Monday, December 30, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 வயலும் வாழ்வும் ஒன்றியது

இங்கே

பசியும் விளைச்சலும் கொண்டது இங்கே

பசுமையும் வலியும் பிறந்தது இங்கே

காதலும் மோதலும் வருவது இங்கே

குடியும் குடித்தனமும் வளர்ந்தது இங்கே

மனமும் மணமும் கூட்டியது இங்கே

நிம்மதியும் வறுமையும் 

வாழ்ந்தது இங்கே

வருவதும் போவதும் தெரிவது இங்கே

கள்ளமும் கபடும் நேர்மாறனது இங்கே

நீரும் நிலமும் 

பூசிக்கப்படுவது இங்கே

குணமும் சிறப்பும் தொடர்வது இங்கே

தெய்வமும் பெண்ணும் போற்றப்படுவது இங்கே

புலமையும் செயலும் காண்பது இங்கே

உழைப்பும் மனிதமும் சேர்வது இங்கே

காலமும் நேரமும் கரைவது இங்கே

பாதையும் கடனும் நீள்வது இங்கே 

இறுமாப்பும் இளமையும் சங்கமிப்பது இங்கே

வருமானமும் அதிகாரமும் ஆட்கொள்வது இங்கே

வசதியும் வாய்ப்பும் உள்ளது இங்கே


இதை விடுத்து

எதை நோக்கி. ஓடுகிறோம் நாம்?

விளங்க வேண்டியது விளங்காமலும் 

விலகி நிற்பது கூட 

அறியாமலும் 

தேய்வில்லாத வாழ்வும் ஏனோ?

தெரிந்த தெளிந்து

தெறித்து விடு உன் ஆற்றலை இன்றே!

விவசாய பூமியில் 

உன்னை தாங்கும் அன்னையிடத்து

Sunday, December 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பொம்மையாய் இருந்தாலும் தங்கள்

தேவைக்காக தலையை அசைக்க வைக்கும் உலகம்

 

தலையசைக்கவும் கூடுமோ

தலையாட்டி பொம்மை போலே 

செய்வது அறியாமலும் 

காரணம் தெரியாமலும்

யாதென்பது புரியாமலும்

யாருக்கேன தோன்றாமலும்

பயன் யாதென விளங்காமலும் 

தலைய அசைப்பதால்

நல்லவர்கள் நாம் இப்புவி மக்களுக்கு

களிமண் பொம்மை கூட 

கல்யாண வீட்டை

அலங்கரிக்க 

கல்யாணத்தை அலங்கரிக்கும் மணமகனும் களிமண் பொம்மை

போலே இருப்பது ஏன்?

வானம் தொட ஒற்றை காதல்

பார்வையும் வார்த்தையும்

இருக்கும் போது

அவனை பொம்மையைப் போலே மாற்றும்

தந்திரம் என்ன?

அதன் பயன் என்ன?

Saturday, December 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


இது தலைமுறை இடைவெளி அல்ல

பாசத்தின் போராட்டம்


 வார்த்தைகள் இல்லா மொழி இல்லை 

அன்பு காட்டா உறவு இல்லை

நேசம் கொள்ளா நட்பு இல்லை

ஆனால் பொக்கை வாய் 

சிரிப்பிற்கு 

இந்த பந்தம் போதுமே


 வெள்ளை மனதை திறந்து காட்ட தேவையில்லை

இந்த வாய் மூடிய

புன்னகை மட்டும் போதுமே இங்கே ஓராயிரம் உறவு 

என்னும் தூண்களை தாங்க


 இயலாமையால் இரண்டும் காத்துக் கிடக்கின்றன

இயன்றவரின் உயர்ந்த உள்ளத்திற்காக!

அகதிகளாய் வந்தாலும்

வெகுமதி கொடுத்து

ஊக்குவிக்கின்ற உள்ளம் உண்டு தானே?

நடை பயிலும் குழந்தைக்காக 

நடை தளர்ந்த முதியவளின் 

அன்புப் பரிசு அவள் தரும் பாசமே!

என்றும் எதிலும் முதலாய் வர

இலக்கை நிர்ணயம் செய்வது யாரோ?

முடிவாய் வந்தாலும் முயன்றதற்கு ஊக்கம்

கொடுத்து அரவணைப்பவளும் அவளே! 

அன்னையே!

அன்பே!

அரிதாரம் இல்லா மனமே!

அகந்தை காட்டா அகமே!

சொல்வது எளிது

தொடர்வது கடினம்

உண்மை எளிது

நடிப்பது கடினம்


பாசத்தின் ஊடே

எவரும் நுழைவது கடினம்

அதை உணர்வதும் கடினம்

Thursday, December 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


அலங்கார உடையில் பவனி 

அதுவே அவனின் பாணி 


பசியால் சுருங்கிய வயிறு

சினத்தை அடக்கவே மூக்காணாங்கயிறு 


ஜல்லிக்கட்டு காணும் வம்சம்

கும்பிடுகையில் தெய்வ அம்சம்


கொண்டவன் கையில் தஞ்சம்

நளின நடையும் கொஞ்சும்


கேட்டுப் பெறும் யாசகம்

உழைத்து வாழ் என்பதே வாசகம்


பின்னவன் சலங்கையொலி இயங்கும்

அறிந்தும் அறியாமலும் கண் மயங்கும்


புற அழகு கூட்டும் வளமை

உண்மை சொல்லும் அவன் மன வலிமை


கணிக்கும் யாவும் பொய்யே!

சிலநேரம்

எதையும் உணர்வது மெய்யே!


 அழகான வாழ்வுக்காக அவசியான நடிப்பு

Monday, December 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


நன்றியுள்ளவர்களை மட்டுமே

சிறைப்படுத்த முடியும்

பாசத்தால்

நேசத்தால்

அன்பால்

திறமையால்

கொள்கையால் 

பொருளால்

அருளால்

ஆனால் எவற்றிலும்

சிக்காமல் விலகி விடுவது சிறப்பு


மதி குறைந்தவனின் தவறான கணிப்பு

எதற்கு விலங்கிடப்பட்டோம்

என்று அறியாமல்

 அறியாமை ஆட்கொள்ள அறிந்த பின் பலனில்லை

பலவும் கடந்து போயிருக்கும்

[21/12, 16:01] Veena Shankar: வாயிற் காப்பான் அங்கே இரும்பு சங்கிலியில் 

இல்லம் காப்பான் இங்கே

தாம்புக் கயிற்றில்

Sunday, December 22, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


சூதாட்டத்தில் வெல்லவும் மதி வேண்டுமே

அதே மதியும் கேட்கும் மீண்டும் விளையாடச் சொல்லி

மதியின் காலம் தொடர்ந்தால் மட்டுமே வெற்றி

இல்லையேல் விதியின் விளையாட்டு

தொடங்கி விடும்

விளையாட்டில் மேலும் போகலாம் கீழும் இறங்கலாம்

இறங்கிய பின் ஏற்றம் கொள்வது கடினம்

உழைப்பும் கடின முயற்சியும் இருந்தால் மட்டுமே

மீண்டு வரலாம்

மீண்டு வந்த பின்னே திரும்ப வீழ்வதும் அரிதே

வீழ்ந்ததால் கற்ற பாடம் கை கொடுக்கும்

சிரம் தாழ்த்தி பிறரிடம் கரம் நீட்டினால் 

நிச்சயம் அரியணை ஏறும் 

மனதும் மெய்யும் வாழ்வும்


 கீழே இருக்கும் பலத்தை பொறுத்தே

மேலிருக்கும் இடம் நிலைக்கும்

கீழே ஆட்டம் கண்டால் ஓட்டமல்ல,

எதுவும் தரை மட்டமாகிவிடும்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


காதில் ஏறிய ஜிமிக்கி

காலில் ஏறிய வனப்பு

காதல் மெல்ல சொல்ல

காதால் கேட்டிலை அவன்

ஆதலினாலும் வந்தது ஈர்ப்பு

அவன் மேல்

கொண்டதும் என்ன

இழப்பதும் என்ன

உள்ளவரை வந்துவிட்டு

போகும்

அகவையி்ன் எண்ணத்தின் படி

மனதும் விடை கொடா 

காமம் இல்லா காதலை

எட்டி நின்றால் கூட

அவள் வாசம் வீசும்

அவன் மீதும்

மறைக்க நினைத்தாலும்

தோல்வியே என்றும்

உண்மை காதலே

உயிர்க் காதல்

என்றுமே அழிவதில்லை

சில நேரம் அழுகை

மட்டுமே பரிசாகும்

புரிந்தவர் பிரிந்தால் 

பரிவு கொள்ள 

ஆள் தேடும்

ஆள் தேடி அலுத்து போய்

ஆவி இழக்கும்

காதலில் இழுக்கில்லை

காதலில் வீழ்பவர் எவரோ

அவரே எழார்

பாவை வீழ்ந்தாலும்

எழும் காலப்போக்கில்

பாவையால் வீழ்தவனின் நிலை என்னவோ?


