Sunday, April 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 வாழ்வில் எண்கள் 


வாழ்வை இயல் எண்களாய் தொடங்கி


காதலில் பிரிக்க முடியாத பகா எண்களாய் விளங்கி


அங்கே எதிர்நோக்கும் இன்னல்களை பகு எண்களாய் பிரித்து


நம் வாழ்வின் இறுதியில் முழு எண்களாய் மாறி பெருமை கொள்வோம்

 வாழ்க்கை பயணிக்க தேடும் செல்வம் 

பயணம் முடிந்த பின்னும் தேவைப்படும்

பலவித சடங்கிற்காக

அதைக் காண உயிர்

இல்லையென்றாலும்

ஆன்மா தேடுவதாய் சொல்லும் 

பல உயிருள்ள ஆன்மாக்கள்

 வாழ்க்கை சக்கரம் ஓட 

காலில் சக்கரம் கொள்ள வேண்டும்

கை நிறைய பணம் சேர்க்க

கரங்கள் நிறைய துணி வேண்டும்

என்றே நினைப்பார் 

தையல்காரார்

 வாழ்வின் துணையும்

வாழ்க்கை துணையும்

அமைவது சிறப்பே

வாழ்க்கை சக்கரம்

இனிதாய் சுழல

 நாள்தோறும் சுறுசுறுப்பான இளைஞன் 


ஆடைகளை தைக்கும் கலைஞன் 


புதிதாய் உருவாக்குவதில் கவிஞன்


தவறுகளை திருத்தி அமைக்கும் அறிஞன் 


இயந்திரத்தையும் கையாளத் தெரிந்த பொறிஞன்


தன் வலையில் பிறரை சிக்க வைப்பதில் வலைஞன்

- Veena 

மெல்ல மிதிக்க ஓடும் சக்கரம்

 வாழ்க்கையும் சேர்ந்து நகருதே

 இருவரின் கூட்டு முயற்சியில்

 வறுமையை மிதிக்க,

 வெறுமையை வெல்ல,

 சிக்கனமும், கடின உழைப்பும்

 தந்த பரிசு சுவரில் தொங்கும்

 புகைப்படம் சொன்னாலும் சாகும்

 வரை நில்லாமல் ஓடும் கூட்டணி, 

இது யாரும் தடுக்க முடியாத 

இனிமை, வாழ்க்கை ரகசியம்!

உழைப்பு!

- வித்யா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...