்காய் போய்!

பர்கர்,சாஸ்,சீவல்கள் போய்!

காற்று,நீர்,மண் மட்டுமே உண்ண கையில் தூக்கி செல்லும் காலமோ!


Akhila: இலவசம் கொடுத்த அவலம்!


நிலத்தடி நீரை ஆனமட்டும் உறிந்து காசாக்கிய ஜந்து இவன் தான் !

பூமிப் பந்து கொடுத்த பரிசு - இந்த அரிய வியாதி… 

பலரின் பழி சுமந்து, இன்று நீரை சுமந்து திரிகிறான்!

அந்தோ பரிதாபம் என எண்ணாதீர்- 

“இந்தா.. இவனைப் பார்! 

இயற்கையை மிதித்தவனுக்கு நேர்ந்த கதி.. “

எனக் காட்டுங்கள் இவனை உலகுக்கு!


Veena Shankar: பிராணத்தை காக்க வேண்டி புறப்பட்டது ஓர் உயிர், தாகம் தீர்க்கும் தண்ணீரோடும் சுவாசத்தை மீட்க பிராண வாயுவோடும்


Kiruthika : எல்லாம் ..

எனக்கு -

வேண்டும் வேண்டும் 

என-

சுரண்ட ...சுரண்ட..

கடைசியில்...

என்னை காக்க 

என்னால் மட்டும் முடியாதே ..!...

என -

தான் அழித்த

இயற்கையிடம் மன்றாடி -

கடைசியில்

செயற்கையிடம் 

கடன் வாங்கி ...

இருப்பு இருக்கும்வரை 

மட்டும் -

இருந்து விட்டு 

போகிறேன் என 

தலை குனியும் ..

அவலம் - தான் 

நாளை ..???!!!..


நினைக்கவே 

பதறுகிறது..!...

நேரும் போது -

எப்படி துடிக்குமோ 

இதயம் ?!...


ஜீரணிக்க -

பழரசம் கூட இல்லை ..

தாம் செய்த 

பாவம் தான் இருக்கும் -

அப்போது !..


அதுவும் 

ஜீரணிக்க இயலாது...

இதயத்திலும் கல்லா..?..

என வியக்குமோ ...

மருத்துவம் ..????!!!..

Thursday, May 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மனிதனின் சுயநலத்தால் மீனின் அவஸ்தைபட்டது

மிதக்க நீர் துறந்து

குடிக்க மட்டும் கொண்டது


இந்த கிரகவாசியால் வெளியேற்றப்பட்ட மீன், இன்னொரு கிரகத்தில் தஞ்சம்


வெயிலின் தகிப்பின் காரணமாய் நீரின்றி தவித்ததால் 

பூமியில் வாழ்வு தவிர்ப்பது நிச்சயமாகி போனது


பிராண வாயு போல நீரும் அடைக்கலமானது குப்பியில்


நான் கிணற்று தவளையாகவோ, குளத்து ஆமையாகவோ

கடல் நீரில் மீனாகவோ

இந்த வாரத்தலைப்பு பட்டம் by winmeengal

 


Ramalakshmi: நான் போகிறேன் மேலே மேலே

பூலோகம் என் வாலின் கீழே


Akhila: சிறுவன் செய்த குட்டி வானவில்‍

துறுதுறுவெனப் பறக்குது வானில்!


 Akhila: ஆயிரங்கள் செலவு செய்து, 

விமானத்தில் ஏறி வானில் பறக்கலாம்!

கட்டணம் மட்டுமே நம் உபயம்‍

கட்டுப்பாடு நம்மிடம் இல்லை!

ஆயினும், உயர உயரப் பறந்தாலும், 

சொற்பக் காசில் செய்த பலவண்ண

பட்டத்தில் - ‍மறுமுனை நம் கையில்!



Jaya : வானெங்கும் பல வண்ண (வர்ண) மகுடமாய் 

காற்றில் சிறகடித்து மேலும் கீழுயும் அசைந்தாடி

ப(பா)டமாய் 

சந்திர மண்டல வாசலை தொட்டு புதுப்பித்து

உயரத்தில் பறப்பது போல் 

நானும் பட்டமாக மாறிட

கொள்ளை ஆசை... அவா!!!!

உயர பறக்கட்டும் நம் நல்ல எண்ணங்களும் 

மனிதநேயமும்!!!!

கற்றுக்கொடுக்கும் ஆசனாய் நீ

கற்பிக்கும் மாணவனாய் நான்.............


 Veena Shankar: எதையும் எட்டி பிடிக்கும் பருவத்தில் 


வாட்டி வதைக்கும் சூரியன் மறையும் முன்னே


காகிதத்தில் ஒட்டி உருவம் கொடுத்து


அழகு தீட்டிய தாரகையாய் மாற்றி


நூலில் கட்டி விட்ட பட்டத்தை 


காற்றிற்கேற்ப ஆட்டி இயக்கும் போது


சுட்டி விரல்கள் அனைத்தும் அணைக்குமே!


வெட்டி கிழித்து விட பலர் நினைத்தாலும்


அதுவும் உருட்டி காட்டி மேலெழும்ப 


கரங்கள் தட்டியே வானை பிளக்குமே!


ஊட்டி விட்ட தாயும் ஜோடி சேர


வானில் ஈட்டியாய் வரும் நண்பனின் பட்டமும்


போட்டி இல்லா வெற்றியும் கை கொடுக்குமா?


அதற்கு வட்டியும் முதலுமாய் கிடைக்கும் மகிழ்ச்சியையும் 


பூட்டி வைக்க முடியுமா?


இதன் பால் கொள்ளும் குட்டி கதைகளும்


கெட்டியாய் நினைவில் பதித்து


நம்மிடம் கூட்டி வந்து சேர்க்குமே !


ரசித்து கேட்ட வெற்றிப் பாடல்களும் இசைக்குமே!


வெற்றி கொள்ளும் நேரத்தில் திட்டிய மனமும் வலிக்குமே! 


கொட்டி கொடுத்தாலும் கிடைக்காது இந்த தருணமே! 


வாழ்வில் படிக்கட்டும் பட்டமும் ஒன்றே


இரண்டும் மேலே மேலே சென்று 


எல்லையை ஒட்டி அமைத்து


வெற்றியும் நிலைநாட்ட காத்திருப்பதால்


 Jaya : வான்வெளியில் சீறி பாயும் பறக்கும் 

காகித ஏவுகனை...