அந்த புறம் இந்த புறம் என்று

எந்த புறம் நோக்கினாலும் அழகே!

பெண்ணும் அவள் பெண்மையும்

மௌனம் கூட மொழியாகும்

ஆட்டம் கூட அதிர்வலை கொடுக்கும்

காண்பவர் மதி கூட

ஒன்றி நிற்கும்

தாளம் இல்லா இசையின் நடுவே

புள்ளிகள் இல்லா

கோலமாய் ஆடை விரிய

மெய் உறுதி கொள்ள

தலைசாய்த்து மயக்கும் மங்கை இவள்

மயங்கியது வானும் மண்ணும்

Thursday, December 19, 2024

புதுமை கொள் by Veena Shankar



 புதுமை கொள்


" அம்மா , எல்லாரும் இப்படி கும்பலா நிக்காதீங்க, போய் வரிசையில் உட்காருங்கம்மா" என்று சொன்னான் ரவி. கோயில் வாசலில் யாசகம் கேட்டு கொண்டிருந்த கூட்டமும் ரவி காட்டிய திசையில் வரிசையாய் அமர்ந்தது . ஒவ்வொருவருக்கும் தான் கையில் கொண்டு வந்திருந்த உணவு பொட்டலத்தை அவன் வழங்கினான். "இன்னிக்கி என்ன சாதம் " என்று ஒருவள் ரவியை பார்த்து கேட்க, " தயிர் சாதம்" என பதில் தந்தான் அவன் . தன் குடும்ப பரிகாரத்திற்காக தினமும் ஒவ்வொரு வகையான உணவு வழங்கி வந்தான். காலையில் உணவு பொட்டலத்தை வாங்கிய அவர்கள், அதை மதிய வேளையில் தான் உண்பர். 


 அப்போது காரிலிருந்து இறங்கினார் முக்கிய பிரமுகர் ஒருவர். அவர் இறங்கியதும் யாசகர் கூட்டம் எழுந்து நின்றது. யாசகம் கொடுப்பவர்கள் எப்போதும் கோயிலுக்கு சென்று திரும்பி வரும் போது தான் யாசகம் கொடுப்பது வழக்கம். ஆனால் இவர் கோயிலுக்குள் செல்லும் முன்பே அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இருபது ரூபாய் கொடுப்பார். வாரம் ஒருமுறை கோயிலுக்கு வரும் அவர் அவர்களுக்கு , காசு கொடுக்காமல் போவதில்லை. கூட்டம் அவர் பக்கத்தில் வந்து சூழ, அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் "இருங்கள். தருகிறேன். தருகிறேன்" என்று சொல்லி தன் சட்டையிலிருந்து ஐநூறு ரூபாய் தாளை வெளியே எடுத்தார். எப்போதும் தனித்தனியாக பணம் கொடுக்கும் அவர் , அன்று யாசகர்களில் ஒருவனிடம் மட்டும் பணத்தைக் கொடுத்து அவர்களுக்குள் பிரித்து கொள்ள சொல்லி கோயிலுக்குள் சென்றார் . அவர் செல்லும் வரை அமைதியாய் இருந்த கூட்டம் தங்கள் பங்கிற்கான காசை பகிர, அதில் அவர்களுக்குள் சர்ச்சை எழுந்தது. பலர் அமைதி காக்க, ஒரு சிலருக்குள் சண்டை வந்தது. அவரிடமிருந்து காசு வாங்கியவன் " நீ நேற்றே எனக்கு காசு தரவேண்டும். அதனால் அதை கழித்து தான் உனக்கு கொடுப்பேன். கொஞ்சம் ஓரமாய் போய் நில்லு" என்று கடிந்து கொண்டான் மற்றொருவனிடம் . "நேற்று நான் வரவில்லை, அதனால் நேற்றைய பங்கையும் சேர்த்து கொடு!" என மற்றொரு பெண் கேட்க, இப்படியே ஒருவர் பின் ஒருவராக வாக்குவாதம் தொடர, இதை எதிர்ப்பக்கம் தேநீர் கடையில் தேநீர் அருந்த வந்த திலக் கவனித்தான். தேநீரை சீக்கிரம் அருந்தி விட்டு அந்த கூட்டத்தை நோக்கி வந்தான். அவர்களை சமாதானப்படுத்த, அவர்களின் பஞ்சாயத்து அவனிடம் திரும்பியது. ஒருவாறாக அவர்களின் பங்கை பிரித்து கொடுத்தவன், இப்படி அவர்களுக்குள் சண்டை வராமல் இருப்பதற்கு தன்னிடம் ஒரு தீர்வு இருப்பதாக சொல்ல, " என்னவாக இருக்கும்" என்று வடிவேலு பாணியில் எல்லாம் தங்களுக்குள் கேட்டு கொள்ள, ஒருவர் மட்டும் " சீக்கிரம் சொல்லப்பா!" என்றார். "சொல்கிறேன், உங்கள் எல்லோரிடமும் செல்போன் இருக்கிறதா? " என்று கேட்க, அவரவர் தங்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த செல்போனை அவனிடம் காண்பித்தனர். " சரி! இது போதும். உங்கள் எல்லோருக்கும் தனித்தனி (கியூ ஆர் கோடு) போர்டு ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன். யார் உங்களுக்கு காசு கொடுக்க நினைக்கிறார்களோ அப்போது அதை அவர்களிடம் காண்பித்தால் அவர்கள் போன் மூலம் செலுத்தும் பணம் உங்கள் வங்கி கணக்கில் தானே சேர்ந்து விடும். அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்து விட்டதா என்பதை கண்டுபிடிக்க உங்கள் செல்போனில் ஒலி வரும். அதற்கு தான் உங்களிடம் செல்போன் இருக்கிறதா? என்று கேட்டேன். " என்று சொன்னான். அவன் சொன்னது சிலருக்கு புரியவில்லை என்றாலும் விசயம் புரிந்த ஒருவர் "அது வாங்க காசு ஆகுமே!" என்று கேட்க, "நான் வங்கியில் தான் வேலை பார்க்கிறேன் . எங்கள் வங்கி மூலமாக உங்களுக்கு இலவசமாக தர ஏற்பாடு செய்கிறேன்" என்றான். ஆனால் பணம் வந்திருக்கிறது என்ற தகவல் செல்போனில் ஒலிக்க மட்டும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை நீங்கள் செலுத்த வேண்டும்." என்று தெளிவாக திலக் சொன்னான். இதை எல்லோரும் ஆமோதிக்க , "அது எப்ப கிடைக்கும்?" என்றாள் ஒருத்தி. " ஒரு வாரத்தில் கிடைக்கும்" என்றான் அவன். இதைக் கேட்டதும் சரியென தலையசைத்து அதற்கு ஏற்பாடு செய்யும் படி திலக்கிடம் சொல்லி தங்கள் வழக்கமான இருப்பிடத்திற்கு நகர்ந்தனர் யாசகர்கள். இனி நமக்குள் சில்லறை பிரச்சனை வாராது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 


காலம் எப்படி செல்கிறது என்று பார்த்தீர்களா? அறிவியலின் விந்தை இப்போது யாசகம் கேட்பவர்களுக்கும் உறுதுணையாகிறது. 


காலத்தோடு புதுமை ஏற்பதும் சிறப்பே!

