Saturday, August 31, 2024

தாக்கம் ஏக்கம் by Vidhya Nivash



 சமீபத்தில் படித்த, பார்த்ததில் தாக்கம்.இங்கே கேள்விகளாக..

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் என்ற புத்தகம்.அதில் பல குரல்கள் பேசின.இந்த தலைப்பில் எத்தனை அர்த்தங்கள். 

அதில் இரும்பின் சிரிப்பு என்ற சிறுகதை.தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணின் பயம் எப்பேர்ப்பட்டது.சில பயத்திருந்து காத்துக்கொள்ள ,ரோமானிய இளவரசிகள் அணிந்த இரும்பு காப்பை வாங்கி அணிகிறாள். இது அடிமை தனத்தின் உச்சக்கட்டம் என ,அதிலிருந்து விடுபடுகிறாள். சிலநேரம் தனிமை எவ்வளவு கோழையாக்குகிறது. 

சமீபத்தில் பார்த்த படங்கள் அடிமை தனத்தை விடுத்து படித்து ,பறக்க துடிக்க சொல்லுகிறது. அப்படியும் போராடி வரும் பிஞ்சுகள் ஏன் நசுக்கப்படுகிறது. பெண் கொடுமைகள் மேலோங்கும் அவலம்.படித்தும் மங்கும் மனித நேயம்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


தாங்கி பிடித்தாலும் உண்மை பேசாது, மௌனமாய் கொல்லும்

 தாங்கி பிடிக்கும் கரங்களும் ஓர் நாள் பலமிழக்கலாம். அதற்குள் உண்மை பேசி, நல்லதை காண முடியாவிட்டாலும் அடுத்தவரின் பார்வையை மாற்ற இயலாத போதிலும் நம் கண்களை இறுக மூடுவோம், அடுத்தவரின் தவறை எண்ணாதவாறு

ஓர் புதிய முயற்சி புத்தாண்டின் முதல் நாளில்

கொள்ளும் நல்ல எண்ணம் மட்டுமே சிறக்கும் என்பதால்

விழி மூடி கொண்டு செய்த சிந்தனையால் 

இறுதியில் எண்ணம் கரைந்தது தான் மிச்சம்

சரி எது ? தவறு எது?

என்பது தெரியாமல்

உண்மை இது! பொய்மை இது!

என்பது விளங்காமல்

இருக்க

பிறரிடத்தில் பகடைக் காயாகி

அச்சத்தில் மொத்தமாய் எனை நான் மாற்றிக் கொள்ள 

ஏளனம் மட்டுமே விஞ்சியது,

கண்மூடித்தனமான வார்த்தையும் வாழ்க்கையும் சிறக்காது 

என்ற பேச்சால்

தாங்கும் கரங்களே இப்படி உரைத்த பின்னால்

கண்ணாமூச்சி ஆட்டமும் தேவையா?

விழியின் முடிச்சை அவிழ்க்க கரங்களின்

உதவியும் தேவை தானே?

உண்மை அறிந்தேன்,

விழி மூடினால் மட்டும் 

விமர்சனம் குறையாது

செவியும் மூட வேண்டியே உத்தரவிட்டேன் என் கரங்களுக்கு.

நல்லதை காண விழியும் செவியும் கரங்களோடு ஒன்றிணைய

தீயவைக்கும் தேவைதான் இந்த கூட்டணி

அனைத்தையும் மறைக்க, மறுக்க, மறக்க

அதனால் வாழ்வு சிறக்க

தோற்றம் மாறினாலும் இதயத்தின் அளவு

ஒன்றே தான் என்பதை

மனதில் கொண்டு 

தேவைக்கு மட்டும் விழியை திறப்போம்

எண்ணத்தின் முயற்சியில் கரைந்தது ஆண்டின் இறுதி நாளும்

அடுத்தும் முயற்சிகள் தொடரும் என்ற நம்பிக்கையோடு

Friday, August 30, 2024

பழமை மறக்கா புதுமை by Vidhya Nivash

 


பலரின் குருதி வியர்வையாக வடிய நிலத்தில் விளைந்த பொன்மணிகளை சேமித்து வைத்த அட்சய பாத்திரம். 

இருட்டில், வீட்டின் கடைசி அறையில் பொக்கிஷசமாக பல தலைமுறை கண்ட புதையல்.