Veena Shankar: ஆளில்லா காகித விமானம்

பட்டம் விடும் ஆளின் கையிலே இவன் பயணம்

காற்றோடு இவனுக்கு துணையாவது ஆகாயம்

கிழியாமல் கிடைத்தால் விடுத்தவனுக்கு வெகுமானம்


 Veena Shankar: மீன் போலே துள்ளி குதிப்பான் நீரில்லாமல் ஆகாய காற்றின் துணையோடு

 Veena Shankar: இதுவும் செயற்கைக் கோள் தானா?


கயிற்றை மெல்ல விடுக்க பறக்கும் பட்டம்


நொடிகள் கீழிறங்க மேலே செல்லும் எரிவாயுவை உமிழும் கோள்


விடுப்பவனின் ஆதிக்கம் இரண்டிலும் 

ஒன்று காற்றில் ஆட


மற்றொன்று வானியலை படிக்க


எல்லை எட்டும் வரை பதற்றம் பின் மகிழ்ச்சி


உயர பறந்தாலும் ஸ்திரமாய் நிற்பது அவை மட்டுமல்ல 

செலுத்தியவனின் அனுபவமும் தான் 


வானை தொடும் ஏணியோ? இல்லை வானில் அதிசயத்தை கூட்டும் முயற்சியா? 


இரண்டும் இயங்கும் அவன் கட்டுப்பாட்டில்


Vidhya Nivash: பட்டம் போல் தெரியவில்லையே!

யார் மௌனத்தையோ கலைக்க போகும் காதல் அம்பு போல் தெரிகிறதே!

 Vidhya Nivash: டேய் எங்கடா இருக்க மாஞ்சா போட எல்லாம் ரெடி..

தொட்டால் கையை கிழிக்கும் மாஞ்சா ரெடி..

இந்த வாட்டி அந்த புது மொட்டை மாடிகாரனோட பட்டத்தை ஒரு கை பார்த்துருவோம்!

எடு நம் சுறா குட்டிய சீறி பாய உடுவோம்!

 Vidhya Nivash: மாஞ்சா போட்ட சட்டி காயுது இங்கே!

சிறுக சிறுக சேர்த்த சில்லரை சிதற ஓடி போய் வாங்கிய பாய்கடை பட்டம் ஒருபக்கம் ஏங்க!

பள்ளியிலிருந்து வந்து தூக்கி போட்ட புத்தக மூட்டை ஒருபக்கம் சரிந்து வாயைப்பிளக்க!

காசுயில்லடா பட்டம் வாங்க? பரவில்லடா! விளக்கமாத்து குச்சியும்,பழைய காகிதமும் சேர்ந்து செய்த பட்டம் கிடக்க ஒருபக்கம்!

டேய் அந்த ஓட்டு மேல ஏறதடா என அம்மா குரல் ஓங்க!

படிக்கட்டும் இல்லை!

ஏணியும் இல்லை!

தாவி தாவி ஏறி ,ஓட்டில் விட்ட பட்டம்!

இடையில் பட்டம் பிடிக்க ஓடி உடைந்த ஓடு! 

பல முறை யார் வந்து கேட்டாலும் மீண்டும் சொன்ன கதை கேட்டு புதிதாக ஒவ்வொரு முறை உடையும் ஓடு!

நூலை கையில் பிடித்தா நானே ராஜா மந்திரி என வானில் ஆடிய ஆட்டம் எங்கே!

எளிதாக ஏற படிக்கட்டு இருக்கு!

பரந்து விரிந்த மொட்டை மாடி இருக்கு!

வண்ண வண்ண புதுமையான பட்டம் இருக்கு!

ஆனால் என்னை ஏன் இந்த ஆணியில் அடித்து அலங்கார பொருள் ஆக்கினீர்!

என்னை விடுவித்து வானில் பறக்க விடுங்க!

உங்களை இந்த அறையில் சிறைபிடித்த மாதிரி!

ஏன் எனக்கும் இந்த தண்டனை என கேட்கும் பட்டம்!

 Vidhya Nivash: அந்த வண்ண நினைவுகள்,வானத்தை அலங்கரித்த பட்டக்கூட்டங்கள் ,பறவைக்கு போட்டியாக பறந்த பட்ட சீசன் எங்கே போனது!

யாராவது சொல்லுங்க!

Tuesday, May 21, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


பொத்தி பொத்தி வளர்க்கிறோம் 

அடைக்காப்பதில்லை ஆனால் சரியான 

 அடைக்கலமும் கொடுப்பதில்லை!

கரு கணித்த நேரத்திலிருந்து பிறக்கும்

 வரை இருந்த பொறுமை வளர்ந்த பின்

 எங்கே போனது!

மனிதனை தவிர எந்த ஜீவராசியும் அதன்

 குழந்தைகளை  வளர்ப்பதில்லை !

 கெடுப்பதில்லை, பிறந்த மறுகணமே

 சுதந்திரமாக,தன்னிச்சையாக

 வளர,போராட ஆரம்பிக்க !

ஏன் இவர்கள் மட்டும் இப்படி!

ஒன்று அதிகபடியான அக்கறை 

இல்லையேல்

 நடுரோட்டில் ...

இணைந்த கைகள் இணைந்தே

 இருக்க நாங்களும் ஓர் காரணம்!

அதை ஏன் மறந்து எங்களையும்

 மறுக்கிறீர்கள்!


Monday, May 20, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 




விரல்கள் அமைத்த தொட்டிலில் அமைதியான உறக்கம் சிசுவிற்கு இங்கே


உறக்கத்தை தொலைத்த மனங்களும் பாசத்தில் இங்கே 


சிசுவின் உடல் பெருத்த போதும் சொல்லாமல் தானாய் விரிவடையும் கரங்கள் இங்கே


கரங்கள் விரிவானதால் விரிசல் கொள்ளுமோ உறவின் மனங்களும் இங்கே ?


எளிதாய் விலக்கி வைக்கும் உயிர் கொடுத்து வளர்ந்த உறவை சிசுவும் இங்கே


பின்னாளில் 

பற்றிய கரங்களை புறம் தள்ளாது காக்க வேண்டும் இந்த வளரும் சிசுவும் அங்கே!