Wednesday, December 18, 2024

நன்றியுள்ளவன் by Veena Shankar

 


நன்றியுள்ளவன்


சிறு வயது முதலே அவனை எனக்கு நன்றாக தெரியும். வாய் பேசாதவன் என்றாலும் எனக்காக அவன் உயிரைக் கூட கொடுப்பான். சொந்தங்கள் எட்டி நிற்கும் நேரங்களில் கூட அவன் எனக்கு துணையாக வருவான். இன்னும் சொல்லப் போனால் ஒரு முறை நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட அவன் என் வரவுக்காகவே காத்திருந்தான். நான் என்ன செய்தாலும் அதை ஆமோதிப்பான். அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட அதை நாசுக்காக சொல்வான்.

அவன் என்னுடன் சேர்ந்ததற்கு ஓர் நிகழ்வும் உண்டு. 

ஒரு நாள் நான் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது என்னை நோக்கி வந்தான். அப்போது தான் அவன் தன் தாயை ஒரு விபத்தில் இழந்திருந்தான். உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் பிரிய இவன் மட்டும் தனியே இருப்பது எனக்கு தெரியும். என்னை மேலும் கீழும் பார்த்தவன் ஏதோ சொல்ல வருவது எனக்கு புரியாவிட்டாலும் பின் சுதாரித்துக் கொண்டு அவன் பசியை புரிந்து கொண்டவனாய் "சரி இரு வருகிறேன். எங்கும் போய் விடாதே!" என்று அவனிடம் சொல்லி , உள்ளே சென்று சில பிஸ்கட்டுகளை கொண்டு வரும் வரை உள்ளே வராமல் வாசலின் முன் பக்கமே காத்திருந்தான். நான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்கிறது என்று நினைத்து நானும் பிஸ்கட்டை அவனிடம் நீட்டினேன். அதை என்னிடமிருந்து வாங்காமல் பக்கத்திலிருந்த செடி பக்கம் போனான். நான் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிடாமல் சென்று விடுவானோ என நினைத்தேன். ஆனால் அவன் செய்த காரியம் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. செடி பக்கம் போனவன் அங்கே சிறுநீர் கழிக்க, நான் அவனை திட்டி கை ஓங்கினேன். மறுபடியும் என் பக்கம் ஓடி வந்து நான் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட தொடங்கினான். அவன் செயல் எதற்கு என்ற கேள்வியோடு நான் ஆராய்ந்ததில் தனக்கு சாப்பிட கொடுத்தவரையும் வீட்டையும் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அவன் அங்கே சிறுநீர் கழித்தான் என்று 

பின்னர் தான் நான் தெளிந்து அறிந்தேன். என்ன ஒரு புத்திசாலித்தனம்.

அன்று முதல் அவன் என்னை நண்பனாக பார்த்தான். 


அவன் சிநேகம் பிடிக்காமல் என் மனைவி, மக்கள் என்னை கடிந்த போதும் நான் அவனை வெறுத்ததில்லை. வாலை ஆட்டிக் கொண்டு அவன் வரவை நானும் எதிர்பார்த்ததுண்டு. நன்கு பழகியதால் எட்டி வைத்து பார்க்க முடியவில்லை. அவனுக்கு என்று குடும்பம் இருந்தால் ஒருவேளை என்னை விட்டு விலகியிருப்பான் போல. சில சமயம் எனக்கான உணவினையும் அவனோடு பகிர்ந்ததுண்டு. வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் அவனுக்கு உணவு கொடுத்துள்ளேன். அவன் பசி போக்கியதால் அவன் நன்றியும் காட்டினான் வேண்டிய சமயத்தில்.


எப்போதும் காலையில் நான் தான் என் பிள்ளைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு வருவேன். மாலையில் என் மனைவி தான் திரும்ப அழைத்து வருவாள். ஒரு நாள் விருந்தினர் வருகையால் என் மனைவி பிள்ளைகளை அழைத்து வர மறக்க, என் பிள்ளைகளும் தாங்களாகவே வீட்டிற்கு வரும் போது இவனும் கூட வர பிள்ளைகள் அவனால் மிரட்சியடைய அவர்கள் அவனை விரட்ட முயன்றும் அவர்களுக்கு துணையாய் வீடு வரை வந்து விட்டுச் சென்றிருக்கிறான். அவனின் நன்றி உணர்ச்சி என்னை திக்குமுக்காட வைத்தது. தினமும் என் மனைவி போகும் போது அவளுக்கும் தெரியாமல் கூடவே சென்றிருக்கிறான் போல. அன்றிலிருந்து அவன் இதயத்தில் நின்றான். இருந்தாலும் அவனை விட்டு விலக சொல்லி வீட்டில் சண்டைகள் நடக்கும்..  

யாருடைய தோற்றமும் பெரிதல்ல. செய்யும் செயலே பெரியது என்று நான் எத்தனை முறை வீட்டினரிடம் சொன்னாலும் அவனிடம் சிநேகம் காட்ட மறுக்கின்றனர்.  


"நன்றியுள்ள எவருக்கும் இது சமர்ப்பணம்." என்று முடிக்கப்பட்டிருந்தது கீதா படித்த அந்த கதையில். ஆம். உண்மை தான். கீதாவுக்கும் இது தெரியும். அவளும் இதைப்போன்றொரு நாயை இழந்துள்ளாள். கண்ணீர் வழிந்த கன்னத்தை துடைத்துக் கொண்டு புத்தகத்தை மூடி வைத்தாள் கீதா.

Sunday, December 15, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



  கனவுகள் பல

அதில் நினைவுகள் சில

கஷ்டங்கள் பல 

அதில் அதிர்ஷ்டங்கள் சில

வருடங்கள் பல

அதில் தருணங்கள் சில

தவிப்புக்கள் பல

அதில் ரசிப்புக்கள் சில

காதல்கள் பல

அதில் நிராகரித்தவை சில

கட்டளைகள் பல 

அதில் நிபந்தனைகள் சில

கருணைகள் பல

அதில் வெறுமைகள் சில

சலிப்புக்கள் பல

அதில் அனுபவங்கள் சில

ஆரவாரங்கள் பல 

அதில் அழுகைகள் சில

கொடுமைகள் பல

அதில் உதித்தவை சில

பொறுமைகள் பல

அதில் உதிர்த்தவை சில

சிந்தனைகள் பல

அதில் நிறைவேறியது சில

மஞ்சங்கள் பல

அதில் அரங்கேறியது சில

வந்தவை பல

அதில் நிலைத்தவை சில

நோட்டுக்கள் பல

அதில் கறுப்புகள் சில

அகங்காரங்கள் பல

அதில் அழகானவை சில

ஆபத்தானவைகள் பல 

அதில் ஆராதனைகள் சில 

இயல்பானவைகள் பல

அதில் அரிதானவைகள் சில

மயக்கங்கள் பல

அதில் தயக்கங்கள் சில

சூழ்நிலைகள் பல

அதில் சுயநலம் சில


எப்படியோ எனக்கு வாய்ப்புகள் பல

அப்படியே என் வாழ்க்கையில் சில


இப்படிக்கு அவர்களில் ஒருத்தி


 துயில் கொள்ளா மயில் 

இல்ல இவள்

மையல் கொண்டே 

மதியும் மயங்கினாள்

மஞ்சத்தில் கூட தஞ்சம் கொள்ள

முடியாமல் 

சஞ்சலம் கொண்டாள் 

கைத்தலம் பற்றிட வருவான் விரைவில்

அவள் எதிர்பார்ப்பும்

கைகூடும் வரும் நாளில்

நாட்கள் நகர மறுத்தாலும்

அகவை கூடுதே

பூஞ்சிரிப்பினில் மயங்கும் வேளையில் 

பூமலரும் தருணம் வருமே

வாழ்வின் செருக்கு கொள்ள

Friday, December 13, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


நண்பர்களின் கூட்டு முயற்சியில் 

வீழ்ந்த ஒருவன்

எழுந்து, நின்று, ஓடும்

தருணம் இது

எத்தனை இன்னல்கள் வந்தாலும்

எத்துணையும் இல்லாமல்

மகிழ்ச்சியோடு ஏற்கும்

பறக்கும் படை இது


தொடர நினைக்கும் ஓர் பயணத்தில்

தடங்கல் வரலாம்

தடம் மாற நேரலாம்

தயக்கம் பிறக்கலாம்

தவிப்பு நிகழலாம்

இருந்தாலும் எதையும் கிளையாய் 

நினைத்து 

தாவி பிடித்து இலக்கை நோக்கி

செல்வதே சிறப்பு

Wednesday, December 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 பாசத்தை பகிர்ந்த இந்த தூளி 