இன்று புதுமையில் பழமை வீட்டின் முன் அலங்கரிக்க அல்ல.பூமியில் விளைந்ததை சுமந்த கலம் இன்று வானில் இருந்து சிந்தும் பொன்துளியை சேமிக்கும் மழைநீர் தொட்டி.

சேமிப்பின் அடையாளம் மண்ணில் விண்ணில் சிதறியன காக்கும் பூதம் இந்த தானியக்குதிர்.

மண்கலம் பொன்கலம் போல் மின்னுதே!


படமும் கருத்தும் by Veena Shankar

  


எந்த பாரத்தை சுமந்தாலும் வரும் சோகம், அதில் குடும்பம் விலக்கு

தேடி தேடி சேர்க்கும் செல்வங்கள் யாவும் சுமையே! மனமும் உடலும் பலவீனபட்டால்

தன் பாரத்தின் வலியை குடும்பம் உணரக் கூடாது என்று நினைத்தோ ஏனோ தலைவன் பாரத்தை தன் தோள் மேல் சுமந்தான்

இதில் எதை விடுக்க?

எதிலிருந்து விடுபட?

தன் சுய தேவைக்கு ஓர் மனைவி

அவளோடு மகிழ்ந்து வாழ ஓர் வீடு

அவளோடு மகிழ்ந்து வாழ்ந்ததற்கு அங்கீகாரமாய் பிள்ளைகள்

பிள்ளைகளின் எதிர்பார்ப்பிற்கு ஓர் ஊர்தி

இத்தனையும் சுமந்தாலும் பிறக்கிறது வெறுமை

உரியவர்களிடமிருந்து 

கரம் தாங்கியது காணாது என்று

தோளும் உயர்ந்த்து அவன் தன் தோல் சுருங்கும் வரை

உணர்த்தியது பல பாடங்கள்

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

அதுவும் அவனுக்கு பொற்காலமே!

Wednesday, August 28, 2024

இதில் எது ஓவியம் by Veena Shankar



இதில் எது ஓவியம்


கண்ணில் ஓடும் குதிரையா?

குதிரையின் பிடரியின் வடிவம் கண்ணா?


கண் கொண்டு நட்சத்திரம் காணா வேளையில் கண்ணிலும் நட்சத்திரம் ஒளிர்கிறது

அறிவியலின் விந்தையை அறிவு பயன்படுத்தியது


 மண்ணில் ஓடும் குதிரை இங்கு கண்ணில்

கண் வடிக்கும் நீரோ மண்ணில்


ஓட்டப் பந்தயத்தில் இருவர்,

ஒருவர் கால்களை நம்பி

மற்றொருவர் கண்களை நம்பி

நாம் அவர்களின் கலையை கொண்டோம் விரும்பி

படமும் கருத்தும் by Veena Shankar

 


 இரு கை விரல்கள் காணாது என்று மெய் முழுதும் 

விரல்களால் மனிதனை அணைத்து கொள்ளும் மரத்தினை  

தன் கரங்கள் கொண்டு ஒடுக்கி , அதை ஆண்டு அனுபவித்து,

 இறுதியில் வெட்டும் மன நிலையில் இருக்கும் மனிதன்,

எப்போது தான் மாறுவான்?


 பசுமையை அணைத்து பழமையை மறந்து

பகையை வளர்க்கும் மனிதன்

Tuesday, August 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


மீனின் கண்ணீரும் கரிக்குமோ?

பூமியில் உள்ள மனிதனுக்கே கண்ணீர் கரிக்கிறது என்றால் கடலில் வாழும் மீன் எம்மாத்திரம்?

 வறண்ட பாலையிலும் சுரக்கும் குளம்

அதுவே மீன் குஞ்சுகளுக்கு வாழும் இடம்

 கண்ணீரில் நீர் இருப்பதால் தான் ஏனோ கண்ணீரிலும் ஓர் வாழ்வு

தாயின் கண் நீரிலும் ஓர் புது வாழ்வு

ஓர் தாயின் தியாகம் தன் குஞ்சுகளுக்கு மட்டுமல்ல, நீந்த தெரிந்த எவருக்குமே

கரை புரண்டு ஓடினாலும் வரும் தண்ணீர் பஞ்சம் ஆங்கே


தானாய் வரும் கண்ணீரை

திரை கொண்டு மூடவும் முடியாதே


தண்ணீர் உடல் தாகம் தணிக்கும்

கண்ணீர் மன சோர்வு தீர்க்கும்


தண்ணீர் உயிர் வாழ வைக்கும்

கண்ணீர் உயிர் நீத்த பின் உயிர்க்கும்


தண்ணீரும் கண்ணீரும் இயல்பில் வேறென்றாலும் அடிப்படையில் வாழ்வை எதிர்நோக்கவே

மழை நீர் எல்லாம் வடிகால் இல்லாமல் நேரே கடலில் கலந்ததால் வந்தது நீர் வறட்சி, மீனும் தத்தளித்தது

