Wednesday, April 23, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 நாட்களும் திரும்புமா?


தாயின் கருவறையில் உள்ள போதே

கேட்ட தாயின் மொழி

உலகத்தின் மண்ணை தொடும் போது கேட்ட அழுகை

மகிழ்ச்சியில் உறவினர்களின் ஆரவாரம்

பிறந்ததும் சிறப்பாய் துயில தொட்டில் 

மழலையில் அனுபவித்த தாயின் மடி 

மணமுடித்த பின் அனைத்துக் கொள்ள துணையின் மார்பு

ஏதும் சொர்க்கமே அவ்வவ் பருவத்தில்

தாண்டி வந்ததை

மீண்டும் எதிர்ப்பார்த்து காக்கவும் இயலுமோ?


 தூளியில் துயில் கொள்ளும் அமைதியாய்

துள்ளி எழுந்த பின்

தூலியும் துயிலும் துறக்குமே!

- Veena 

பிஞ்சு விரல்கள் பஞ்சு போன்ற

 மென்மை,குழந்தையின்

 துயிலும், அமைதி வழிந்தோடும்

 வீடும்,மறுப்பக்கம் அன்னையின்

 போர்க்களம் இரண்டு கைகளில்

 பத்து வேலை செய்யும் நேரம்..

தாயின் கதகதப்பை தரும்

 தொட்டில் ,பல நேரம்

 உல்லாசமாக உறங்க,சில நேரம்

 துள்ளி விளையாட அவளின்

 வாசனை வீசும் வாசம்!

- வித்யா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...