வேஷத்தை அறியாது

படுக்கை அறை மட்டுமே

சொந்தமல்ல இதற்கு

எங்கும் தொங்குவான் 

அவரவர் வசதிக்கேற்ப

சில நேரம் அவனாய் 

சில நேரம் ஊஞ்சலாய்

சில நேரம் அமைதியாய்

சில நேரம் வசதியாய்

சில நேரம் அசதியாய்

சில நேரம் கனவாய் 

சில நேரம் சிரிப்பாய் 

சில நேரம் நடிப்பாய் 

சில நேரம் ஒற்றையாய்

உயிரை மாய்த்துக் கொள்ள

பொருள் வசதி பெரிதல்ல

இவன் தாங்க

இசைக்க ஓர் தாலாட்டு மட்டும்

போதுமே இனிதாய் உறங்க

Monday, December 9, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பொதி சுமப்பவனும் மதி கொண்டவனும் 

 இங்கே நடைப் பயணமாய்


பொதி சுமப்பவனுக்கும் உள்ளது அறிவு, அதை கீழே விழாமல் பார்த்துக் கொள்வதில்


யார் சொன்னது?


நான் கழுதை என்று

கொஞ்சி பேசும் போதும் 

சினத்தில் கடியும் போதும்

பொதி சுமக்கும் போதும்

பேச்சுகள் பகிரும் போதும் 

நானே வருவேன்

தானாய் 

இளைத்தவன் அல்ல நான்

என் மேல் சிறிது சிறிதாய்

சுமைகள் ஏற்றும் போதும்

மொத்தமாய் தாங்குகிறேன் 

சுமந்து செல்கிறேன்

என் பெயர் சொல்லி

யாரேனும் அழைத்தால்

சினம் கொள்ள வேண்டாம்

அச்சப்பட வேண்டாம்

வெட்கம் கொள்ள வேண்டாம்

தங்களால் இயலாதவற்றை

அடுத்தவர் தலையில்

கட்டும் மனிதரை விட

நான் எப்போதும் 

ஒரு படி மேலே

புத்தகத்தை சுமந்தாலும்

அதன் அர்த்தம் விளங்கிக்

கொள்ள விழையவில்லை 

மெத்த அறிவ கூட

மொத்தமாய் நம் இயல்பை. மாற்றும்

வருவது எதற்கு

போவது எதற்கு

இடையில் கொஞ்சம்

பாரம் சுமக்க

நான் பொதி சுமக்கும்

வேளையில் மனிதன்

படித்த அறிவோடு

வாழ்வை சுமக்கிறான் 

சுமப்பது தொழிலே என்றான 

பின் அதுவே தெய்வம்

சுமப்பது கூட பெரிதல்ல

தாங்கி செல்வதே சிறப்பு



இப்படிக்கு

பொதி சுமக்கும் கழுதை


 பொதியும் குடும்பமும் ஒன்றே 

இரண்டையும்

சுமக்க வழி தெரிந்திருக்க வேண்டும்

எடைக்கு போகும் புத்தகங்கள் இன்று இங்கே இதன் உணவாக

Sunday, December 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 காலத்தால் கரைவது இளமை

பேச்சில் வேண்டுவது என்றுமே வளமை

இளமையில் மட்டுமே கொள்வது ஆளுமை 

மூப்பிற்குள் குடும்பத்தை வளர்ப்பது கடமை

காலனை அழைத்தாலும் விடாது முதுமை

 வயோதிகம் கொடுப்பது வேண்டா தனிமை

பாச வலையில் என்றும் பெறுவது இயலாமை

கடந்த நாட்களை அசை போடுவதே தற்போதைய நிலைமை

கடக்கப் போவது யாதென தெரியாததே புதுமை

பிறர் சொல்  

ஏற்று நடந்தால் மட்டுமே இனிமை

ஒதுங்கி நிற்பதில் மறைக்கப்படுவது தானே திறமை

முகச் சுறுக்கங்களின் அணிவகுப்பு இங்கே கொடுமை

கரம் நீட்டும் மனத்தின் எண்ணிக்கையோ சிறுமை

ஒற்றுமையால் ஒருமை பன்மையாக முதுமை என்றும் இளமை

படமும் கருத்தும் by Veena Shankar

 


துணைவி துணையாய் இல்லாமல்

மறைந்தாலும்

துயிலுகையில் மனம் மறுத்து போனதே

அவளின் ஒரு துளி

அன்பு கூட ஒளடதமாய் மாறுமே 

அண்மையில் ஊடலும்

தொலைவில் நினைவும் உறவில் உண்டே

தனிமை என்பதில்லை என்றும் என் மனதில்

அவள் நினைவால் 

என நா செப்பினாலும்

நானும் என்னை நானே 

மறந்தேனே 

மறுப்பதும் மன்றாடுவதும்

வெறுத்து பேசியதால் தானே

மறைத்து வைத்த காதல் இன்று இனிக்காமல் 

இளைத்ததே 

வருவாள் வருவாள்

நான் நினைக்கும் வரை

மறவேன் மறவேன் என்பேன் 

மறமே காதலில்

வீழ்ந்ததால்

விருந்தாக்கிய நாட்களை விட 

வீழ்ந்த நாட்கள் மிகையே

நெஞ்சம் புகுந்த அவள்

தஞ்சம் கொள்ளாமல்

வஞ்சம் செய்தது காலமும்

சஞ்சலம் கொள்ள செய்தது அவளை 

காலன் கூட அவளை அழைத்திருந்தால்

உடனே நானும் சென்றிருப்பேன் அவளோடு

ஆனால் அவள் சென்றதோ அவள் விரும்பிய அவனோடு

Saturday, December 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 தூக்கிலிட்டவனின் அறியாமையால் இங்கே பல உயிர்களின் பசி தொடர்ந்தது

 புளிப்பிற்கு காரம் சரியே,

ஆனால் இவை இங்கே தொங்கும் நிலையில் இருப்பதன் பயன் யாது?

நேற்று நீங்கள் திருஷ்ட்டி கழிப்பதற்காக விற்று போனதால் 

இன்று என் பிள்ளைக்கு எலுமிச்சை சாதம் தயார் செய்ய முடியாமல் போனது

Wednesday, December 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar




 எதைக் கொடுக்கிறோம் என்பது கேள்வியல்ல 

எதை பெறுகிறோம் என்பதே கேள்வி இங்கே

பெறுவதில் உள்ள ஆனந்தத்தை விட கொடுப்பதில் ஆனந்தம் இங்கே தருவிற்கும்

ஆனால் மனித மனம் மட்டுமே நாடுகிறது

பிறரிடம் பெறுவதை


 விதைத்தவனின் அறுவடை இங்கே நிழலாக


 விதைப்பதை விட வளர்ப்பதில் உண்டு மகிழ்ச்சி

வளர்ப்பதை விட பலன் அடைவதில் உண்டு மகிழ்ச்சி

பலனளிப்பதை விட உண்டு மகிழ்ச்சி 

மீண்டும் புதிதாய் விதைப்பதில்


 பசுமையே அழகு என்றும்

அது காட்சியான தருவினால்

படமும் கருத்தும் by Veena Shankar

 




படுக்கையில் துறந்தது தூக்கம்


வெளியில் மழை துளியின் தாக்கம்


மழைத்துளி முகத்தில் விழுந்ததால் ஏனோ வெட்கம்


இன்னும் தொடர்கிறது தர்க்கம்


இது அல்லாது ஏது சொர்க்கம்


தாய் மண் மட்டுமே தந்தது அதற்கான விளக்கம்


காலத்தின் ஓட்டத்தால் தங்குவதில் சுணக்கம்


பிறந்த. மண் கற்றுத் தந்த ஆக்கம் 


என்றும் அன்புடன் காட்ட வைக்கும் வணக்கம்




இரு கைகள் சேராத போதும்

ஏதோ ஒரு ஓசை 


அது என் சுவாசக்காற்று கொடுத்த இசை


இது மட்டுமே தாரும் நீங்கா நினைவுகளின் அசை 


தாங்கி பிடிக்கும் உறவுகளோடு தங்கிடவே ஆசை


புரிந்திடுமா எவருக்கும் என் மனதின் பாசை

Monday, December 2, 2024

இடைவெளி எதற்கு by Veena Shankar

 


இடைவெளி எதற்கு??