தன் குஞ்சுகளை காப்பாற்ற தன் பெருகும் கண்ணீரை வடித்ததோ?

Monday, August 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மலர்ந்த இருவர் முகத்தில் முத்தாய் மிளிர்ந்த ஒளி விளக்குகள் 

தேடவும் சொல்லுமோ ஆழ் மனதை

 தூண்டவும் செய்யுமோ பாடும் கவியை

கொள்ளவும் விழையுமோ பரமன் அவன் அன்பை

இந்த பாமரனும் இலக்கணம் அறியாமல் பாடவே


அடி தொட முடியாத அவன் இடத்திற்கு ஒளி விளக்கிலே பாதை , அடி தொட்டு விட்ட பின் அவன் என்னுள் புக, நானும் ஒளிர்ந்தேன் அவன் வெளிச்சத்தில்

Friday, August 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


இரவின் மடியில்

பகலின் நிழலில் 

நிலவின் ஒளியில்

கடலின் அலையில் 

நீரலையின் இசையில்

மணலின் குளுமையில்

காற்றின் வேகத்தில்

வானத்தின் நடிப்பில்

காதலின் பிடியில்

இளமையின் ஆனந்தத்தில்

படகின் பதிவில்

ஓர் ஆட்டம் ஆங்கே

எதற்கும் அஞ்சா

நெஞ்சங்கள் இரண்டு

எவரும் காணா 

குதூகலம் கொண்டு

பிறந்த மழலையின்

பேச்சு போலே

வார்த்தைகள் வர மறுத்து நின்றாலும்

மறைத்து வைக்க

முடியாத காதல்

அரங்கேறும் நேரமும் இதுவோ?

தனியே வந்த கூட்டனி 

திரும்பி செல்லும் போது

பல நினைவுகளை 

நெஞ்சில் சுமந்து

பிரிவு கொள்ளா

நிலையோடு வாழ்ந்தால்

சுகமே!

என்றும் இணையோடு அசை போட


 

Thursday, August 22, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஒற்றை விரல் பற்றுவதில் இல்லை ஆனந்தம்,

பற்றிக் கொண்டது விட்டு விடாமல் காப்பதே ஆனந்தம்

உறவு மேம்பட தேவை

அன்பும் சகிப்புத் தன்மையும்


இந்த பிஞ்சு விரல்களை பற்ற நான் கொண்ட தவமும்

பிறரின் தேவையற்ற பேச்சுக்களும் என்னை நிலைகுலைய செய்ய

என் அகப்பையில் உனை நான் கொண்ட போது கூட மௌனமே விடையாய் இருந்தேன்

உன் ஆவி இந்த பூமியை அடையும் வரை

நிலவின் ஒளி போல் நீ என் வீட்டுத் தோட்டத்தை அலங்கரித்த போதும் உனை தீண்டவும்

மெய் மறந்தேன்

எதன் பலனாய் எது என்று தெரியாத போதும் ராசாவின் இதழை கொண்டது உன் பிஞ்சு விரல்கள்

எட்டி எட்டி நீ வைக்கும் நடைக்காக காத்திருந்த காலம் கை கூடியதும்

எட்ட நின்று உனை ரசிக்கவும் நான் படித்தேனே!

