வளர்ந்து தழைத்த மரத்தின் கீழே
தழைக்க காத்திருக்கும் குமரி
வரும் காதல் கொள்ளும் நெஞ்சுக்காக
மலர் வனத்தில் மலர
காத்திருக்கும் மலரும்
காதலனின் வருகைக்கா?
வெண்ணிலவும் வெட்கி மரங்களுக்கிடையே மறைய
மலரை ஆட்கொள்ள மன்மதன் வருவானா?
புன்னகைக்கும் மலர்களின் மேல் அமர்ந்த வண்டும் பறக்க ஆயத்தமாயின
மாயவன் மறவன் அவன் பதிவிற்காக
பகலென்றால் நிழல் தரும் மரங்களும்
இரவில் காதலர்களை மறைக்க காத்து இருந்தன
வெண்மதி சற்றே இடம் பெயர
வளர்மதியைக் காண
இளம்பரிதி
உள்ளக் களிப்போடு வர
தன் மதி மயங்கினாலும்
செல்லமாய் சிணுங்கி
அவனை விழிகளால் தன் வயப்படுத்த
காதலர்களின் உள்ளத் தீண்டலும்
மெய் தீண்டாலும்
சுகமாய்
அரங்கேற வேண்டி
தன்னை அசைத்து கொடுத்து
இசை பாடின தாவரக் கூட்டங்கள்
விழிகள் மூட மறந்தன
நிலவு தேய மறுத்தது
பூக்கள் உறங்க காத்தன
மரங்கள் இசைக்க தூண்டின
காற்று மெல்ல வீச தேகம் சிலிர்த்தது
பூக்கள் சிரிக்க மனம் குளிர்ந்தது
நிலவு வெளிச்சம் தாகம் கூட்டியது
விழிகள் மெல்ல அயர
உன் பார்வை ஒன்றே போதுமே
இவையெல்லாம் மறுபடியும் நிலை மாற
- Veena
நந்தவனமே அழகு, அதில் பூக்கும் ஒவ்வொரு மலரும் வெட்கும் அழகில் நங்கை !
வெண்ணிலவிற்கு கண் கூசும் அழகில், அவள் முகம் சிவக்க என்ன மாயம் செய்தான் அவள் காதலன்!
தாய்,தந்தை ஊட்டிய பால் சோற்றை தவிர ,அவன் காதல் தந்த அழகில் மேலும் மிளிரிய முகம்!
நிலவொளின் அழகில் கொட்டிக்கிடக்கும் மலர்கள் பாட,வண்டுகள் வந்து ரீங்காரமிட, காற்றில் அசையும் ஒவ்வொரு இலையும் மேளம் கொட்ட,அவள் மாலை பொழுதில் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிக் கொண்டிருந்தாள்!
Vidhya

No comments:
Post a Comment