படமும் கருத்தும் by Veena Shankar

  


கைகள் இணைந்த பின்

முகங்கள் பதிந்த பின் 

முத்தங்கள் பரிமாறிய பின்

வார்த்தையும் கொள்ளுமோ?

உடல்களும் அன்னியப்பட்டு விடுமோ?

உயிரும் விலகுமோ?

யாருக்கான உலகம் இது

நமக்கானது தான் என்று சொல்ல

துடிக்குது இதயங்கள்


 தேவைக்கு என்றும் விடையாவது வார்த்தைகள் மட்டுமல்ல, 

உடலும் தான் 


தேவையில்லா வார்த்தைகளை புறந்தள்ளிய இரு முகங்கள்

இல்லை இல்லை

இரு மனங்களும் 

கொள்ளை போனது

ஸ்பரிசம் என்ற உணர்வுக்கு


முகம் புதைக்க இடம் தேடிய மனங்கள்

பரிமாறிக் கொண்டது தம்முள்

இதமாய் , பதமாய்

கோர்வையானது கரங்கள் மட்டுமே

மனமும் இடம் மாறிய பின் தொடர்வது

வார்த்தைகள் அல்ல

ஒளிரும் சுடரும் கவ்வியது இருளை

மெய் தீண்டும் முன்

பிறப்பதும் அமைதியே !

Friday, May 17, 2024

நேரமில்லை by Vidhya Nivash

 


அழகிய நிலா இரண்டு !

வானில் ஒன்று உலா வர

கைக்கோர்த்து அருகில் ஒன்று உலா

 வருகிறது!

ஒன்று வெளிப்புறமாக நோட்டமிட

மற்றொன்று உட்புறமாக நோட்டமிடுகிறது!

இரண்டுமே பார்க்கத்தான் பால் போல வெகுளி கொஞ்சம் பிசிறினால்..

ஒன்று ஒளிந்துக்கொள்ளும்

ஒன்று திரிந்துவிடும் !

அந்த நிலாசாச்சியாக 

இந்த நிலா சொன்னதை மனதில் இறுத்த முடியாமல் தவிக்கும் பகலவன்!

அழகை ரசிக்க நேரமில்லை!

அவளுக்கோ  உணர்வை வெளிப்படுத்த நேரமில்லை!

அவனுக்கோ எதை ரசிப்பது என்று தெரிவில்லை!




படமும் கருத்தும் by Veena Shankar

 


காலையில் இணைந்த பூக்கள் இங்கே


மாலையில் மலரும் மலர்களோடு பூங்கா இந்த இணையை வரவேற்க


பல நினைவுகளின் பகிர்வுகளோடு இனிய இரவும் பிறக்க


பால் நிலவு வெளிச்சத்தில் சோறு உண்டு மகிழ்ந்த நாட்கள்

 கடந்து போய்  

வாலிபமும் கை கோர்த்து செல்லும் நாட்களும் வந்ததோ?


நிலவு வெளிச்சமும் அந்நியப்பட்டு விட்டால் 

களையப்படுவதும் யாது?


அச்சமா?

நாணமா?


இரு மனங்கள் மகிழ்ந்து பேசிய பின் உடலும் உள்ளமும் இணைய மறுக்குமா அங்கே?


இருண்ட இடத்தில் நிலவொளி போலே உணர்ந்தனர் மணமான காதலர் இவர்கள்


வாழ்வில் எல்லா கேள்விகளுக்கும் விடை காண முடியாது


சில புதிரானது

சில புனிதமானது

சில உணர்ப்பூர்வமானது

Thursday, May 16, 2024

நித்தம் படி by Vidhya Nivash

 


நித்தம் படி!

நிற்க இடமில்லாத பேருந்தில் நெற்றியில் வடியும் வியர்வையை விலக்கி பொறுமையை படி..

ஓடும் ஆற்றில் பாடும் காற்றில் இசை படி..

தாலாட்டு பாடும் குயிலிடம், பகலில் உறங்கும் ஆந்தையிடம் தூக்கம் படி..

அம்மியில் ஆட்டும் அத்தையிடம் பக்குவம் படி..

தொட்டியில் தூங்கும் பிள்ளையிடம் வெகுளிதனம் படி..

பள்ளி செல்லும் ஆசிரியரிடம் அனுபவம் படி..

தந்தையிடம் பொறுப்பை படி..

தாயிடம் அதிகாரத்தை படி..

உடன்பிறப்பிடம் விட்டுக்கொடுத்தல் படி..

நண்பரிடம் உதவியை படி..

உறவிடம் நிதானத்தை படி..

தாத்தா பாட்டியிடம் அன்பை படி..

கடைசியாக தினமும் ஒரு முறை உன்னை படி..மாற்றம் வரும்!




கவிதைகளா! by Vidhya Nivash


கவிதைகளா! கேள்விகனைகளா!

மாடுமேய்தல் கல்வி

மாடுமேய்தல் தவம்

மாடுமேய்தல் ஞானம்

- வைரமுத்து

அழகான ஆழமான கருத்துக்களின் குவியல்,கவிதையாக....


வைரமுத்து அவர்களின் புத்தக்கத்தை படித்ததின் தாக்கம் எதோ எழுத சொன்னது...

"இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல" எந்த பூக்கள் தான் விற்பனைக்கு செல்ல ஆசைப்படும்... 

முதலீட்டாளனின் கைகளில் அவற்றின் வாழ்வும் சாவும்..

அடிமனதில் மடிந்து கிடக்கும் நெருப்பை கிளறும் மண்வெட்டியாக அவன் வார்த்தைகள் படையெடுக்க..

அவளுடைய மௌனத்திற்கு அவனுடைய கோபம் இரையாகிக் கொண்டிருந்தது...

சவப்பெட்டிக்கு ஏன் ஜன்னல் இல்லை!

புதைத்த உடலை அரிக்கும் மண்ணும்,புழுவும் கவனத்தில் கொள்ளுங்க !

அதன் அடங்கா ஆசை உங்களை அரிக்க போகுது!

இமை மூடிய விழிகள் திறக்க எங்கும் மழை சாரல் விழ நடுசாமத்தில் கனவல்ல நிஜம் ஜன்னலில் வழிவந்த அழையா விருந்தாளி..

பசியின் மயக்கத்தில் அடுக்களையில் அன்னை தந்த விருந்து சுண்ட வைத்தது ஆனாலும் அமிர்தம்..