பெரு வினா கூட என்னில் சிறு வினாவாகியது

பெறுவது கடினம் என்பது பெற்றவருக்கே தெரியும்

Tuesday, August 20, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


முன் கொண்ட வேலையில் வெறுமை  


ஆகையினால் வீட்டில் வறுமை


கொண்டதாலும் பெற்றதாலும் வந்தது கடமை


அது நீங்க கொண்டேன் பொறுமை


அதற்கு மூலதனமானது என் திறமை


இதனால் மதிப்பில் சிறுமை


அழைக்க வைத்தது ஒருமை (யில்)


இருந்தாலும் அகண்டது வீட்டில் கருமை


சோடை போகாதது என் மண்ணில் என் உரிமை


தாகம் நீங்க அடுத்தவர் மனம் சொன்னது கபடமில்லாது அருமை

Saturday, August 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 உன் விழியை நான் கண்டால் மிரண்டு விடுவேன் என்று நினைத்தாயோ?

விழியே இல்லையென்றாலும் உனக்கு விழியாய் நானிருப்பென்

 எவர் விழி எவரோ?

எதன் மையம் எதுவோ?

அகண்டது மனது

சுருங்கியது தேகம்

தேய்ந்தது பார்வை

பூவையின் விழியில்

என் பார்வை 

காண்பதும் அறிவோ?

நானும் நானல்ல 

விழியை மறைத்ததால்

மூடியவை திறந்து

என் முன் காட்டு

விழியும் விழியும் கொள்ளை கொள்ளட்டும்

அவள் கண்ணை அவள் பூட்டிக் கொண்டாலும் கண்ணாடி எனும் மந்திரச் சாவி அவளிடம் கண்டேன், என் மனதை சிரமமில்லாமல் அவள் அறிந்து கொண்டு பிரதிபலித்ததாலே!

Thursday, August 15, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


சிரம் தாழ்த்தி பிறருக்கு கரம் கொடுக்கும் செல்வம் புறம் தெரியக் கூடாது


இரு கரங்கள் சேர நிறம் தேவையில்லை,

 நிறங்கள் அந்நியப்பட்டுவிடும் மனம் சேருகையிலே,

மனமும் ஒன்றுபட்டுவிடும் உடல்கள் ஈர்ப்பதிலே,

உடலும் அந்நியப்படும் உயிர் துறக்கையிலே

உயிரே துறந்த பின் யாவும் மண்ணே!

மண்ணும் காண்பதில்லை உயிர்களின் நிறத்தை

Wednesday, August 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தணியா தாகத்தில் இருந்து

அறிவுப் பசியால் தானே வளர்ந்து

அதீத புத்தியுடன் கூர்ந்து

அடுத்தவரின் பார்வையும் அறிந்து

எதிலும் தன் திறமையை சார்ந்து

எறும்பு போல் காலத்திற்கேற்ப ஊர்ந்து

அழகு வார்த்தைகள் மிகுந்து

நிலவு போல தெளிவாய் மிளிர்ந்து

கொண்ட அனுபவத்தில் சிறந்து

உறவிற்கு கை கொடுத்து சேர்ந்து 

அதனின் தேவையில்லா குற்றங்கள் எழுந்து 

நீயும் தன்னம்பிக்கை இழந்து 

சுய சோதனையில் நீயும் கரைந்து

குழப்பத்தில் மனம் சோர்ந்து

காலத்தால் குழப்பங்கள் எளிதில் தீர்ந்து

பால் போன்ற உன் மனதை திறந்து 

சொல்லும் செயலும் தெளிந்து

என்றும் மனம் மலர தனிமையே மருந்து

நீயம் தவறென்றால் உனை மாற்றி திருந்து 

நிலையில்லா ஆசையை என்றும் துறந்து

வலிமையுள்ள துக்கத்தையும் இயல்பில் மறந்து 

பலகலையும் உலகில் உண்டென தெரிந்து

மாசில்லாமல் அவற்றைக் கற்று தேர்ந்து

வானில் புள் போல் பறந்து

பூமி பந்தில் ஆனந்தமாய் பரந்து

பிறரின் தேவைக்கு கபடமில்லாமல் வரிந்து

என்றும் உனக்கான அடையாளம் பெற உடலால் வருந்து

எப்போதும் உன் ஆளுமையில் விரிந்து 

சுலபமாய் கைப்பற்ற கிடைக்கும் விருந்து

என்றும் எண்ணத்தில் புதிதாய் பிறந்து 

நேர்மறை சிந்தனை மட்டுமே சுரந்து 

எந்நாளும் மனதில் மகிழ்ச்சி தேனை இன்பமாய் அருந்து

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கண்களில் மயங்கியது நாசியில் மலர்ந்தது

 காத்திருந்து பூத்தது தங்கத்தின் விலை சரிவால்

 செவியின் இரு துளைகளுக்கு இது போட்டியோ? 

