பாதை இரண்டானது
இதயம் இரண்டு பட்டதாலே
மன விரசல் பல ஆகும் முன்னே
அடைப்பதும் எளிதே
சமாதானம் எனும் மருந்தாலே
மருந்தும் கசக்கும் சில நேரமுமே
எதுவும் குணமாகும் அதனாலே
வழிகள் பல உண்டு வலி தோன்ற
அதை ஆற்றும் வழிகளிலும் பல உண்டே
மருந்தும் காயத்தின் தன்மை பொறுத்தே
பிணக்கு கொண்ட மனமும் மணக்கும்
அன்பு எனும் அறிவாலே
நன்மை தீமை பிறர் தர வாரா
கையடக்க இதயம் பேணுவதும் சிறப்பே
இணை கோடுகள் அல்ல வாழ்க்கை
நம்மை நம்முள் இணைத்துக் கொண்டு வாழ்வதே
பாதைகள் இரண்டாக பிரிந்தாலும்
பயணத்தின் இடையில் முள் வரின்
கை கோர்த்து இணைவதே வசந்தம்
எவன் சுமக்கிறானோ அவனே முன்னோக்கி செல்வான் உடலால்
கணவன் அவன் ஒருவனின் கனவின் உச்சகட்டம் இதுவே
வீடு, மனைவி, மக்கள்
தேடிய செல்வங்கள் கிடைப்பதைக் காட்டிலும் அதை தாங்குவதிலும் காப்பதிலுமே அழற்சி மற்றும் மகிழ்ச்சி
- Veena
இரண்டு முட்களும் தனியாக
சுற்றினாலும்,இரண்டின்
பாதையும் மற்றொன்றை
சார்ந்ததே,ஒன்று நின்றால் அது
மற்றொன்றையும் பாதிக்கும்
அதை சார்ந்த அனைத்தையும்
துண்டிக்கும்,இரண்டும் சேர்ந்தே
இருக்க வேண்டிய
அவசியமில்லை,தேவையான
நேரத்தில் அவை இணையும்,
அதற்காக ஒரு மணி நேரம்
காத்திருக்கு,காத்திருப்பு
பிரிவின் வலியை
உணர்த்தும்,அது மீண்டும் சேரும்
அர்த்தம் இருந்தால்...
- வித்யா

No comments:
Post a Comment