Monday, April 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஏந்தும் கரங்களில் 

நிறையா நீரும்

நம்மை ஏங்க வைத்து எதிர்ப்பார்க்க வைப்பான்


அண்டம் சூழ அவன் இருந்தாலும் தன் தேவை நோக்கவே

ஆவலாய் இருப்பான்


கரையும் யாவையையும் கரைப்பான்

நம்மில் மட்டுமே கரை சேர மறுப்பான் 


அவன் திறவுகோலும் நம்மிடமே !


முகில் உதிர்க்கும் யாவையும் அணைத்து ஓரிடம் சேர்த்தால் முழுமை கொள்ள கூடுமே!


நிலைகள் பல கொண்டாலும் அவன் பயன் என்றும் சங்கமமே!


வயிற்றுக்கு சோறும் தாகத்திற்கு நீரும்

தேடுவது நம் உடலே!


நீந்துபவனை அடக்கி ஆளும் மனம் நம்மிடம் 

இல்லையென்றால்

அவனும் நம் வசமே!


என்றும் அவன் வாழ்வதும் வீழ்வதும் நம்மிடமே!


அதற்கு தேவை நம்மிடம் சிக்கனமே!

-Veena 

ஒவ்வொரு துளியிலும் ஒளிந்திருக்கும் உலகு கண்ணாடி போல் மிளிருது..

 துளி துளியாய் பெருகும் நீரில் உருவெடுக்கும் புது உலகு..

சிறு துளி, புது மழை ,புது எண்ணம் ,சிறு சேமிப்பு ,புது வழி, புதியதோர் உலகு ஒவ்வொரு கையிலும் தவிழ காத்திருக்கு..

 கோடைக்கு ஏத்த குளுகுளு பந்து எடுக்க எடுக்க குளிர்ச்சி,மகிழ்ச்சி.

- வித்யா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...