ஒற்றைக்கல் மூக்குத்தியே அடுத்தவரை தன் பக்கம் ஈர்க்கும் போது இதுவும் அழகே!

துளைக்கும் போது அழுத்தம் இருந்தாலும் காணும் போது அதன் அழகால் ஆனந்தமே!

படைப்பவனின் ரசனைக்கு இதுவும் ஓர் உதாரணமே!

சத்தமில்லாத வைப்பு தொகையோ இது?

ஒளிரும் கண்களுக்கு கீழே மிளிரும் மாயம் என்ன? அணிந்தவனை விட காண்பவனுக்கே காட்சி அழகு

ஒருவேளை வருத்தத்தில் 

சிந்தும் கண்ணீரும் இங்கே பட்டு செல்வதால் நாசியும் அறியும் அணிபவனின் மன வேதனையை

எத்துணை கொண்டாலும் இத்துணையும் அழகே பெண்ணிற்கு

அணிய மறுத்து அடம் பிடித்தாலும் ஆசை வந்து மெல்ல மனதை வருட இறுதியில் அதுவும் அடைக்கலம் பெண்ணிடம்

தேவையில்லாத எதுவும் இல்லை நம்மிடம் 

நம்மை அழகாய் நேர்த்தியாய் உயர்த்திக் காட்டவே நம் கலாச்சாரம்

 தந்திர பார்வைக்கு மத்தியில் ஓர் மந்திரக் கல் நாசியில்

Monday, August 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



பொதி சுமப்பவன் இங்கே தனியாக


காதல் வலையில் சிக்கினானா?


சங்கம் தொடங்க திட்டமா?


லஞ்சம் கேட்க ஆலோசனையா?


துணையிடம் பூசலா?


சலவை இயந்திரம் ஒழிக்க சிந்தனையா?


வரும்படி இல்லாததால் முதலாளி நீக்கினாரா?


 என்னை போல் ஒருவன் இங்கே


(குடும்ப) சுமையை சுமக்க

(யாரிடமும்) உணர்ச்சியற்று தோற்க

(எவரும்) ஏளனமாய் சிரிக்க


இருந்தாலும் என் நிலை பரவாயில்லை,

இந்த மனிதன் தான் என்னை போல் காலால் உதைக்கவும் தெரியாமல் அன்பு,

பாசம் என்று அடிமையாகிறான்

Saturday, August 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பூ ஒன்று புயலாகவும் மாறுமா?

புரிந்தவர்களுக்கு பெண்மையாகவும் தோன்றுமா? 

காதலியை கவர பரிசாகவும் இருக்குமா?

கடற்கரையில் நின்ற போதும் கரையில் இருப்பவரையும் நோக்குமா?

 தேடியது அடையப் பெறாமல் தீண்டினாள் கடலை

முத்தமிட்டாள் கடல் அலையை

கடலும் கரை சேர்த்தது 

தான் காதலுக்கு எதிரியல்ல என்பதை வலியுறுத்தியே!

வானமும் கடலும் காதலிப்பதால் வானின் நீலம் கடலில்

கடலின் வெண்மை வானத்தில் வெண்மேக் கூட்டமாய்


 மௌனம் உன்னை திருத்தும்


எதிர்மறையாக சிந்திப்பதிலிருந்து


அதிகமாக பேசுவதிலிருந்து


இன்னும் ஆழமாய் சிந்திக்க வேண்டி


தெளிவான கருத்தை முன்னிறுத்த வேண்டி


பொறுமையை கடைபிடிக்க வேண்டி


இது யாவும் ஆலோசனையே அடுத்துவருக்காக நம்மிடம் சொந்தமாக பிறந்தது, பிறப்பது

Friday, August 9, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 சுமையை சுமக்க கல் போல் உறுதியான மனிதன், அவன் கையில் ஓர் துணியும் போதும்

 துணியும் துணிவும், துணையும் இருந்தால் பாறை கல் என்ன துளி விஷம் கூட தூளியில் உல்லாசமாய் உறங்க வைக்கும்

 குடும்பத்தை தாங்கும் பாரத்தை விடவா வலியது இந்த பாறை


இப்படிக்கு

நடுத்தர வர்க்க இளைஞன்


 கஷ்டப்பட்டு உழைப்பில் கிடைத்த செல்வத்தை 

சாராயக் கடையில் இழக்கும் அவலம் இங்கே

இழப்பீடு தொகை பெரியது என்பதாலோ 

ஏனோ அவனும் தன் உழைப்பை அங்கே

 தொலைத்தான் 

ஆயுள் முழுவதும் உழைத்து பெறாத பணத்தை 

தன் உயிர் மாய்த்து குடும்பத்திற்காக 

 கிடைக்க செய்தான். 