எதற்கும் வேண்டும் ஓர் இடைவெளி

அது 

அறிவு என்றாலும்

ஆக்கம் என்றாலும்

இயல்பு என்றாலும்

ஈர்ப்பு என்றாலும்

உந்துதல் என்றாலும் ஊடல் என்றாலும்

எளிமை என்றாலும்

ஏற்றம் என்றாலும் 

ஐம்புலன்கள் என்றாலும்

ஒளி என்றாலும்

ஓட்டம் என்றாலும்

Friday, November 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நிலத்தில் வாழ்ந்து அனுபவித்த பிறகு

நிலவில் பறக்க ஆசையே


 பெண்ணின் மனதில் சிறுமையில்லை 

தனக்கென்று ஒரு வாழ்வு அமையாத வரை

கடக்கும் பாதை தொலைவில்லை

யாவும் அண்மையில் கிட்டும் வரை

தொலைத்த நாட்கள் திரும்புவதில்லை

என்றும் அவை நினைவுகள் என்று

அறியும் வரை


 தேவை யாதும் தீர்ந்த பின்னே

பறப்பேன் நானும் தீர்க்கமாய்

ஓர்நாள்

நீல வானம் நீள்கையில் கூட

நினைத்தே செல்வேன்

வானிலும் ஆராய பல

உண்டு என்று

அதில் வெற்றி கொள்வேன் விரைவில்

பூமியில் மானிடனின் 

மனம் இதுவென்று

அறியா போது 

வானத்தில் கிடைக்கும் வெற்றி

அற்பமே!

அண்டத்தில் சிறந்தது

எதுவோ?

அறிய முற்பட மனமும்

சொன்னது

எல்லாவற்றிலும் வெற்றி தேடாதே

உன் அமைதியை

 தொலைப்பாய் என்று

Thursday, November 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 இதயத்தை பிளவுபடுத்த கூர்மையான

கத்தி தேவையில்லை

அழகான மலரும் இதயத்தை

பலவீனப்படுத்தும்


 இதயத்தை குத்தி விட்டு

மலர் கொண்டு அஞ்சலி 

செலுத்தும் உலகம் இது


மலரின் மென்மைக்காக குத்துப்பட்டாலும்

இதயம் ரணமாவதும் புதிதல்ல இங்கே


முதல் முறை கத்தியால் குத்திய

பின் ரணமாக்கும் இதயத்தை

எவ்வளவு முறை குத்தினாலும்

மீண்டும் மீண்டும் வலி 

நீளுவது போல

மலருக்காக காத்திருப்பேன் என்றே

சொல்லுவான் காதலன்

அவன் தியகத்திற்காக இறுதியில்

கிடைப்பதும் மலரே

ஆனால் தலையில் சூட்டிக் கொண்டு

கொண்டாட அல்ல

உடலில் மாலையாய்

அவன் உயிர் அஞ்சலிக்காக


 கண்ணில் தெரிவது மலராயினும்

முட்களும் உண்டு

அதனுள்ளே

கத்தி போல் உயிரை மாய்க்க

படமும் கருத்தும் by Kiruthika

 


சில சமயங்களில்...

 உன்னுடனேயே

இருந்தால்...

நேரம் ஓடி போகிறது...!..


நீ இல்லாது போனால் 

நேரம் நகர கூட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது...!..


ஏனென்றால்..

கேட்காத செவிகளை காட்டிலும்...

கேட்கும் செவிகளை 

காட்டி கொடுத்து .. 

நல்தகவலை சுமந்து கொண்டு...

தூது செல்லும் 

நீ

துணையாக 

மாறிப்போனாய் ...!..


அளவாக 

இருந்தால் 

நீ

எமக்கு 

வைட்டமின் ...!..

அளவுக்கு ..

மீறிப்போனால் 

நீயே

வியாதி...

கண்ணுக்கும்...

மனசுக்கும்...

மூளைக்கும்...!...


இரு...

கொஞ்சம் -

கொஞ்ச

நேரம் 

தூர இரு...!..


அப்போது தான் ..

பக்கம் வர ...

முயற்சியாவது

செய்யும்

உடன் இருப்புகள்...

உறவுகள்...!!!...

Wednesday, November 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


கைக்குட்டை போல் உள்ளங்கையில் அடங்கி

எங்களின் உயிர் மூச்சானாய் 


சிறு குழந்தை போல் உன்னை பற்றிக் கொள்ள எங்களை

பழக்கப்படுத்தினாய்


காதலே கசந்தாலும் எங்கள் வாழ்வில் நீ விருட்சமானாய்


விரும்பும் இடம் செல்ல நீயும் துணையானாய் 


காணும் காட்சியை படமாக்கி அதை அடுத்தவரின் பார்வைக்கு சொந்தமானாய்


உன்னை நாங்கள் பிரியாமல் இருக்க அவ்வப்போது உனக்கு நீயே உயிர் கொடுத்து கொண்டாய்


தோப்பாய் இருந்த எங்கள் குடும்பத்தை தனி மரமாக்கினாய்


இதுவே உன் சாதனை

முன் சந்ததியினர் சொல்வர் இது வேதனை என்று

இன்றைய சிந்தனைகள் by Veena Shankar

 


இன்றைய சிந்தனை (3)

1) தேவையில்லாதது மனதில் தங்கி விட்டால் தேவையுள்ளது தங்க வாய்ப்பற்று போகும்

2) பொறுப்பற்ற வாழ்க்கையும் துறக்கும் விலை மதிப்பற்ற மனிதத்தை

3) இருப்பதும், இருப்பதில் கிடைப்பதும், கிடைப்பதில் மகிழ்வதும், மகிழ்வதில் பகிர்வதும் , பகிர்வதில் சிறப்பதும், சிறந்து அதில் வாழ்வதும் கொடையே!

4) மணம் தரும் உதிர்ந்த பூக்கள் கூட திரவியம் தரும் போது நிலையில்லா நம் மனமும் ஓர் நாள் பக்குவப்படும்

5) ஒருவரை ஒருவர் ஏற்றி விடும் மனது இருந்தால் போதுமானது. தாங்கி பிடித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை

6) நம் உறவுகளுக்குள் பந்தம் தொடர எண்ணினால் மறதியும் தொடரும் என்பதே உண்மை

7) பாரத்தை சுமப்பது மட்டுமே கடினமல்ல , பிறர் நம்மீது கூறும் ஆதாரமற்ற குற்றத்தையும் தாங்குவது கடினமே!

8) ஒருவருக்கான மதியும் மதிப்பும் அனுமதி கேட்டு வருவதில்லை.

9) வயது என்பது ஒரு எண் மட்டுமே, எப்போதும் ஒருவனின் அனுபவமே அவன் உண்மையான வயது.

10) சொப்பனம் கூட கசக்கிறது வாழ்க்கையில், அது நமக்கு எதிராக இருக்கும் போது மட்டும்

11) மனதில் தூக்கம் , செயலில் தேக்கம், 

12) தேடலின் ஆரம்பம் எது என தேடியதில் உணர்ந்தேன் தேடலுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்று

13) வென்றவன் பேச்சில் மகிழ்ச்சி தெரியும். தோற்றவன் பேச்சில் அவன் அடுத்து அடையப் போகும் வெற்றி புலப்படும்

14) நாம் நினைப்பது நடந்தால் நம்மை மீறிய சக்திக்கு மதிப்பு இல்லை

15) தெளிவான சிந்தனை மட்டுமே தெளிவான பாதையை காட்டும். தெளிவான பாதை மட்டுமே தெளிவான வாழ்க்கையை கொடுக்கும்

16) அழகை ஆராதிப்பதிலும் ஓர் அளவு உண்டு, அது வார்த்தையால் எல்லை மீறாத வரை. வார்த்தைக்கும் ஓர் அளவு உண்டு, அது அடுத்தவர் கோபம் கொள்ளாத வரை.