யாரது கதவை திறங்க நான் லட்சுமி வந்திருக்கேன் .தேவைக்கு வராத நீ! இப்போது உன் வருகை தேவையற்றது. 

செல் உனக்காக காத்திருப்பவர் இடம்..

மழைக்கு ஒதுங்கிய ஆடும் பாடியது அவன் இசை மழையில் நனைந்து..







படமும் கருத்தும் by Veena Shankar

 


 மனிதனை மனிதன் அந்நியப்படுத்திய அலைபேசி தன்னை தானே விலங்கிட்டு கொண்டது, தன் மீதான மனிதர்களின் பயன்பாட்டை ஜீரணிக்க முடியாமல்

காசு கொடுத்தால் மட்டுமே கிடைப்பான்

இந்த தோழன்

அன்பினால் விலங்கிட மாட்டான்

சில நேரம் இவன் தொல்லையால் நாமே

விலங்கிடுவோம் இவனை

ஒன்று இவனை முழுவதுமாக அணைத்து

இல்லை தற்காலிகமாக துண்டித்து

நாம் இடும் விலங்கில் அவன் இருந்தாலும்

விலங்கினை விடுவிப்பவரும் நாமே

 விலங்கினை உடைத்து கொண்டு வெளி வரும் விலங்கும் இவனே

இவன் சொல்வது மட்டுமே நமக்கு விளங்கும்

அழகாய் நேரில் விளக்கும் மனிதரை புறம் தள்ளி இவனிடம் சிக்கிக் கொண்ட மனித விலங்கும் நாமோ?

அவன் விலங்கை விலக்கி விடாமல் நமக்கான பாடத்தை

நம்மவரிடமே விளங்கிக் கொள்வோம்

மனதை பூட்டி வைக்க இயலாததால் அலைபேசி தோழனானது

அலைபேசியை பூட்ட இயன்றதால் மனம் திறந்தது

Tuesday, May 14, 2024

தலையாட்டி by Vidhya Nivash

 


தலையாட்டி இங்கும் அங்கும் ஆடும் யாரும் சீண்டாத வரை...

சீண்டிப்பார் உன் பக்கம் சாய்வது போல் தோன்றும்.

அமைதியாக கல் போல் நின்ற பொம்மை மனம்,ஆசை அலையடிக்க நிலையில்லாமல் ஆடுதிங்கே. 

யாரவது சொல்லுங்க எல்லாவற்றிக்கும் தலையாட்டி கொண்டே இருந்தால் தேவைக்கு பயன்படுத்தி பின்பு விட்டுச்செல்லும் உலகம்..

தலையாட்டி சொல்லும் பாடம் உனக்கு தேவைப்பட்டால், உனக்கு பிடித்தால் தலையாட்டு, பிறருக்காக தலையாட்டி, ஆட்டி கடைசியில் உனக்காக யாரும் தலையாட்ட மாட்டார்கள்!

படமும் கருத்தும் by Veena Shankar



  தலையை மட்டும் அசைத்து பழகவில்லை நாங்கள்

உடலையே அசைக்கிறோம் எங்கள் படைப்பாளியின் கைவண்ணத்தில்

இரவும் பகலும் கொண்ட நாளில் கறுப்பு வெள்ளையாய் உருவாகவில்லை

வண்ண வான வாழ்க்கைக்காக பரிசாகிறோம் உங்களுக்கு மன இருள் விலக்க

 தொட்டால் அசைவேன்

அசைந்தால் சாய்வேன்

சாய்ந்தாலும் வீழ மாட்டேன்

என்னில் படைத்தவனின் அறிவும் அறிவியலும் 

புகுந்ததால்

 வண்ணம் பல தீட்டினாலும் தெரியாத சோகம் என்னுள்ளே இசைக்கிறது 

அது என் தவறல்ல 

என்னை படைத்த 

கலைஞனின் சோக கீதம் அவன் கை வண்ணத்தில்  

உயிரற்ற நானும் தலையசைத்தேன்

உடலசைத்தேன் 

களிமண்ணும் கதை பேசியது சிறுவ சிறுமியரிடத்து

 சமதளத்தில் இருந்தால் சாய்மானம் வேண்டும் உலகில்

சற்றே வித்தியாசப்பட்டவர்கள் நாங்கள்

 இணை பிரியா தம்பதிகள் நாங்கள் படைத்தவன் மற்றும் கொண்டவணின் கரத்தினிலே

Monday, May 13, 2024

தனித்துவமான படைப்பு by Vidhya Nivash

 


தேர்வின் முடிவில் நேற்றைய தினம் பலரின் உழைப்பு,கனவுக்கு விடைக்கிடைத்த நாள்,பல பிள்ளைகளும் பெற்றோரும் இவ்வளவு தான் என உறங்கிய நாள்.

மதிப்பெண் வெறும் எண்.இதை பலரும் உணர்ந்தும், ஆனாலும் பலரின் எண்ண தாக்கம் நம்மையும் அசைக்க தான் செய்கிறது.

நேற்று கேட்டதில் சிந்திக்க தூண்டியது.பல பெற்றோரும் பதற்றத்துடன்,கண்டிப்புடன் இப்படி தான் இருக்க வேண்டும்.இதில் எது சரி! தவறு! என்ற குழப்பத்துடன் செய்வது அறியாமல் பேசியதை கேட்கும் போது,ஒன்றே ஒன்று தான் இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் தெளிவாக தான் உள்ளனர்.அவர்களுக்கு நன்கு தெரியும் எதை எப்படி கேட்க, செய்ய வேண்டும் என்று.நாம் செய்ய வேண்டியது அவர்களுக்கு செவி மடித்து,தேவைப்படும் நேரத்தில் தோளைத்தட்டி, தோழமையுடன் கண்டித்து வழிகாட்டினால் போதும்.

அதை விட்டு நாமும் மனநிம்மதியை தொலைத்து, ஒப்பிட்டு பார்த்து ,அனுதினமும் கத்துவதில் நம் ஆரோக்கியமும், நமக்கும் குழந்தைகளுக்கும் உள்ள இடைவெளியும் குறைகிறது.

இன்று கேட்டது நாற்பது வயதிற்கும் குறைவாக பலரும் பலவிதமான பக்கவாதத்தில் இறப்பது,இது போன்ற மனஅழுத்தாலோ, யாரும் எதையும் மாற்றமுடியாது.ஓடி ஓடி கடைசியில் எதை பிடித்தோம். 

