மௌனம் ஏனோ?
தனிமை வாட்டியதாலா?
கலக்கம் ஏனோ?
எதுவும் கை நழுவி போவதாலா?
சுணக்கம் ஏனோ?
மனதில் சுகவீனம் என்பதாலா?
பலவீனம் ஏனோ?
தோள் கொடுக்க யாருமில்லாததாலா?
இருளும் ஏனோ?
மனம் மங்கியதாலா?
தவிப்பும் ஏனோ?
பாதை உணராததாலா?
திகைப்பும் ஏனோ?
திறமை மடிந்ததாலா?
எதுவும் கேள்வியே இங்கே
அன்றி விடை தேடி
அலையும் மனிதருக்கு
முற்றுப்புள்ளி என்பதில்லை இங்கே
- Veena
உன் ஒளியில் என் நிழலை விழுங்கினாய்..
சுட்டெரிக்கும் உன் ஒளியில் சங்கமமாக கொஞ்சம் இடம் கொடு தஞ்சமடைய தவிக்கும் காதலன்..
வா உனக்கான பாதையை வஞ்சமில்லாமல் விட்டு, உன் வருகைக்கு காத்திருக்கும் அன்பாளன்..
- Vidhya

No comments:
Post a Comment