Wednesday, August 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தணியா தாகத்தில் இருந்து

அறிவுப் பசியால் தானே வளர்ந்து

அதீத புத்தியுடன் கூர்ந்து

அடுத்தவரின் பார்வையும் அறிந்து

எதிலும் தன் திறமையை சார்ந்து

எறும்பு போல் காலத்திற்கேற்ப ஊர்ந்து

அழகு வார்த்தைகள் மிகுந்து

நிலவு போல தெளிவாய் மிளிர்ந்து

கொண்ட அனுபவத்தில் சிறந்து

உறவிற்கு கை கொடுத்து சேர்ந்து 

அதனின் தேவையில்லா குற்றங்கள் எழுந்து 

நீயும் தன்னம்பிக்கை இழந்து 

சுய சோதனையில் நீயும் கரைந்து

குழப்பத்தில் மனம் சோர்ந்து

காலத்தால் குழப்பங்கள் எளிதில் தீர்ந்து

பால் போன்ற உன் மனதை திறந்து 

சொல்லும் செயலும் தெளிந்து

என்றும் மனம் மலர தனிமையே மருந்து

நீயம் தவறென்றால் உனை மாற்றி திருந்து 

நிலையில்லா ஆசையை என்றும் துறந்து

வலிமையுள்ள துக்கத்தையும் இயல்பில் மறந்து 

பலகலையும் உலகில் உண்டென தெரிந்து

மாசில்லாமல் அவற்றைக் கற்று தேர்ந்து

வானில் புள் போல் பறந்து

பூமி பந்தில் ஆனந்தமாய் பரந்து

பிறரின் தேவைக்கு கபடமில்லாமல் வரிந்து

என்றும் உனக்கான அடையாளம் பெற உடலால் வருந்து

எப்போதும் உன் ஆளுமையில் விரிந்து 

சுலபமாய் கைப்பற்ற கிடைக்கும் விருந்து

என்றும் எண்ணத்தில் புதிதாய் பிறந்து 

நேர்மறை சிந்தனை மட்டுமே சுரந்து 

எந்நாளும் மனதில் மகிழ்ச்சி தேனை இன்பமாய் அருந்து

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...