சமூக ஊகடத்தின் தாக்கம் பலரையும் ஆட்டி படைக்கும் சூழ்நிலையில்,இன்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கொண்டு வந்த சட்டம் வரவேற்க தக்கது.சமூக ஊகடத்தை பதினான்கு வயதிற்கு கீழ் உள்ளவர் பயன்படுத்த கூடாது என.  

ஒவ்வொரு பிள்ளைகளும்,பிறப்பும் தனித்துவமானது தானே!

இரு மனம், திருமணம் by Veena Shankar

 


இரு வீட்டாரின் சம்மதம் இங்கே

இரு மனங்களின் சங்கமம் அறியாமல்

முகூர்த்த புடவையும் வேட்டியும் சொல்கிறது இணைவோம் என்று

நடுவில் மங்கலத் தாலியோடு 

கட்டும் மணமகனுக்கு உண்டு சுதந்திரம் கட்டிய பிறகும்

அதில் பெண்ணுக்கு மட்டுமே அங்கீகாரம் மாங்கல்யம் என்ற பெயரில்

சுதந்திரம் சூறையாடப்பட்டு அவள் விடுதலைக்காக ஏங்கும் தினங்களும் உண்டே!

பூவும் பொட்டும் பெண்ணின்

 அடையாளமாவதும்

 ஆணுக்கு ஏதும் மாறுதல் இல்லை இங்கே 

மணமேடை மாறுதலாய் அமைவதும் உண்டு

சில இடத்தில் கட்டாயம்

சில இடத்தில் நிதர்சனம்

சில இடத்தில் மறுப்பு

மணநாளின் இறுதி வரை கைமாறுவான் வெள்ளையப்பன் மணவீட்டாரிடையே 

இரு மனங்கள் இணைய ஆடம்பரம்

தேவையில்லை அன்பு மட்டுமே

நிலைக்கும் என்றும் தாம்பத்தியம் என்ற பெயரில் 

முதல் நாளிலேயே ஆரம்பம் ஆணின் ஸ்பரிசம் 

மெல்ல மெல்ல ஆதிக்கம் கொள்ளும் சொல்லிலும் செயலிலும்

வருடல்கள் கூட வேண்டும் எல்லையும் மீறாமல் 

உடலின் விருப்பம் அங்கே தீண்டலில் முடியுமோ?

இல்லை 

ஒருவரை ஒருவர் மனதால் தீண்டினால் மட்டுமே சாத்தியம்

புற அழகு காட்டும் பொறாமை கொள்ள

அக அழகு மட்டுமே உரைக்கும் பொறுமையுடன் வாழ்வை கடக்க 

சந்ததி உருவாக ஆதிக்கம் கூட போதும்

சாந்தம் உருவாக மனதில் உறுதி வேண்டும்

Sunday, May 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 ஏழையின் உணவு இன்று அங்கீகாரம் பெற்றது உணவுக்கூடத்தில்

ஆரோக்கியம் என்ற பெயரில் பணக்காரர் வீட்டிலும்

உன் நிலை ஏற்றம் பெற்றதால் ஏழை மாணவனும் வயிறார மகிழ்ச்சியில் உண்டான் பணக்காரர் வீட்டு உணவு தனக்கு

கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் கொள்ளாமல்

உணவே?

ஆக்கமும் நீயே!

நாவின் ஆவலால் உனை உண்ணும் போது அழிவும் நீயே

மானிட உடலுக்கு

 நிறத்தில் இல்லை நாம் கொள்ளும் உணவு

தேவையான அளவு

நித்திரை கொள்ள செய்தால் போதுமடி


உணவும் மருந்தே!

அதை சரி விகிதத்தில் உண்ணும் போது

மண் என்றும் மனிதனை கைவிடாது 

அது உழவானாலும் 

அவன் குடிக்கும் கூழானாலும்

Friday, May 10, 2024

படமும் கருத்தும் by Winmeengal

  


"Hey, flower! Thanks for the sweet nectar, but next time, can you make it sugar-free? 😬

- Divya 

Flower’s reply: nature gives sugar in right proportions- don’t worry dear🥰

-Akhiladevi 

தொப்புள் கொடி பந்தமா?

தோட்டத்தில் பிறந்த சொந்தமா?

ஒருவரை ஒருவர் ஈர்க்கும் காந்தமா?

மலர் கொண்ட அழகின் பாந்தமா?

தேனீ ரீங்காரத்தில் இசைத்த சந்தமா?

தேனை உறிஞ்சுவதில் சாந்தமா?

உண்ட பின் கொண்ட மாந்தமா?

காண்போருக்கு இல்லை காட்சி மந்தமாய்?


காதலின் தேசமாய் திகழும் தோட்டமும்

அதில் பூக்கும் பூக்களும்

நாடி வரும் தேனீக்களும் அழகு


காலத்தின் தேடல் ராட்டினமில்லாமல்


Calling all busy busy bees 🐝🐝


Luscious Lavender offers!🥳

Hurry up… few more drops left 😎


Last few sips… taste like heaven .. Come try it and feel the magic 🪄✨

என்னே சுவை… என்னே மணம்!!

-கிறக்கத்தில் தேனீ🐝


என்னே அழகு.. என்னே பொறுமை!!

-மயக்கத்தில் மலர் 🌸

வந்தாள்… வென்றாள் 

  - இந்த குட்டித் தேனீ🐝


மலர்ந்தாள்… மயங்கினாள்

  - அந்த மன்மதன் அம்பில் ராணி 🌺

-Akhiladevi 


அடிக்கிற வெயில்ல தேன் கூட உப்புக்கரிக்குது. 


அற்புதமான காட்சி அந்தரத்தில் தேன் பருக உடலின் எடையை தாங்கி காற்றில் மிதக்க மகரந்தத்தில் தேன் அருந்த இரு கைகள் பற்ற சிறுபிள்ளை போல் தேனீ

-Vidhya Nivash 

 

 உறிஞ்சி தான் பார்க்கிறேன் தேன் வரவில்லை, 

மொட்டில் உள்ள போதே ஊசி கொண்டு உறிஞ்சி விட்டானே மனிதன் என்ற நினைப்பில் இருந்த தேனீ 

முயற்சியை கைவிட்டபாடில்லை


"யார் அது? புதியவன்? "

- இது தோட்டத்தில் உள்ள பூ


"நான் தான் தேனீ" என்றது தேனீ


" இல்லை! இல்லை! நீ தேனீ இல்லை! இத்தனை காலமாய் என்னில் உள்ள தேனை உறிஞ்சும் அவன் மென்மையை நானறிவேன்" என்றது பூ


தேனீ எழுப்பும் சத்தத்தை போலவே அந்த பூச்சி எழுப்ப,


" தேனீயின் சப்தம் எனக்கு தெரியாதா? நீ யார்?" என கொஞ்சம் கடுமையாக கேட்ட பூவிற்கு மௌனம் பதிலாய் வந்தது .