17) பிறப்பின் முடிவு மடிவதில் இல்லை. வெற்றியின் முடிவு நம்மிடம் இல்லை புகழின் முடிவு அடைவதில் இல்லை ஆனால் நம்பிக்கையின் முடிவு முயற்சியில் மட்டுமே உண்டு.

18) உணர்வின் வெளிப்பாட்டில் வருவதே நம் ஆசையும் தேவையும்

19) நாம் முதல் எட்டு வைக்கும் போது நம்மை எட்டி விட்டவர்கள் யாவரும் நம்மை எட்ட நின்று காண்பர் பின்னாளில் நம் வளர்ச்சியின் பலனாய்

20) தனிமை தான் வலிக்கான மருந்து என்று தெரிந்த போதும் அதன் வழி வலி குறையவில்லை என்றால் அடுத்து என்ன செய்யக் கூடும் என்பதை தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சிறந்தது

21) ஏணியின் வேலை ஏற்றி விடுவது மட்டுமே, அதுவும் கர்வம் கொண்டு ஏற்றி விட மறுத்தால் நம் நிலை சமதளமே!

22) பொய்யில் உள்ள உண்மையும் கோபத்தில் வரும் பொறுமையும் என்றும் சிறந்தது

23) நம் எண்ணங்களுக்கு ஓர் முடிவு இல்லாதவரை வாழ்க்கையும் நம்மை ஏமாற்ற தான் செய்யும்

24) உறவு என்னும் பூவை மாலையாக தொடுப்பதும் , தொடுத்த மாலையை பூக்களாக உதிர்ப்பதும் நாம் அனுசரித்து போவதிலே!

25) அடுத்த மனிதனின் குணத்தை அறிந்து கொள்ள நினைப்பதை விட, நாம் அவனுக்கு நம் குணம் அறியும் படி வாழ்வோம்

26) ஒரு பொருளின் நுட்பம் அறிய கேள்வி சிறந்தது. அதைவிட அதனின்று, பல கோணங்களில் அறியப்படும் பதிலும் சிறந்தது.

27) விரக்தி வந்த பின்னும் வாழ்வில் விடியலும் வருமே! மனம் என்னும் கோட்டையில் இருப்பதும் விலகுவதும் தேவையே! எதுவும் எளிதில் கிடைத்து விட்டால் தெய்வம் கூட மனதில் தங்காது

28) குறை காணும் மனது இறுதி வரை திருப்தி கொள்ளாது. அடுத்தவரின் தேவையையும் தம்மை தாமே பூர்த்தி செய்து கொள்ள விடாது

29) உடைபடாமல் இருக்கும் வரை நீர்குமிழியும் மனித உறவும் ஒன்றே

30) விவாதங்கள் தொடர, யார் மீது குற்றம் உள்ளது என்பதை ஆராய்வதை விட அடுத்து அது நிகழாமல் தடுப்பதும் தவிர்ப்பதும் சிறந்தது.

31) பொறுமையில் சிறுமை கொண்டால் பெருமையிலும் வறுமை வரும்

32) ஒருவர் நம்மை விட்டு விலகுவதற்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அந்த ஒருவர் நம்மை நெருங்குவதற்கு அன்பு என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

33) வீட்டில் ஒருவர் துக்கப்பட்டாலும் அழத் தெரிந்தவள் பெண். பிறர் இன்பத்தின் போது மகிழத் தெரிந்தவள், அவள் தன் துக்கத்தை மறந்து

34) காலடிகள் கூட பசுமையாகும் உன் பார்வையையும் பாதையையும் சரியாக தேர்ந்தெடுத்தால்

35) மற்றவர் நம்மை புரிந்து கொண்டு சண்டையிடுவதை விட அவர்களுக்கு நாம் புரியாத புதிராகவே இருந்து விடலாம்

36) சோகத்தில் வந்தாலும் மகிழ்ச்சியில் வந்தாலும் கண்ணீர் கரிக்கத் தான் செய்யும், அதற்காக நாம் துக்கத்தையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. அது போல தான் திருமண பந்தமும், சில நேரம் சிறப்பாய் அமையும். சில நேரம் வெறுப்பாய் இருக்கும். அதை சரியாய் புரிந்து கொண்டு கடப்பதே சிறந்தது.

37) நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓர் கதை இருக்கும். அதை மறப்பதும் கதையை தொடருவதும் எழுத்தாளரான நம் கையிலே

38) சில நேரங்களில் உண்மை சொல்வது கூட பாதகமாக அமையும், என்றாலும் மனதில் உறுத்தல் இல்லாமல் உயர்ந்து விடுவோம்.

39) பிறருக்காக உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டே இருந்தால் உங்கள் கருத்தில் எப்போதும் ஒர் நிலைப்பாடு இருக்காது

40) கூட்டுக் குடும்பம் சிதைந்ததால் விலகியது உறவுகள் மட்டுமல்ல உணவுகளும் உணர்வுகளும் தான்

41) தேடும் யாவும் கிடைப்பதில்லை தேடிய யாவும் நிலைப்பதில்லை தேடாதவை என்றும் தானே அமைவதில்லை

42) நம்மிடம் ஒன்றுமில்லை என்று நினைப்பதை விட, ஏதோ ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கடப்பதே சிறப்பு

43) மனதிலும் உடலிலும் துணிவும் பணிவும் கொண்டால் செய்யும் பணி சிறக்கும்.

44) தேவை என்ற தேடலிலேயே மனிதனின் பயணம் தொடர்கிறது நித்தமும். எல்லையில்லா தேடலுக்கு முற்றுப்புள்ளி வைப்பவனும் படைத்த அவன் ஒருவனே!

45) கண்ணாடியில் தெரியும் பிம்பம் அல்ல வாழ்க்கை நீ சிரித்தால் சிரிக்க, நீ அழுதால் அழ. அது கண்ணாடி போன்றது, கவனமற்று கையாண்டால் உடைந்து விடும்.

46) நீ விருப்பப்பட்டு செய்யும் செயல் உன்னை முன்னேற்றும், கடமைக்காக நீ செய்யும் செயல் உன்னை சார்ந்தவரை பின்னேற்றும்.

47) எதிர்பார்ப்பதில் ஏமாற்றம் இருப்பது போல ஏமாற்றமும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்க மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்

48) பல கேள்விகளுக்கு விடை தேடுவதிலேயே நம் காலமும் வலிமையும் தேய்கிறது

49) எந்த உறவுகளையும் குறையில்லாமல் தொடருவது என்பது பெருங்கலையே.

50) இல்லம் , கண்ணாமூச்சி ஆடும் இடமல்ல, அங்கே ஒளிவு மறைவோடு வாழ்வதற்கு

Monday, November 25, 2024

இன்றைய சிந்தனைகள் by Veena Shankar

 


இன்றைய சிந்தனை (2)

1) தேவையுள்ள இடத்தில் நீ வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாய் கூட இருக்கலாம். ஆனால் உன் அவசியம் அந்நியமாக்கப்படும் இடத்தில் வான் நீராய் கூட இருக்காதே.

2) வலிகளும் நம் உள்ளத்தை மறுத்து போக செய்யும்.அதனை புறந்தள்ளி கொள்ளும் வெற்றி மட்டுமே நம் வாழ்வை நிலைநிறுத்த செய்யும்

3) பிரிந்து போன நட்பை உயிர்ப்பிக்கும் முன் பிரிவின் காரணம் தெரிந்து கொள்ள முனைவது வீண் செயல்

4) தீபம் எரிவதும் அணைவதும் காற்றினாலே! நம் வாழ்வின் பலன்களும் நம் வார்த்தையாலே!

