Wednesday, September 30, 2020

படித்ததில் பிடித்தது by Akhiladevi Kumaran

 


சீடர் : விஷம்?


ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான் விஷம். அது அதிகாரமாக, செல்வமாக இருக்கலாம் அல்லது அன்பு,வெறுப்பு ,பசியாக கூட இருக்கலாம் .


சீடர் :பயம் ?


ரூமி : நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது பயம். நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும்போது அது சாகசம் ஆகிவிடும் 


சீடர் : பொறாமை ?


ரூமி : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே பொறாமை. அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அவர் உனக்கு உத்வேகத்தை தரக்கூடியவராக மாறிவிடுகிறார் 


சீடர் : கோபம் ?


ரூமி : நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது கோபம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது அது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது 


சீடர் : வெறுப்பு ?


ரூமி: இன்னொரு மனிதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பது வெறுப்பு. நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ளும்போது அது அன்பாகிவிடுகிறது.


மூதாதை ரூமியின் பிறந்த தினம் இன்று.

உடையார் பாகம் மூன்று முடிவு சுருக்க விளக்கம் by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

பிரம்மராயர் கண்டிப்பாக போர் வரும் அப்பொழுது தான் இங்கே இருக்கும் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.


அரண்மனை வாசலில் சேரியில் இருந்து மக்கள் வந்து பறை இசைத்து, அவர்களுடைய மகிழ்ச்சியை கோயில் கட்டுவதற்கு தெரிவித்தனர். அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அந்தணர்களிடம் நெல் கொடுக்கும்படி கூறுகிறேன் என்று உத்தரவிட்டார்.


அவர்கள் இந்த செய்தியுடன், அக்ரஹாரத்தில் சென்று அந்தணர்களிடம் கேட்டனர்.அவர்கள் நமக்கு வரியும் விதிக்கப்பட்டது .பல சலுகைகளும் தள்ளுபடி செய்யப்பட்டது இந்நிலையில் இது வேறயா!! அப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே, அங்கே பிரம்மராயர் ஒற்றன் வைணவதாசன் அங்கே செல்கிறார்.


மன்னரின் உத்தரவின் பெயரில் நீங்கள் நார்த்தாமலையில் கணக்கெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களால் அதெல்லாம் முடியாது. நாங்களும் கூலிக்கு வேலைக்கு சென்றால் எங்களுடைய குலத்தொழில் என்ன ஆகும் .எங்களை யார் மதிப்பார்கள் எங்களால் கண்டிப்பாக கூலிக்கு வேலை செய்ய முடியாது. வேதத்திலும் அது தவறு என்று குறிப்பிட்டு இருக்கிறது என்று வாதாடினார்கள்.


திருமுனைப்பாடி நாட்டில் இருந்து வந்த ஐந்நூறு அந்தண இளைஞர்கள் வெறும் கோமணத்தோட வந்தனர் .அதைக் கண்ட அந்தணர்கள் எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கேட்டார்கள் .நாங்கள் தஞ்சைக்கு பிழைக்க வந்திருக்கிறோம் என்றார்கள் .தஞ்சை செழிப்பான பூமி என்று கேள்விப்பட்டிருக்கிறோம் .அப்படியா நாங்கள் பிழைக்க வேண்டாமா?? நீங்கள் இங்கே வந்து விட்டால் நாங்கள் எப்படி பிழைப்பது. உடனடியாக உங்கள் சொந்த ஊரை நோக்கி செல்லுங்கள் என்று அதட்டினார்.


திருமுனைப்பாடி அந்தணர்களை அழைத்து வந்த தொண்டை நாட்டு அந்தணர்களும் என்ன செய்வதென தெரியாமல். அரசரிடம் சென்று முறையிடுவோம் என்று கேட்டார்கள். அதற்கு அதில் இருந்த சில இளைஞர்கள் நாங்கள் இங்கே வளமாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வந்தோம் .இந்நிலையில் நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராக இல்லை. மன்னரை சந்திக்கவும் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி. ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் அன்றிரவு தங்கினர். அங்கே ரோந்து வந்த காவல்படையினர் மூலம் அந்த செய்தி அருண் மொழிக்கு சென்றது.