மீண்டும் அந்த பூ, பூச்சி தன்னை நெருங்க கூடாது என்று நினைத்து தன் இதழ்களை மூடி கொள்ள, மிரண்டு செய்வதறியாது விழித்த பூச்சி தன் எஜமானனின் ஆணைக்காக காத்திருக்க, அதேவேளையில் எஜமானன், தேன் உறிஞ்சாத பூச்சியிடம் வர, பூவிதழ் மூடிய விசயம் அறிந்து பூவை விரித்து காட்டும் படி சொல்ல, பூ மறுத்து, தன்னை நுகர்வது யார் என கேட்க, வேறு வழியில்லாமல் மனித எஜமானன் உண்மையை சொன்னான்.


தேனீக்களை வளர்க்க தெரியாமல் , தேனீ போல ஓர் இயந்திர மனிதனை தயாரித்து தேன் உறிஞ்சும் வேலைக்கு அனுப்பியதாகவும் அதன் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டதால் தானே பார்க்க வந்ததாகவும் சொல்ல, அவன் பேச்சை கேட்டு மலைத்தது பூவும்.


அன்றிலிருந்து உண்மையான தேனீக்கு மட்டுமே தேனை உறிஞ்சும் அனுமதி என்றும் தேன் உறிஞ்சும் போது அழுத்தம் அதிகரித்தால் உடனே தங்கள் இதழ்களை இறுக்கமாக மூடி கொள்ள வேண்டும் என்று அந்த பூவும் தன் தோட்டப்பூக்களை பணித்தது 


அறிவியலின் விந்தையும் விந்தையாகிப் போனது இயற்கையின் முன்

-Veena Shankar 

உன்னை..

ரசிக்க வந்தேன் ...

உன் அழகில் கிறங்கி போனேன்...!...


உன் இதழ் விரித்து...

நீ படைத்த தேன் விருந்தில் ..

என்னையே நான் 

மறந்தேன் ..!..


திகட்ட திகட்ட 

உன் தேன் 

ருசித்ததில்...

திணறிப் போய்..

உன் மேல் கொண்டேன் 

நேசமும் !..


கலங்காதே ..!..

என்றாவது ஒரு நாள் 

உனது தேன்..

தீர்ந்து போனாலும்..

உன்னிடத்தில் 

வந்து தான் நிற்பேன்..

 உன் இதழ் வருட..

உன் இதயம் இனிக்க...!...


நம் காதல் - 

என்றும் ..

மறுக்காதே ...

மறக்காதே ...!...

💜💜💜

- Kiruthika 

Wednesday, May 8, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


 திருமண பந்தத்தின் காதல் பரிசு

- Ramalakshmi 


 வைரம் கிடைத்த வேளையிலும் 

தங்கமாய் பிள்ளைப்பேறுக்காக ஏங்குகிறது மனம் இங்கே

 இரு முனைகளின் இணைப்பிற்கு வைரம்  

இரு மனங்களின் இணைப்பிற்கு தங்கம் பிள்ளையாய்

காதலில் பிறந்து

நிச்சயதார்த்தத்தில் வளர்ந்து

திருமணத்தில் உருப்பெற்று

வளைக்காப்பில் சிறந்து 

பிள்ளைப்பேற்றில்

 முற்று பெற்றது 

இந்த வளையத்தின் பந்தம்

இனி தொடர்வது வளையம் அல்ல

அதனால் விளைந்த பந்தமே


-Veena Shankar 


 உங்கள் மனம் கசந்து,

மணமுறிவு செய்ய,

சந்தர்ப்பம் வந்தாலும், 

என்னைக் கழற்றி வீசுகையில்….

“நினைவு கொள்ளுங்கள்- நீங்கள்

தம்பதியர் மட்டுமல்ல-

தந்தை தாயும் கூட! “


 On a lighter note …


“அட என்னது… இந்த கனம் கனக்குது..

அப்பவே நினைச்சேன்- இது உள்நாட்டு சதினு…அதான் அம்மாவின் அடம்😎

யாராவது 

Americanஐ குப்பிடுங்களேன்!”


(Real வேண்டாம்…American diamond weight கம்மிபா… அதான் சொல்றேன்🤩)


-வலியல் குழந்தை!

-Akhiladevi

எங்களை இணைத்த முதல் முத்து நீ,

உன்னை தாங்க நாங்கள் இணைந்தோம், 

நீ மின்ன நாங்கள் இணைந்து நாமாக ஜொலிப்போம்

-Valarmathy

என்னில் உன்னை கலந்து எடுத்தேன்..

இருந்தாலும் என் கனவை உன் முதுகில் சுமத்தி எழ முடியாமல் முடிக்கிவிட்டேன்.

-Vidhya 

முதல் காதலி by Veena Shankar

 


நெஞ்சில் கை வைத்து என் மனதை தொட்ட இனியவளிடம்

நானும் சொன்னேன் என்

 முதல் காதலி நீயென்று

அழகாய் முறைத்தவளிடம் 

நான் சொன்னேன்

இல்லை நீ மூன்றாம் 

காதலி என்று

ஆமோத்திதவள் தன் முகபாவனை காட்டி 

யார் என்று கேட்டது

 எனக்கு புரிந்தது 

சொன்னேன் நானும்

முதல் காதலி 

என் தாயென்றும்

இரண்டாம் காதலி

அலைபேசி என்றும் 

எனில் எனக்கும் நீ

 மூன்றாம் காதலன்

என அவள் சொல்ல

யாரென்று தெரிந்து கொள்ள நான் எத்தனிக்க

அது என் பெற்றோர்,  

நான் தாயை தந்தையாகவும்

தந்தையை தாயாகவும் பார்த்ததால் நீ

மூன்றமாவன் என்றாள்

இச்சிந்தனை என்னுள் வாராதது ஏனோ?