5) மலரிடம் சிநேகம் கொள். அதன் மலர்ச்சி உன்னை புன்னகைக்க வைக்கும் எந்நாளும்

6) அடுத்தவருக்கு நீ கடவுளாக தெரிய வேண்டிய அவசியமில்லை, அவருக்கு நீ மனிதனாக மட்டும் இருந்தால் போதும்

7) வினாக்கள் பலவற்றிற்கு மௌனம் பதில் என்றால் வினாவும் மௌனமாகி போகும் அங்கே

8) இருப்பதை விடுப்பதும் இல்லாததை தேடுவதும் தான் வாழ்க்கை. இதில் தொலைப்பதும் துறப்பதும் அவரவர் மனதை பொறுத்து

9) எதுவும் எளிதாய் கிடைத்தால் கிடைத்ததில் மகிழ்ச்சி என்பது சொற்பமே. வடுவோடு கூடிய வெற்றியே மனதில் என்றும் நிலைக்கும்.

10) புன்னகை ஒன்று போதுமே, மனதில் பொதிந்துள்ள துக்கம் திசை மாற

11) எந்த நாளும் உழைப்பவருக்கு சொந்தமே! கோஷப் போற்றுதல் இல்லையென்றால் உழைப்பும் போற்றப்படும் ஆங்கே

12) ஒரு காயத்தின் வலியை உணர்ந்த பின் மீண்டும் அந்த செயலை செய்து வெற்றி கொள்வதோ அதை விடுப்பதோ நம் மனம் பொறுத்து

13) யாரும் வருவார் யாரும் போவார் நம் வாழ்க்கை பயணத்தில் அதில் வெகு சிலரே உடன் பயணிப்பர்

14) ஒருவர் வலிய ஏற்ற செயலின் வலிமையாவது யாதெனில் அவர் தன் பொறுப்பு அறிந்து செயல்படுவதே

15) பேசுவதை குறைத்து கொள்வதால் மட்டுமே மதிப்பு உயராது. அடுத்தவரின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து உயர வேண்டும்

16) ஆறுதல் தரும் பேச்சும் விலகி நிற்கும் சில நேரங்களில் அனாவசிய புலம்பல்களால்

17) அன்பு காட்டும் உள்ளங்களில் சிறை பறவையாக கூட வாழ்ந்து விடலாம். ஆனால் குழப்பாமான நெஞ்சங்களில் பருந்தாக கூட இருக்க முடியாது

18) உன்னை பற்றி பிறர் தவறாக விமர்சித்தாலும் அவர்கள் பார்வை போலவே நீயும் இருந்து விடு. அவர்களாவது அதில் மகிழ்ச்சியடையட்டும்.

19) வாழ்க்கையில் விரோதிகளையும் மதியுங்கள், அவர்களே உங்கள் வளமான பாதைக்கு உரமிட்டவர்கள்

20) அறியாமையின் வெளிப்பாடு கோபமாகவும் இருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம். முன்னது மதியை குறைக்கும், பின்னது இருளை நீக்கும்

21) கலங்கிய மனதில் உதிக்கும் எண்ணமானது தெளிவில்லாத நீரோடையில் முகத்தை பார்ப்பதற்கு சமம்

22) தேடுதலின் பலன் சிறியதோ பெரியதோ, அதனின்று பிறக்கும் திருப்தி பெரியது

23) ஒருவர் மற்றொருவரிடம் அடங்கி போவதும் இயலாமையால் அல்ல, அடக்குபவரின் ஆளுமை இழந்து போகாமலிருக்கவே !

24) எதிலும் திருப்தியடையா மனம் காணும் அடுத்தவரின் குறை மட்டுமே

25) எல்லை மீறா வார்த்தை சொல்லும் உறவிற்கு எல்லை இல்லை என்று

26) அகண்ட பார்வை இருண்ட வாழ்வை அகற்றும்

27) எல்லோரிடமும் ஓர் சோகம் ஒளிந்துள்ளது. அதை அடக்கி ஆழ்வதும் வெளிப்படுத்துவதும் அவரவரின் விருப்பத்தை பொறுத்து

28) எதையும் தாங்கும் இதயமும் வருந்தும் தன்னுடலின் அங்கம் விமர்சிக்கப்பட்டால்

29) உன் நீண்ட பயணத்திலும் எல்லைகள் உண்டு, அந்த எல்லையும் ஆரம்பம் ஆகும் மற்றவர்களுக்கு

30) கறை கொண்ட உள்ளம் கரை காணாது , மனம் கொண்ட இடத்தில் மணம் அகலாது

31) தேவை என்பதை நீ ஆட்கொண்ட பின், நீ காண்பது யாவும் உன் தேவையே!

32) பிறருக்கு அள்ளிக் கொடுத்து கிள்ளிப் பெறுவது இன்பம்

33) தன் கேள்விக்கு விடை தெரியாதவன், பல சமயங்களில் அடுத்தவருக்கு விடையாக தெரிவதும் உண்டு

34) இன்பத்தில் கொள்ளும் துன்பத்தை விட துன்பத்தில் பிறக்கும் இன்பம் சிறப்பு!

35) நிலைத்த வாழ்வு நிலைக்க சுவை கூட்ட வேண்டும் நகைப்பு என்னும் செயலாலே!

36) கண்ணில் காண முடியாத ஒருவரை நம் அகத்துள் உணர்வதே சிறப்பு

37) எதை பெறுகிறோம் என்பதை விட எதை இழக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வது வாழ்விற்கு சிறப்பு

38) வாய்ப்பு பல முறை நம் வாசல் படி வரை வந்தாலும் மனம் என்னும் கதவு திறந்தால் மட்டுமே வெற்றி கிட்டும்

39) நாட்கள் செல்ல செல்ல நம்மை புண்படுத்தியவரை கூட மன்னித்தும் நினைவிலிருந்து அகற்றியும் விடுகிறது நம் மனம்

40) இழப்பும் வெற்றிக்கு படி தான். ஆனால் மீண்டும் படியில் ஏறும் போது பிடி தளராமல் இருக்க வேண்டும் வெற்றிக் கனியை இனிதாய் ருசிக்க

41) வலிகள் மட்டுமே துணையான உள்ளத்தில் மொழிகள் மௌனமே!

42) நம் சோகத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்தாலும் அதற்கு மறுபேச்சு சொல்லாதவன் கண்ணாடி ஒருவனே!

43) மருந்தும் சிறந்தது அது தேவைப்படும் போது மட்டுமே ; அது போலத்தான் உறவுகளும் நட்புகளும் சிலர் கண்ணோட்டத்தில்

44) தங்கள் சுய அடையாளத்தை தொலைத்தவர்களுக்கு ஆதார் கார்டும் தேவை தானா?

45) நாம் அறிவாய் செயல்பட்டும் தோற்றுப் போகிறோம் என்றால் இன்னும் கூடுதல் முயற்சி தேவை என்பதே உண்மை

46) எதுவும் கடந்து போகும் என்றாலும் கடந்த வந்த பாதையும் அனுபவமே

47) கல்லானது தானும் கரையாது,அடுத்தவராலும் கரையாது. அதுபோலத்தான் நம்மில் ஒளிந்திருக்கும் பொறாமை குணமும்., நம்மையும் வாழ விடாது, அடுத்தவரையும் வாழ விடாது.

48) இன்று ஒன்றாக கூடி மகிழ்வது மட்டுமே நட்பல்ல , பின்னாளில் துக்கத்திலும் நிலையாக நிற்பதே நட்பு.

49) அனுபவமும் ஓர் வெகுமதியே, அடுத்தவர் இலவசமாக கொடுப்பதால்

50) அதீத பேச்ச்சினாலும் அதனின்று வெளிவரும் எதிர்மறை விமர்சனத்திற்கு பின் வரும் அடக்கமான வார்த்தைகளும் நம் அனுபவத்தின் வெளிப்பாடே!