அவன் அவருடைய தந்தை பிரம்மராயர் இடம் ஏன் நாம் இவர்களை கணக்கு பணிக்கு ஈடுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று வினவினான் .அங்கே சென்று அந்த இளைஞர்களிடம் பேசினார்கள். நாங்கள் ஈசான சிவ பண்டிதர் கூறியதால் இங்கே வந்தோம்.தஞ்சை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் .நாங்கள் பல விஷயங்களை இதுவரை கண்டதேயில்லை. இங்கே பார்த்து ஆச்சரியம் அடைந்தோம் .கணக்கு பார்ப்பது எங்களுக்கு தெரியாது .நீங்கள் கற்றுக் கொடுத்தால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று பணிவுடன் கூறினார்கள்.


நார்த்தமலையிருந்து வந்த குணசீலன் ஓவியன் சீராளன் இடம் சென்று தேர் செய்வதற்கான படத்தை வரைந்து எடுத்துக் கொண்டு. நேரடியாக கம்மாளர்களிடம் சென்று புதிய தேரை உருவாக்கினான். அதை முதலில் பெருந்தச்சர் ஓட்டி பார்த்தார். பிறகு அருண்மொழியும் இளவரசரும் ஓட்டினார் .ஒவ்வொருவரும் ஆச்சரியப்பட்டனர், இது இருந்தால் என்னால் எளிதாக காஞ்சிபுரத்திற்கு சென்று வர முடியும் என்று இளவரசர் பெருமைப்பட்டார். அனைவரும் குணசீலனை பாராட்டினார்கள்.



கருவூர்தேவர் அரண்மனைக்கு சென்றார். அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் அரசரிடம் பேசினார் கடைசியாக சந்திரமல்லி வந்தவரை. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன் உடல் நலத்தை பார்த்துக் கொண்டு ,கோயில் வேலையை திறம்பட செய்.ஆசிர்வதித்து விட்டு வந்த விஷயம் யாருக்கும் தெரியாத வண்ணம் அங்கிருந்து புறப்பட்டு விட்டார் .


அதைக்கண்டு பஞ்சவன் மாதேவியும் பெருமைப்பட்டாள் எப்பேர்பட்டவர் நீங்கள் உங்களுடைய குருநாதர் உங்களையே தேடி வந்து அக்கறையாக பேசி விட்டுப் போகிறார்.


மறுநாள் காலையில் தஞ்சை மற்றும் குடந்தையில் இருந்து அந்தணர்கள் வந்து அரண்மனை வாசலில் வேதம் ஓதினார்கள்.பஞ்சவன்மாதேவி இதை சென்று அரசரிடம் சொன்னாள்.அவர் கோபமடைந்து இந்த வேதத்தை கோயில் கட்டும் இடத்தில் சொல்ல சொல் சரியான தட்சணை கொடு என்று கூறிவிட்டார் .


பஞ்சவன்மாதேவி ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள் என்று கேட்டாள்.அவர்கள் தமிழுக்கும் ,சைவத்திற்கும் எதிரியானவர்களுடன் கூட்டு சேர்ந்து விட்டார்கள். என்று கோபப்பட்டார் முன்பே ஒரு நாள் வேதாகமங்களை போற்றுங்கள் அது போதும் என்று கூறியது இன்று எனக்கு ஞாபகம் வருகிறது.


