Wednesday, April 9, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 




எரித்து எரிந்து தான் கரியானாலும்

அதையே விரும்பும் தலைவன்

குடும்ப சூழலினால்


 தீக்குச்சியின் வேதியல் மாற்றத்தினால்

உண்டாகும் நெருப்பும்

மனிதன் வாழ்வியலில்

எதிர் நோக்கும் துன்பமும் ஒன்றோ

இரண்டையும் அணைக்க வழி

தெரிந்தும் தெரியாமலும்


எரியும் நெருப்பு கூட 

நீரினால் அணையும் 

ஆனால் எரிந்து கொண்டிருக்கும் மனதிற்கு

நீர் கூட அந்நியமே!


 அடுத்தவருக்கு தியாகம் செய்து 

சோர்ந்து போவான்

இருந்தாலும் பொறுமை கொள்வதால் அவன் 

தியாகமும் தொடர்கிறது அற்பமாய்

- Veena Shankar 

தீயாக எரியும் பலரின் கனவில் பிறரின் வாழ்க்கை வெளிச்சம் அடைகிறது..

தீக்குச்சி சிறியதே ஆனால் அதன் உதவியால் கிடைத்த பிரகாசம் பெரிசே!

தீக்குச்சி போல் மெல்லிய மனிதரால் ஏற்றப்பட்ட கல்வி என்னும் தீபம் எங்கும் பரவி வானை அலங்கரித்து, பூமியில் படர்ந்து பல ஆலமரமாக வேரூன்றி பல்லுயரிருக்கு விருந்தாக,குடையாக,விரிந்து கொண்டே போகிறதே!

சிலரின் தியாகம் பலரின் சாதனைக்கு படிக்கட்டுகள், ஏறிய ஒவ்வொருவரும் ஏணியாக பின்னால் வருபவருக்கு பாதையிட மறக்க வேண்டாம்.

- Vidhya 




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...