Monday, April 7, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பூமியை குடைந்து கிடைத்த இயற்கையின் கொடை நீரும் மரமும்


 மரம் செழிக்க நீர் தேவை

நீர் கொடையாய் பெற மரம் தேவை

நிழலுக்கு குடையாய் மரம் தேவை

நீர் எடுக்க குடமும் தேவை


 நீரில்லா செடியும்

உணர்வில்லா உயிரும்

விரிசல் இல்லா உறவும்

செதுக்குதல் இல்லா சிலையும்

வலியை தாங்கிடவே 

புத்துணர்வுடன் பிறக்கும் மீண்டும்

- Veena 

என்னுடைய மடையில் முளைத்த

 குடை எனக்கே நீர் வார்க்கிறது!

மீண்டும் ஓர் பசுமைப்புரட்சிக்கு

தயாராகுங்கள்...

இயற்கையின் சுழற்சிக்கு எதிராக

 நீரை உறிஞ்சி, மழைநீரை

 சொட்டுநீர் பாசமாக மீண்டும்

 பூமிக்கு கொடுக்கும் நிலை!

ஒவ்வொரு கையிலும் முளைக்க

 காத்திருக்கும் விதைகள்

 பூமிக்கும் ஆசாமிக்கும் கிடைத்த

 கடவுச்சீட்டு ..

- வித்யா


 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...