Thursday, April 24, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



புத்தர் மரத்தின் இலையில் சுவாசமா இல்லை மரத்துக் கிளையில் தொங்குகிறாரா


 ஓர் மரத்தில் ஓர் கிளையில்

ஓர் இலையில் ஓர் காம்பில் மலரும்

ஓர் பூவாய்

அதில் வரும் ஓர் காயாய்

அதுவே பின் ஓர் கனியாய் உருமாருவது போலே

ஓர் தாயின் ஓர் கருவறையில் 

ஓர் கருவில் ஓர் உயிராய் ஜனித்து 

வளரும்

ஓர் சிசுவாய் 

ஓர் நாளில் பிறந்து

இப்புவியில் ஓர் மனிதனாய் வளர்ந்து

ஓர் துணையை கொண்டு

 மாறுவதில் தான்

எத்தனை இன்னல்கள்

வேண்டுவதே ஓர் வரமே! அந்த 

ஓர் உயிரும் மெய்யிலிருந்து 

இனிதாய் வெளியேறும் வரை

பல இன்னல்களும் ஓர் சுகமே!

- Veena 

தவத்தின் வலிமை பெரிசா?

மரத்தின் வலிமை பெரிசா?

இரண்டுக்கும் ஒற்றுமை

 பொறுமை!

மண்ணில் வேரூன்றி,

மனதில் வேரூன்றி..

சுற்றியுள்ள சூழ்நிலையை

 அடக்கி, 

சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப...

பஞ்சபூதத்தின் ஆட்சி,

ஐம்புலன்களின் வேட்கை..

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...