Sunday, April 13, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


குறைகள் உண்டு என்னிடம்

என்றும் நிறை காணும் பொறுப்பு உன்னிடம்

அழகு இல்லை என்னிடம்

இருந்தாலும் வேண்டும் ரசிக்கும் திறமை உன்னிடம்

பகுத்தறிவு சொற்பமே என்னிடம்

பட்டை தீட்டி சிறப்பாக்கும் செயல் உன்னிடம்

பாராட்ட ஏதும் இல்லை என்னிடம் 

கவிதை பாட வார்த்தைகள் பல உன்னிடம்

முடிவு தெரியா கேள்விகள் என்னிடம்

எப்போதும் விடை காணும் கூர்மை உன்னிடம்

தவிப்பிற்கு காரணம் என்னிடம்

தடையை விரட்டும் குணம் உன்னிடம்

குற்றங்கள் என்றும் என்னிடம்

அதை சமப்படுத்தும் சரித்திரம் உன்னிடம்

என்னிடம் நீ கொண்ட அறிவால் 

எதிர்ப்பார்ப்பு என்பதே இல்லை உன்னிடம்

- Veena 

ஒரு கேள்வி எழுப்ப பல கேள்விகள் உன்னை ஈட்டிப் போல் குத்தும்..

கேட்கும் முன் பல முறை யோசி!

யோசிக்காமல் பேசினால் உன்னை யோசிக்க விடாமல் பதில் கேட்டு பொம்மையாக வேடிக்கை காட்டும் உலகம்!

கடமையை கண்ணியமாக செய்கிறேன், பெரிய குறை ஒன்றும் இல்லை,நிறைவாக வாழ்கிறேன் என்று இருந்துவிடு.தப்பி தவறிக்கூட பிறரின் அக்கறையில் கேள்வி கேள்,ஒரு வார்த்தை கேள்,உன்னுடைய நிலையே தடுமாறும்!உன் விரலே உன்னை நோக்கி திரும்பும்!

கேள்வி கேட்கும் இடம் பிறரை சிந்திக்க வைக்கும் ஆனால் அதற்கு உன்னை முதலில் தயாராக்கிக்கொள்..இல்லையேல் ஊமையாக்கப்படுவாய்!

மௌனமாய்,செய்வதில் நிறைவுடன்,எந்த நிலைக்கும் உன்னை பக்குவப்படுத்தும் பலரின் கேள்விகள்!

பிறரை காயப்படுத்தாத கேள்விகள் உன்னையும் திரும்பி தாக்காது..

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...