Thursday, April 10, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 கையளவு எட்டியது காணாது

ஏணியின் துணையோடு

பணம் கொண்டு மனம்

நிரப்பும் மனிதனின்

ஆசைக்கு 

தான் அளவேது


 மரத்தில் இப்படி பணம்

பூக்கும் என்றால்

அதுவும் மதிப்பிழந்து போகும்

நம்மூர் வேப்பிலை போலே

 மனதின் ஆசை விருட்சம் போலே

அதிலும் ஆவல் விருட்சம் பணமாய் மாற

 பிடித்ததை அடைய பிடிமானம் அவசியம்

பிடிமானம் தளராமல்

பிடிப்பவன் பிடிக்க, பிடிக்கும்

பொருளும் பொறுப்புள்ளதாய் இருக்க வேண்டும்

தன்னை பற்றுபவனை ஏமாற்றாமல்

 வேர்வை துளிகள் சிதற பற்றும் 

யாவும் வெற்றியே!

இலக்கு அடைந்த பின்னும்

எதிர்கால தேவைக்கு

பற்றியதை விலக்காமல் இருப்பதும் சிறப்பே!

- Veena 

பணம் காய்க்கும் மரமோ 

இது ஏன் ஏணியில் ஏறுபவருக்கு

 மட்டுமே கிட்டுமா..

மரத்தின் அடியில் நின்று

 வேண்டுவோருக்கு

 இயற்கையாக கிட்டாதோ..

பணம் என்ற மூன்று எழுத்து

 இந்த உலகை ஆள, எந்த

 கவலையும் இல்லாமல் அந்த

 மரத்திற்கு தண்ணீர் ஊற்றி

 பராமரிக்க ,அதன் பலனை

 அடைபவர் யாரோ...

மரத்தை யாரும் திருட முடியாத

 மாதிரி கயிறுகட்டி

 காவல்காப்பது  யாரோ!

- வித்யா



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...