அதற்கு பஞ்சவன்மாதேவி ஓர் அரசர் நடுநிலையுடன் இருக்க வேண்டாமா?? என்று கேட்கிறாள்.வேலைக்கு அழைத்தேன் அவர்கள் வரவில்லை. வேளாளர்களும் தான் கோயில் வேலையில் ஈடுபடவில்லை என்று கூறினாள் .அதற்கு அவர்களை நான் அழைக்கவில்லை. இவர்களை அழைத்து வரவில்லை என அவர்களை இன்று சந்திக்கவே முடியாது. எப்பொழுது என்னுடைய மனம் சாந்தி அடைகிறதோ அப்போது நான் அவர்களை சந்தித்து கொள்கிறேன் கூறிவிட்டார் கோபமாக ..அப்பொழுது பழைய நினைவுகளுக்கு செல்கிறார் மன்னர்.


உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் இளவரசர் அருண்மொழி பழையாறையை விட்டு தஞ்சைக்கு செல்கிறார்.

அங்கே திருவையாறில் மழபாடி என்னும் ஊரில் இருக்கும் பரமன் நெருங்கிய நண்பன். சோழதேசம் பற்றி அறிய ,இன்னும் பயிற்சி எடுக்க ,மக்களுடன் பழக இளவரசருக்கு சிறிது காலம் தேவைப்பட்டது .பரதன் பெற்றோர் மன்னராய் நீ வருவாய் என்று ஆசைப்பட்டோம் கடைசியில், உத்தம சோழன் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சியாக இருக்கிறது. இங்கே பல அநியாயங்கள் நடக்கிறது .இதை ஒழிக்க நீ கண்டிப்பாக அரசனாக வேண்டும் என்று கூறினர் .


முதன்முதலில் தில்லையில் பஞ்சவன் மாதேவியின் நடனத்தை இளவரர் காண நேர்ந்தது. அந்த 'தோடுடைய செவியன் 'பாட்டிலேயே இளவரசர் அருண்மொழி மயங்கி விட்டார்.


மறுநாள் முழுவதும் அந்த பழுவூர் பெண் பஞ்சவன்மாதேவி பற்றியே பேசிக் கொண்டிருந்தார் .மீதி தேவாரப் பாடலை அறியும் ஆசை அதிகமாக இருந்தது அவரிடம் .கடைசியாக பஞ்சவன்மாதேவி வீட்டை தேடி சென்றார்கள் .அங்கே சென்று பஞ்சவன்மாதேவிடம் அந்த சுந்தரர் பாட்டு அடுத்த வரிகளையும் நான் கேட்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார் .அரச குடும்பத்தில் இருந்து வந்திருப்பவர் போல் தெரிகிறதே என்று கேட்டுக் கொண்டிருந்தாள் .இவர் சோழ தேசத்தின் இளவரசர் அருண்மொழி என்று கூறுகிறான் பரதன் அதைக் கேட்டவுடன் அவள் வீட்டிலில் ஒரு அறையிலிருந்து அவளுடைய தந்தை வெளியே வருகிறார் .அவருடைய தந்தையின் பெயர் செங்காளி அவர் பழுவேட்டரையர் வம்சத்தை சார்ந்தவர் .


அவர் இளவரசரை கண்டு நான் உங்களை சிறுவயதில் கண்டிருக்கிறேன். உங்களுக்கு குதிரை பயிற்சி சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்றெல்லாம் கூறுகிறார். சுந்தர சோழர் காலத்தில் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது ஆதித்தகரிகாலன் மரணத்தின்போது பிரச்சனை வந்துவிட்டது. நீ மன்னராக வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் .


இங்கே அந்த அந்தணர்கள் உங்களைப் பற்றி தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி மக்களும் உங்களை பேடி என்று கூறும் அளவிற்கு கொண்டு சென்று விட்டனர் .


ஐயா உங்களுடைய உதவி எனக்கு தேவைப்படுகிறது. அண்ணனின் மரணத்திற்கான உண்மை எனக்கு சிறிதளவு தெரியும் .அதை புரிஞ்சிக்கவே நான் இப்படி ஊர் ஊராக செல்கிறேன் .உங்களை நான் எப்படி நம்புவது , வந்தியத்தேவனுக்கு அவ்வப்பொழுது செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.


