Tuesday, April 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

  


ஊர்தியின் மேல் ஊர்தி 

யாரும் எப்போதும் உதவி செய்வர் 

அடுத்தவர் நிலை இழக்கும் போது


 எளியவர் வலியவர் எவரும் இல்லை

ஓவியனின் எண்ணத்தில்

அவன் தூரிகையே வலியது என்பதால்


 தாங்கும் பொருள் எது என்பது ஒரு பொருட்டல்ல

தாங்கும் சக்தியும் மனதுமே பெரியது


 வஞ்சம் இல்லா நெஞ்சம் 

தஞ்சம் கொள்ள அன்பு மனம் போதும்

அஞ்சுதல் இல்லை ஆங்கே

கெஞ்சுதல் விரும்பா இடத்தில்

- Veena 

குரங்கில் கண்டேன் 

கங்காருவில் கண்டேன்

மனிதனிலும் கண்டேன்,

வியந்தேன்!

அவை நடைபழகும் வரை மட்டுமே

 சுமக்கும்,ஆனால் பிள்ளைகளின்

கனவை சுமக்கும் மனிதன்,சாகும்

 வரை இறக்கி வைக்க

 மறப்பதில்லை!

ஆனால் அவர்கள்

 சுமைதாங்கியை மறந்து

 விடுகின்றனர்!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...