Sunday, April 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 பிரிவு என்பது இடைக்காலமே

எதிர்காலத்தில் இது

தொடராமல் இருக்க

நிகழ்காலத்தில் எடுக்கும் முடிவு

சிறப்பாய் அமைய வேண்டும் 

இறந்தகாலத்தின் கசப்பான நினைவுகளை

மறந்து விட வேண்டும்


 நிம்மதி என்பது பிரிவில் பிறப்பதல்ல 

அவரவர் மனதால் வருவது

எதிர்ப்பார்ப்பை சுருக்கினால் 

எதிர்காலம் என்றும் சிறப்பே

- Veena 

துருவங்கள் மாறலாம்

இடைவெளியும் நீளலாம் 

எதிரெதிர் துருவத்திற்கே ஈர்ப்பு

 அதிகம்..எதிலும் சிறு

 இடைவெளி தேவை

 இல்லையேல் அது

 அலுத்துவிடும்.

பிரிவு அவசியம்,அது தேவையை

 உணர,உணர்த்த!

எதிர்ப்பார்ப்பு விலகாமல்

 புரிதலை புரிய வைக்க முடியாது! 

அன்பு இருக்கும் இடத்தில்

பொய் கோபம் நிலைக்காது..

பொய்யாக  இரு மெய் சேர

 முடியுமா?

அதுவும் நிலைக்காது...

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...