செங்காளியை எப்படி இங்கே வந்தீர்கள் என்று கேட்டார் .நான் சிதம்பரத்தில் காவல்படையில் இருந்தேன் .அப்பொழுது அங்கே கோவிலில் இருக்கும் ஒரு அறையில் பல உலோக சிலைகளும், சிவனடியார்கள் உடைய சிலைகளும் ,ஓலைகளும் இருந்தது .நான் அதை திறந்து பார்க்க ஆசைப்பட்டு அதை திறந்து பார்த்தேன். யார் திறந்தது என்று கண்டுபிடித்து என்னை அங்கிருந்து சிறைக்கு மாற்றிவிட்டார்கள்.சிறையில் ஒரு பித்து பிடித்தவனை நான் கண்டேன். அவனை நான் பராமரித்து வரும் பொழுது அவன் கரிகாலனுடைய மரணத்தைப் பற்றி என்னிடம் பேசினான், பிறகு அவனுக்கு என் மீது சந்தேகம் வந்து. எனக்கு ஏதும் தெரியாது என்று பயந்துவிட்டான். பிறகு குதிரை காவலுக்கு என்னை அனுப்பி விட்டனர்.


ரவிதாஸனுக்கு சிதம்பரம் தான் வசதியாக இருந்தது .ஏனென்றால் இங்கிருந்து பூம்புகார் மிக பக்கம் அங்கிருந்து ஈழ தேசத்திற்கும் ,காந்தளூர் சாலைக்கும் சென்று வர எளிதாக இருந்தது. அங்கே பலரை பயிற்சி கொடுத்திருந்தனர் .பரதர்களையும் அவர்களுக்கு ஆதரவாக பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.


அப்பொழுது இளவரசர் திடீரென்று எனக்கு ஏற்கனவே மூன்று பட்டமகிஷிகள் இருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் உங்களுடைய மகளை நான் மணக்க விரும்புகிறேன் என்று நேரடியாக கேட்டு விடுகிறார்.


இவள் தாய் ஒரு தளிச்சேரிப் பெண் ,தலைக்கோலி .பழுவேட்டயார் பரம்பரை என்னுடையது. நாங்கள் உங்கள் அடிமைகள் ,உங்களுடைய விருப்பம் என்று கூறிவிட்டார் .அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டார் .இளவரசர் என்ன உன்னிடம் நகைத்தாரா என்று அனைவரும் பஞ்சவன்மாதேவியை கேலி செய்தனர்.


வந்தியதேவன் சிதம்பரத்திற்கு வந்தவுடன் பரதன், இளவரசரும் சென்று அந்த சிறையில் இருக்கும் கார்மேகத்தை கண்டனர் .கார்மேகமோ அவர்களைக் கண்டு நடுங்கினான். பிறகு மெல்ல உண்மையை சொல்ல தொடங்கினான் .


ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரன் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் அரண்மனையில் கொன்றனர் .இவர்களுக்கு உத்தமசோழன் உடந்தை என்று உண்மையைக் கூறிவிட்டு, கதறி தேம்பித் தேம்பி அழுதான் .உங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என்று புலம்பினான்.


நீ எப்படி பிறகு இந்த சிறைக்கு வந்தாய் என்று கேட்டனர். எனக்கு காசு கொடுத்தனர் ,நான் அடங்கவில்லை மீண்டும் சென்று காசு கேட்டேன். அப்பொழுது அந்த அந்தணர்கள் நீ திரும்ப திரும்ப ,இப்படியா வருவாய் என்று என்னை கொல்ல வந்தார்கள் .என்னுடைய மனைவியரின் வேண்டுதலால் சிறையில் அடைக்கப்பட்டேன் .ஆனால் என் குடும்பம் சீரழிந்து விட்டது .என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கதறினான் .


இதைக் கேட்ட இளவரசர் அப்படியே ஆடிப்போய் கத்தினார்,கதறினார் என்னுடைய அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணம் இவ்வளவு கொடூரமாக இருக்கவேண்டும் என்று புலம்பினார்.


