Wednesday, April 2, 2025

படமும் கருத்தும் by Winmeengal

 


Vidhya Nivash:

 அவளே அவளுக்கு பூட்டிக்கொண்ட விலங்கு ஒன்று அதை அவளை தவிர வேறு யாரும் தகர்க்க முடியாது..


மற்றொன்று யார் தகர்க்க நினைத்தாலும் அவளை தவிர வேறுயாரும் நெருங்க முடியாது!


Akhila :

பரதம்: 

அழகை, கலையை - வீட்டுக்குள் பூட்டி வைத்த தந்திரம் !

சலங்கையே விலங்காக;

அறிவை, சீந்தனையை - நட்டுவாங்கத்தில் கட்டி வைத்து;

அவளை மேடைப் பார்வையில் சத்தத்துடன் வைத்து ரசித்த அவலம்- 

அக்காலப் பெண்களுக்கு!! 


மெட்டி:

பெண்களுக்கென கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று-

சலங்கைபின் தங்கை;

என்றும் விலங்கு- சத்தமின்றி!!

 Veena Shankar: 

கலையின் வெளிப்பாட்டிற்காக ஒன்று அழகாய்

களையிழந்த வண்ணத்தில் மற்றொன்று அழுக்காய்

இரண்டும் பூட்டப்பட்டவையே

ஒன்று பிறரால்

மற்றொன்று தனக்காக

பூட்டிகொள்வதில் ஆனந்தம் உண்டு 

என்றால் அது சிறப்பே

பிறரின் தேவைக்கு நாம் நம்மை நாமே

விலங்கிட்டு கொள்வதன் காரணமென்ன?

விலங்கும் விலங்கினால் என்றால் அங்கே

நமக்கு விளங்க வைக்க

விளக்கம் தேவையில்லை

அழகான எதன் பின்னும்

ஆபத்து உண்டு

கலைக்காக பிறந்தது

கவலையாய் மாறாமல் இருப்பது

சிறப்பே!

பிறர் ஆளுமைக்காக

பூட்டப்படும் விலங்கும்

தேயும் பூட்டப்பட்டவனின் தொடர் முயற்சியால்  

இருளில் அடைப்பட்ட எதற்குள்ளும் ஓர் வெளிச்சம் பிறக்கும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...