அப்படி உயிர் விட்டவனுக்கும் மாலையும் மரியாதையும்

 வேண்டும் என்று வலியுறுத்தும் கட்சிகள்  

இருக்கும் வரையில் ஏழையின் உயிர், பணத்தின் முன் அற்பமே!

Thursday, August 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


நிலவின் வெளிச்சத்தைக் கூட நித்திரை  

கொள்ளச் செய்யும் விழிகள் நான்கு


கடல் அலையின் சப்தத்தை கூட மிகைப்படுத்தி காட்ட


நா உறவாட நினைக்கும் வேளையில் வார்த்தைகள் மறந்து


பிரிந்த உள்ளங்கள் இணைந்து


அக்னிசாட்சியாய் கட்டிய மஞ்சள் கயிறு 

 

இன்று நிலவின் சாட்சியால் மெய்கள் உறவாட கொண்டதே கோலம்


கண்டு கேட்டது கூட மறந்து போக

 

கிடைத்தது புதிய முகம் இருவருக்கும்


அதனின்று விடையாய் கிடைக்கப்போவதும் ஓர் புதிய முகமே!


இடைவெளி சிறிது என்றாலும் மனதால் இடைவெளி வாராது காக்கவே காதல் தேவை எல்லா உயிர்களிடத்தும் 

கோடு போன்ற விரிசல் கோடிடிட்டு காட்டும் வகையில் இல்லாமற்

தொடு வானம் போல் இருப்பது சிறப்பு

Tuesday, August 6, 2024

அவள் by Kiruthika

 


அவள்..

ஒரு அழகு பெட்டகம்..

புறத்தால் மட்டும் அல்ல...

அகத்தாலும் கூட தான்..!...


அவன் -

அவளை புரிந்து கொள்ள ..

பொறுமை காத்தாள் ...!


அவன் -

கோபத்தை ..

அவள் அமைதியால்..

தாங்கி கொண்டாள்..!..


அவன் -

பசி எனும்போது மட்டும்..

தானும் உண்டாள் !...


அவன் -

கனவையும் 

சேர்த்து ..

அவள் கண்டாள்..!...


எல்லாம் செய்தும்..

அவனுள்..

அவளை-

கண்ட அவளை!...

ஏனோ -

அவன் கண்டு 

கொள்ள வில்லை ...!..

இதில் என்ன இருக்கு -

என்பது போல் !...


அவள் எழுதி முடித்தால்..

தலைப்பை இப்படி -

"கல்யாணம் ஜெயித்தது ..

காதல் தோற்றது" !..

என்று !!!!...

படமும் கருத்தும் by Veena Shankar

 


 எலும்பில்லாத நாவின் விளைவால் எலும்புக் கூடாய் மாறியது தேகம் மட்டுமல்ல மனமும் தான்


அப்பா 

அன்பின் அடையாளம் மட்டுமல்ல

அறிவின் அடையாளம் மட்டுமல்ல

தெளிவின் அடையாளம் மட்டுமல்ல

உழைப்பின் அடையாளம் மட்டுமல்ல

தேகத்தின் மெலிவிலும் அவர் நம் பாசத்தின் அடையாளம்


நான்கு கால்கள் கொண்ட நாற்காலியை விட உறுதியானது இந்த இரண்டு கால்கள் உள்ள எலும்பு தேகம், தந்தை எனும் வடிவில்


எலும்பு மட்டுமே உள்ளவனின் உழைப்பு எலும்பில்லாத பலரின் வார்த்தைக்கு செவி மடுக்காததால் உயர்ந்து நிற்கிறது


