Tuesday, April 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஒற்றைக்கால் நடனம் இங்கே துணையோடு

கலையும் களைந்த பின்

சாதாரணமானவர்களே இவர்கள்

மனதார பாராட்டும் நெஞ்சம் கூட

கரம் சுருக்கி கொடுக்கும் தட்சணை 

இவர்கள் வாழ்விற்கு ஓர் துளியே

அரிதாரம் போட கூட

இது காணாத போது

வயிற்றுக்கு இங்கே கிட்டுமோ?

வாழ்ந்த கலைகள் பல மங்கி இங்கே

அவர் தம் வாழ்வை

மங்க வைத்தன

கிடைக்கும் சிறு பொருளையும் ஈட்டவே இங்கே

தெருவோர வித்தை


வித்தை தெரிந்து பயன் என்ன?

அரசியலில் வித்தை செய்யும் மனிதர்களிடத்தே 

இதுவும் சொல்லுமோ?

மனிதனை மதிக்க தெரிந்தால் மட்டுமே

வாழும் கலையும் மனிதமும்

- Veena 

பொம்மைகள் ஒவ்வொரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு அது வீட்டை அலங்கரிக்க மட்டுமல்ல வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டை மௌனமாக வெளிப்படுத்த..

சிலையாக நின்றாலும்,அதன் ஆட்டம் நிற்பதில்லை,அவை சொல்லும் கதைகளும் நிற்பதில்லை,காலம்காலமாக தொடரும் அரங்கேற்றம்...

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...