Friday, November 22, 2024

இன்றைய சிந்தனைகள் by Veena Shankar

 


இன்றைய சிந்தனை (1)

1) விதை பெரியதானாலும் சிறியதானாலும் அதில் பிறக்கும் தாவரம் தரும் பலன் என்றுமே தனித்துவமானது

2) மனைவியின் இழப்பால் கணவனுக்கு கிடைப்பது வெற்றிடம் கணவனின் இழப்பால் மனைவி தேடுவது புகழிடம்

3) சுவர் : மனிதனின் தனிமைக்காக உருவாக்கப்பட்டது தான் சுவர்

4) விடை தேடி அலையும் கேள்விகளுக்கு காரணம் ஒன்று இருக்கும் அவரவர் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாது என்பது இல்லை வாழ்வில், தெரியாது என்ற வார்த்தையை பிரயோகிக்காத வரை

5) உயர்வாக நீங்கள் இருப்பதை விட அடுத்தவருக்கு உதாரணமாக இருந்து காட்டுங்கள். அடுத்தவர் வாழ்வு சிறக்கட்டும்

6) பிறருக்காக என்று செய்யும் செயலில் நாம் நம்மை தொலைக்கிறோம் என்பதே உண்மை

7) உண்மையின் தத்துவத்தை சொல்ல பாடங்கள் கற்க வேண்டியதில்லை. சிறந்த கருத்தும் மொழியறிவும் போதும்

8) அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயானா லும் அதற்கு முதல் பசியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்கவும் சமாளிக்கவும்

9) துன்பத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள். அதை நினைத்து வருத்தபட்டாலும் அந்த துன்பம் உங்களை விட்டு விலகவும் காலம் எடுத்து கொள்ளும்

10) நியாயத்திற்காக வாதாட வேண்டும். அந்த வாதமும் நியாயமாக இருக்க வேண்டும்

11) மெய்யே மெய் இல்லை என்றான பின் மெய்யை மெய் கொண்டு போற்றுவதும் வேண்டுமோ?

12) கண்ணாடியும் அதில் தெரியும் பிம்பம் போன்றது நம் உணர்வும் முகமும். உணர்வு எப்படியோ அதையே பிரதிபலிக்கும் நம் முகம்.

13) பிறர் பார்வைக்கு எப்போதும் நாம் தவறாக தெரிந்தால், தவறு நம் மீது தான். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நாம் தவறாக தெரிந்தால் அவர்கள் பார்வையில் தான் தவறு.

14) அழகு : ரசனையும் ரசிப்பும் கொண்ட இடம்

15) இறந்த காலத்தில் நடந்தவையை நிகழ்காலத்தில் கடப்பதற்குள் எத்தனை வருத்தங்கள், வலிகள்? மறதி ஒன்றே வழி, எதிர்காலத்தை கடக்க.

16) இல்லம் , உறவுகளின் பிணைப்பு உணர்வுகளின் பிரதிபலிப்பு.

17) சங்கிலி போன்றது உறவு. உராய்வு கொள்ள கொள்ள தேயும் சங்கிலியும் உறவும்.

18) நீரில் மிதப்பது துளசியே என்றாலும், ஒருநாளுக்கு மேல் அது தண்ணீரில் இருந்தால் , துளசி அழுகி அந்த நீரின் சுவை மாறிவிடும். அது போலத்தான் உறவுகளும்

19) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்

20) நல்லவனாக இருக்கும் போது பெயரை உச்சரிக்க தவறும் மனித மனம், கெட்டவனாக மாறும் போது மட்டும் வாயை பூட்ட மறுப்பதேன்

21) வெற்றியும் தோல்வியும் சமமே. தோல்வி வாழ்வின் சுடரை ஏற்ற, வெற்றி வாழ்வின் சுடரை மெருகேற்ற

22) உழைப்பிற்கான வேர்வைதுளி அவரவருக்கு தரும் மகிழ்ச்சியான மழைத்துளி

23) பிறருக்கான அழுகையும் வலியும் அவர்கள் உணராத போது அவை என்றும் வீண்.

24) கடந்து விட்ட வாழ்வில் கரைந்து போன நிஜங்கள் என்றும் நினைவுகளே

25) காகிதங்கள் பெட்டகமாகவும் போது அதன் எழுத்துக்கள் பொக்கிஷங்களாகும் பின்னாளில்

26) நம் வலிகளுக்கு மருந்தாகும் அடுத்தவர் வலியை உணர்கையிலே

27) கண் கொண்டு பார்க்கும் காட்சி யாவும் அழகே! அதன் உண்மை மறந்தால் வாழ்வில் பின்னோட்டம்

28) திருப்தி அடையாத வாழ்வு மேன்மை அடைவதில்லை

29) பொறுத்து போகிறவர்களுக்கு சுமை அதிகம். பிறரை காயபடுத்துவோருக்கு மறதி அதிகம்

30) சுகவீனமான போது பக்கம் இருக்கும் ஒளடதம், சுகமான பின் எட்டி வைக்கப்படும்.

31) குளத்தில் எறிவது ஓர் கல்லேயானாலும் அதனின்று காணும் அதிர்வலைகளே கல் எறிந்தவர் கொள்ளும் வெற்றி

32) காலம் பின்னோக்கி சென்றால் நினைவுகளின் நிகழ்வுகள் இருக்கும். ஆனால் அதை உணர முடியுமே தவிர அனுபவிக்க முடியாது.

33) தேவையில்லாத இடத்தில் காய்ந்த சருகாய் இருப்பதை விட தேவையுள்ள இடத்தில் உரமாய் இருப்பது நலம்.

34) ஒன்றை இழந்த பின் அதனால் விளையும் நன்மையை கொடுத்தவரால் சுவீகரிக்க முடியாது

35) கண்ணீர், பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல ; ஆண்களுக்கு விதிவிலக்குமல்ல

36) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்

37) இருட்டில் சில மணித்துளிகள் இருந்தால் அதிலும் ஒரு வித வெளிச்சத்தை உணர முடியும். அதுபோல் தான் வாழ்க்கையும்

38) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்

39) எதுவும் சிறப்பே, பிறரை பார்த்து புன்முறுவல் பூப்பதும் பிறரை சிரிக்க வைத்து பார்ப்பதும்

40) கலைஞன் என்பவன் ஒவ்வொரு நாளும் புது மாணவனே! தான் வடிக்கும் கலையில்

41) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்

42) படித்த நல்லவை யாவும் நம் வழக்கமானால் வடுக்கள் இல்லை

43) உதிர்ந்த , காய்ந்த பூக்கள் கூட மெத்தையாகும் முள் படுக்கையை விட

44) நினைவுகள் அலாதியானது அதை நினைக்கும் தருணம் அமைதியானது

45) அம்மாவின் புடவை திரைச்சீலையானது என் வீட்டு வாசலில் அவளும் சிலையானால் என் மன கோட்டையில்

46) எந்த ஒரு நிகழ்வின் பயணமும் தொடரும் என்பதை அறியாத ஓர் புள்ளியே ஆரம்பம்

47) குறை மட்டுமே தேடினால் காணும் காட்சிகள் யாவையும் பிழையே

48} தன்னை எளிதில் சுருக்கி கொள்வது எழுதுகோல் மட்டுமல்ல அடிபட்ட மனமும் தான்

49) பிறர் உங்களை தூற்றினாலும் அது போலே வாழ்ந்து விடுங்கள். தூற்றலும் ஓர் நாள் தானாகவே மறையும்

50) கிடைப்பது எளிதானால் வளர்ப்பது கடினமாகும்

Thursday, November 21, 2024

படமும் கருத்தும் by Shanmugapriya

 


காலையில் உன் சிந்தை 

கண்ணம்மா  

என் மண்டையில் 

ஓடுதடி கண்ணம்மா 


பார்க்கும் பகல் எல்லம் 

கண்ணம்மா 

உன் போல் காட்சி தெரியுதடி  

கண்ணம்மா 


வாங்கும் மூச்சினிலே  

கண்ணம்மா 

உன் வாசம் தோன்றுதடி  

கண்ணம்மா 


சோற்று பருக்கை எல்லாம்

கண்ணம்மா 

உன் முகம் தோன்றி மறையுதடி 

கண்ணம்மா 


ஆற்றில் குளிக்கையிலே  

கண்ணம்மா 

உன் தேகம் தெரியுதாடி 

கண்ணம்மா 


தூங்கும் வேலையெல்லாம் 

கண்ணம்மா 

கண்கள் ஏக்கம் கொள்ளுதடி 

கண்ணம்மா


(கண்ணம்மாவை பாரதியிடம் 

கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)


----பிரியா

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...