பெண் எப்போதும் சிந்தனையில் வலுத்தவளோ?

அனைவரையும் கவர்பவளோ?

சிந்திக்க வைத்த அவள் 

என்றும் என் தாயினிடத்தில் 

என்றும் முதல் காதலியாய் பூப்பாள்.

படமும் கருத்தும்,இன்றைய சிந்தனை by Veena Shankar



  அழகாய் சிரிப்பது நிலவு மட்டுமல்ல அதில் காணும் யதார்த்த வடிவங்கள் தாம்

 இன்றைய சிந்தனை 


1) விதை பெரியதானாலும் சிறியதானாலும் அதில் பிறக்கும் தாவரம் தரும் பலன் என்றுமே தனித்துவமானது

2) மனைவியின் இழப்பால் கணவனுக்கு கிடைப்பது வெற்றிடம் கணவனின் இழப்பால் மனைவி தேடுவது புகழிடம்

3) சுவர் : மனிதனின் தனிமைக்காக உருவாக்கப்பட்டது தான் சுவர்

4) விடை தேடி அலையும் கேள்விகளுக்கு காரணம் ஒன்று இருக்கும் அவரவர் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாது என்பது இல்லை வாழ்வில், தெரியாது என்ற வார்த்தையை பிரயோகிக்காத வரை

5) உயர்வாக நீங்கள் இருப்பதை விட அடுத்தவருக்கு உதாரணமாக இருந்து காட்டுங்கள். அடுத்தவர் வாழ்வு சிறக்கட்டும்

6) பிறருக்காக என்று செய்யும் செயலில் நாம் நம்மை தொலைக்கிறோம் என்பதே உண்மை

7) உண்மையின் தத்துவத்தை சொல்ல பாடங்கள் கற்க வேண்டியதில்லை. சிறந்த கருத்தும் மொழியறிவும் போதும்

8) அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயானா லும் அதற்கு முதல் பசியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்கவும் சமாளிக்கவும்

9) துன்பத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள். அதை நினைத்து வருத்தபட்டாலும் அந்த துன்பம் உங்களை விட்டு விலகவும் காலம் எடுத்து கொள்ளும்

10) நியாயத்திற்காக வாதாட வேண்டும். அந்த வாதமும் நியாயமாக இருக்க வேண்டும்

11) மெய்யே மெய் இல்லை என்றான பின் மெய்யை மெய் கொண்டு போற்றுவதும் வேண்டுமோ?

12) கண்ணாடியும் அதில் தெரியும் பிம்பம் போன்றது நம் உணர்வும் முகமும். உணர்வு எப்படியோ அதையே பிரதிபலிக்கும் நம் முகம்.

13) பிறர் பார்வைக்கு எப்போதும் நாம் தவறாக தெரிந்தால், தவறு நம் மீது தான். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நாம் தவறாக தெரிந்தால் அவர்கள் பார்வையில் தான் தவறு.

14) அழகு : ரசனையும் ரசிப்பும் கொண்ட இடம்

15) இறந்த காலத்தில் நடந்தவையை நிகழ்காலத்தில் கடப்பதற்குள் எத்தனை வருத்தங்கள், வலிகள்? மறதி ஒன்றே வழி, எதிர்காலத்தை கடக்க.

16) இல்லம் , உறவுகளின் பிணைப்பு உணர்வுகளின் பிரதிபலிப்பு.

17) சங்கிலி போன்றது உறவு. உராய்வு கொள்ள கொள்ள தேயும் சங்கிலியும் உறவும்.

18) நீரில் மிதப்பது துளசியே என்றாலும், ஒருநாளுக்கு மேல் அது தண்ணீரில் இருந்தால் , துளசி அழுகி அந்த நீரின் சுவை மாறிவிடும். அது போலத்தான் உறவுகளும்

19) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்

20) நல்லவனாக இருக்கும் போது பெயரை உச்சரிக்க தவறும் மனித மனம், கெட்டவனாக மாறும் போது மட்டும் வாயை பூட்ட மறுப்பதேன்

21) வெற்றியும் தோல்வியும் சமமே. தோல்வி வாழ்வின் சுடரை ஏற்ற, வெற்றி வாழ்வின் சுடரை மெருகேற்ற

22) உழைப்பிற்கான வேர்வைதுளி அவரவருக்கு தரும் மகிழ்ச்சியான மழைத்துளி

23) பிறருக்கான அழுகையும் வலியும் அவர்கள் உணராத போது அவை என்றும் வீண்.

24) கடந்து விட்ட வாழ்வில் கரைந்து போன நிஜங்கள் என்றும் நினைவுகளே

25) காகிதங்கள் பெட்டகமாகவும் போது அதன் எழுத்துக்கள் பொக்கிஷங்களாகும் பின்னாளில்

26) நம் வலிகளுக்கு மருந்தாகும் அடுத்தவர் வலியை உணர்கையிலே

27) கண் கொண்டு பார்க்கும் காட்சி யாவும் அழகே! அதன் உண்மை மறந்தால் வாழ்வில் பின்னோட்டம்

28) திருப்தி அடையாத வாழ்வு மேன்மை அடைவதில்லை

29) பொறுத்து போகிறவர்களுக்கு சுமை அதிகம். பிறரை காயபடுத்துவோருக்கு மறதி அதிகம்

30) சுகவீனமான போது பக்கம் இருக்கும் ஒளடதம், சுகமான பின் எட்டி வைக்கப்படும்.

31) குளத்தில் எறிவது ஓர் கல்லேயானாலும் அதனின்று காணும் அதிர்வலைகளே கல் எறிந்தவர் கொள்ளும் வெற்றி

32) காலம் பின்னோக்கி சென்றால் நினைவுகளின் நிகழ்வுகள் இருக்கும். ஆனால் அதை உணர முடியுமே தவிர அனுபவிக்க முடியாது.

33) தேவையில்லாத இடத்தில் காய்ந்த சருகாய் இருப்பதை விட தேவையுள்ள இடத்தில் உரமாய் இருப்பது நலம்.