தேகம் மெலிந்தாலும்

மனம் களைத்தாலும்

வயிறு பசித்தாலும்

உடை மறுத்தாலும்

நடை மறந்தாலும்

உணவு சிறுத்தாலும்

சினேகம் சிதறினாலும் 

வரவு குறைந்தாலும் 

தனிமை கொன்றாலும்

துணையின் பிரிவினாலும்

பார்வையில் கோலாறானாலும் 

வயது முதிர்ந்தாலும்

உழைப்பு நின்றாலும்

அவர் உழைத்த கால்களில் நிற்கும் தூண்களே நாம்

அவரை தாங்கிப் பிடிக்க நினைக்கும் ஓர் உயிர்

அவரே அப்பா எனும் விதை

Sunday, August 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மௌனம் உன்னை திருத்தும்


எதிர்மறையாக சிந்திப்பதிலிருந்து


அதிகமாக பேசுவதிலிருந்து


இன்னும் ஆழமாய் சிந்திக்க வேண்டி


தெளிவான கருத்தை முன்னிறுத்த வேண்டி


பொறுமையை கடைபிடிக்க வேண்டி


இது யாவும் ஆலோசனையே அடுத்துவருக்காக நம்மிடம் சொந்தமாக பிறந்தது, பிறப்பது

படமும் கருத்தும் by Veena Shankar



 பூ மலர்ந்தது  

நுகரும் வண்டின் வரவை தேடி 

தோட்டத்து பூ காத்திருப்பது அல்லாது 

பாவையும் ஏங்கி நின்றாள்

தானும் மலர

கையில் இருப்பு இல்லையெனில்

வாழ்க்கையும் காத தூரம்

வரனும் வரணும் நல்வரவோடு என்றிருக்க

காலம் கடந்த பின்

காதல் பிறக்குமா?

வந்தவன் கொண்ட பின்னும் காதல் பரிசாய் பிஞ்சும் 

உதிக்குமா?

உதித்த பிஞ்சு வளர

உடலில் ஆரோக்கியம் கொள்ளுமா?

காதல் கரங்கள் பற்றினால் மட்டுமே

பிஞ்சுக் கரங்கள் நெஞ்சை வருடும்

அதன் சிரிப்பால் 

பிறப்பு கொடுப்பதில் மட்டுமல்ல

 படைப்பவனின் கடமை

நன் முறையில் வளர்ப்பதிலும் உண்டே!

இவள் ஏக்கம் தீர

மணவாளன் வரும் 

நேரமும் நாளும் எதுவோ?

பத்திரிக்கை கூட தேவையில்லை

பாந்தமாய் பத்திரமாய் கைகள்

இணைந்தால் மட்டும் போதுமே!

போதும் என்று

 சொல்லுமோ இந்த உறவும் பந்தமும்

இறுதி வரை நடை பயிலும் மனங்கள்

திருமணத்தில் ஒன்றிணைந்தால்

வரமும் வரும்படியே இக்கலி காலத்தில்

Thursday, August 1, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


குழந்தை பருவத்தில் இயல்பிற்கு எதிரான குணத்தை புகுத்தி சிறகை ஒடிப்பதும்


பள்ளிப் பருவத்தில் பிடித்த பாடத்தை படிக்க முடியா வண்ணம் சிறகை ஒடிப்பதும்


வளர் பருவத்தில் தனக்கு நடக்காமல் போன பருவத்து ஆசைகளை திணித்து சிறகை ஒடிப்பதும் 


விடலை பருவத்தில் காதல் எனும் சிறகை தேவையில்லாமல் ஒடிப்பதும்


கற்ற கல்விக்கான வேலை தேடிக் கொள்ள அவகாசம் கொடுக்காமல் சிறகை ஒடிப்பதும் 


மணமான பின் சுதந்திரத்தை படித்து சிறகை ஒடிப்பதும்


ஒடிந்து போன பல்லியின் வால் மீண்டும் வளர்வது போல ஆசை சிறகுகள் துளிர அதை மீண்டும் மீண்டும் வெட்டி அறுக்கும் உரிமையை அடுத்தவருக்கு யார் கொடுத்தது?


சிறகு ஒடிந்த பறவையும் மேலெழும்பி பறக்கும் தன் தீவிர முயற்சியால்

 கத்திரிக்கோலின் முனை கூர்மையாக்கப் படுகிறது பரந்து விரிந்த சிறகில்,

பாரம் தாங்காமல் தவித்த பறவைக்கு தேவை இலகுவான சிறகு, அது சிறகை வெட்டுவதால் மட்டுமே சாத்தியம்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...