நீதியும் தளர்ந்தது பொருள் உள்ளோரிடம்
நீதி தேவதையிடம் வரும் வழக்குகள் யாவும்
அவளை மாற்றிவிட்டன அவளையும் விலைக்கு வாங்கி விட்டனர்
நிரபராதி ஒருவன் வாழ்வில் ஏமாற்றம்
நீதி கண் விழிக்க வேண்டிய நேரத்தில்
நீதி தேவதை கண் விழித்தாள்
பார்வை மாறியது
நீதி மறைந்தது
வழக்காட யாருமில்லாததாலும்
கையில் பணமில்லாததாலும்
நிரபராதி அவனே குற்றவாளியானான்
யாருக்கும் இல்லா பொறுப்பு இங்கே
உண்மையை உணர்ந்து சொல்ல
நீதி தேவதையின்
சொல்லும் தேவை தான் இங்கே
கறுப்பு புள்ளிகளின் முகம் காட்ட
ஓர் விழி திறந்தாலும்
பாரபட்சம் காட்டும் மனமும்
விதியின் வழியில் நீதியும் பூக்குமே
- Veena
நீதி தேவதைக்கே சவாலா!
எவ்வளவு நேரம் கண்ணைக் கட்டி
இருப்பது.
- Vidhya

No comments:
Post a Comment