34) ஒன்றை இழந்த பின் அதனால் விளையும் நன்மையை கொடுத்தவரால் சுவீகரிக்க முடியாது

35) கண்ணீர், பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல ; ஆண்களுக்கு விதிவிலக்குமல்ல

36) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்

37) இருட்டில் சில மணித்துளிகள் இருந்தால் அதிலும் ஒரு வித வெளிச்சத்தை உணர முடியும். அதுபோல் தான் வாழ்க்கையும்

38) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்

39) எதுவும் சிறப்பே, பிறரை பார்த்து புன்முறுவல் பூப்பதும் பிறரை சிரிக்க வைத்து பார்ப்பதும்

40) கலைஞன் என்பவன் ஒவ்வொரு நாளும் புது மாணவனே! தான் வடிக்கும் கலையில்

41) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்

42) படித்த நல்லவை யாவும் நம் வழக்கமானால் வடுக்கள் இல்லை

43) உதிர்ந்த , காய்ந்த பூக்கள் கூட மெத்தையாகும் முள் படுக்கையை விட

44) நினைவுகள் அலாதியானது அதை நினைக்கும் தருணம் அமைதியானது

45) அம்மாவின் புடவை திரைச்சீலையானது என் வீட்டு வாசலில் அவளும் சிலையானால் என் மன கோட்டையில்

46) எந்த ஒரு நிகழ்வின் பயணமும் தொடரும் என்பதை அறியாத ஓர் புள்ளியே ஆரம்பம்

Tuesday, May 7, 2024

காலை மலர் by Veena Shankar

 


காலை மலர்


இன்று அதிகாலை என் கண்கள் மலர்ந்ததும் காதில் கேட்டது சுப்ரபாதம் அடுத்த வீட்டிலிருந்து. எதைப்பற்றியது என்று என் காதுகளை அந்த வீடு வரை நான் நீட்டிக்க, அதில் தோல்வியே மிஞ்சியது. 


 கடமைகள் முடிந்து தனித்திருக்கும் கணவன், மனைவி இருக்கும் வீட்டிலும் சண்டை வருமா? மனைவியின் சப்தம் விண்ணை பிளக்க, அடக்கி வாசித்தது கணவனின் குரல். அடக்கி வாசிப்பதால் கணவன் தான் தவறு செய்திருப்பார் என்று முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் பொதுவாகவே அவர் குரல் பூனையின் "மியாவ்" சப்தத்தை போன்றது. மனைவியின் சப்தமோ சிங்கத்தின் கர்ஜனை போலிருக்கும். எனக்கும் இந்த அனுபவம் அவரிடம் உண்டு என்பதால் இந்த விசயம் எனக்கு தெரியும். 

பேசும் போது ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். சிலநேரம் நானும் அவர் பேச்சை ரசித்ததும் உண்டு.


இப்படியே நேரம் கழிய, ஓசை அடங்கியது. மனைவியிடம் கணவன் ஒடுங்கியதால் வந்த விளைவு என்று நினைத்தவாறே, பால் வாங்குவதற்காக என் வீட்டு வாசலில் வந்து நான் நிற்கவும் கணவன் ஒரு பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போதும் அவரை மனைவி விட்டபாடில்லை. 

" போங்க! போங்க! எத்தனை நாள் தான் பொண்ணு, பையன் வீட்டுல இருப்பீங்க? என்று பார்க்கிறேன். மறுபடியும் இங்கு தானே வந்தாகனும்." என்று கூப்பாடு போட்டு கணவரை குழப்பியும் விட்டார்.


அங்கே நின்றுருந்த என்னை கூடப் பார்க்காமல் தலை குனிந்த படியே சென்னை பேருந்து பிடிக்க சென்றார் அம்மனைவியின் கணவன்.


நான் நிற்பதை பார்த்த மனைவி, எனக்கு விசயம் தெரிந்து விட்டதாக எண்ணி, சண்டைக்கான காரணத்தை என்னிடம் பகிர வந்தார். 

எல்லாம் சரிதான். ஊருக்கே தெரிந்த மனைவியின் சப்தம், எனக்கு மட்டுமே தெரிநதிருக்கிறது என்று மனைவி நினைக்க காரணம் என்ன? என்ற கேள்வி என்னுள் எழுந்தது உண்மை தான்.


இருந்தாலும் தன் வேதனையை என்னிடம் எப்போதும் கொட்டும் மனைவியை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

" பாரும்மா! போன வாரம் வாரம் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு போயிருக்கிறார். ஏன் சொல்லாமல் போனீர்கள்? " என்று தான் கேட்டேன். அதற்கு பதில் பேசவில்லை. 


" சரி , போனது போனீர்கள் உங்கள் அலைபேசியையாவது எடுத்துக் கொண்டு போனால் என்ன? நானாவது போன் செய்து நீங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வேன் தானே? என்று ஒரு கேள்வி தான் கேட்டேன். மறுபடியும் பையை தூக்கி கொண்டு கிளம்பிட்டார்." என்று சொல்ல, நான் பதில் பேச நினைத்தும் வாயடைத்து நின்றேன்.


கணவன் மனைவி சண்டைக்குள் நுழைவது அநாகரிகம், அது சந்தைக்கு வரும் வரை என்பதை நான் தெரிந்து வைத்திருந்ததால்.


நீங்கள் எப்படி?

Monday, May 6, 2024

இன்றைய நகைச்சுவை by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை 


கல்யாண வீட்டுக்காரர் ஒருவர், இரு நாட்கள் கழித்து தன் நண்பரிடம் அலைபேசியில், தன் வீட்டு திருமணத்தைப் பற்றி விசாரித்தார்.


"சார் ! நம்ம வீட்டு கல்யாணம் எப்படி இருந்தது?" 


"அதற்கென்ன! மிகவும் சிறப்பாக நடந்தது. சாப்பாடும் அருமை!"


என பதிலளித்தார் நண்பர் .


" ஓ! ரொம்ப நன்றி. உங்க மனைவி என்ன சொன்னார்?" என்று மீண்டும் அவர் விசாரிக்க,


" அவளும் கல்யாணம் சிறப்பு என்று சொன்னாள். அதுவுமில்லாமல் கடந்த ஒரு வாரமாக சென்ற விசேஷங்களில் கிடைத்த தேங்காய்களுள் உங்கள் தேங்காய் தான் பெரியதாக இருந்ததாகவும் சொன்னாள்"


என்று சொல்ல, விசாரித்தவர் பல்லை இளித்து அலைபேசியை வேகமாக துண்டித்தார்.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...