அங்கே சிதம்பரத்தில் கோயிலில் நம்பியாண்டர் நம்பி ஊரில் இருந்து திரும்பி வந்து. அறையை திறக்கும்படி அந்தணர்களிடம் போராடிக் கொண்டிருந்தார். அதற்கு அவர்கள் அந்த நால்வரையும் சிவனடியார்களை வந்தால் தான் நாங்கள் கதவைத் திறப்போம் என்று கூறிவிட்டார்கள் .


அதைக்கேட்ட பஞ்சவன்மாதேவி இளவரசரிடம் இதைச் சென்று கூறினாள். அண்ணனின் இறந்த செய்தியை கேட்ட துக்கத்தில் இருந்த இளவரசன் ,வெகுண்டு எழுந்தார் தமிழுக்கும் ,சைவத்திற்கும் எதிர்ப்பு என்றால்.. நான் தான் முதல் ஆளாக அங்கே இருப்பேன் .என்று சிதம்பரம் கோயிலை நோக்கி செல்கிறார்கள் .


கதவைத் திறக்க சொல்கிறார்கள், அதற்கு அந்தணர்கள் அதில் இருப்பவை வெறும் பொம்மை அது தேவையற்றது என்று வாதிடுகின்றனர். அதற்கு இளவரசர் அதில் இருப்பது பொம்மை என்றால் நீங்கள் கும்பிடும் தெய்வமும் பொம்மையா இங்கிருக்கும் நடராஜனும் பொம்மையா???என்று கேள்வி எழுப்பினார். உங்களுடைய வேதத்தை நான் மதிக்கிறேன். அதுபோல் எங்களுடைய உரிமைகளை தடுக்க நீங்கள் யார். இப்படியாக திறக்க உத்தரவிடுகிறார் .


எங்கள் இடத்தில் வந்து எங்களை அதிகாரம் செய்ய நீங்கள் யார்?? என்று கேட்டேன் ஒருவன்.இளவரசன் வாளை உருவி பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் .பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த அறை திறக்கப்படுகிறது. அதைக் கண்ட நம்பியாண்டர் நம்பி அழுது புலம்புகிறார். என் சிவனே அங்கே பெரிய கரையான் புற்றுக்குள் பல உலோக சிலைகளும் பாதி அழிந்த நிலையில் ஓலைகள் மலையாக இருக்கிறது.


என் கைப்பட்டால் இன்னும் அழிந்துவிடும். இதற்கு முதலில் தைலக்காப்பு செய்யவேண்டும். என்று தைலக்காப்பு செய்து ஒவ்வொரு ஓலையாக மெதுவாக தட்டி அதை சுத்தம் செய்தனர்.


தமிழையும் ,சைவத்தையும் வென்ற பெருமையுடன் இளவரசர் தஞ்சை நோக்கி செல்கிறார்,பஞ்சவன்மாதேவியுடன். இதை அறிந்த ரவிதாசன் ,பரமேஸ்வரனும் தப்பி விடுகின்றனர்.


அரசவையில் உண்மை விசாரிக்கப்படுகிறது . கடைசியாக உத்தமசோழன் ஒத்துக் கொள்கிறான் .என்னுடைய தாயாரின் தூண்டுதலும் அந்த பரமேஸ்வரன் ரவிதாஸன் அடக்குமுறையில் நான் இப்படி தவறாக நடந்து விட்டேன். ஆனால் கொல்ல நினைக்கவில்லை என்று ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.


பிறகு ஈசான சிவபண்டிதர் தலைமையில் இளவரசர் அருண்மொழி அரசராகப் பட்டம் ஏற்கிறார். உடனடியாக உடையார்குடி உத்தரவிடுகிறார் .அங்கு இருக்கும் அனைவரும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று கடுமையாக கூறினாபொழ.எல்லையில் இருந்து செல்லும் பொழுது அந்த அந்தணர்கள் சாபங்கள் விட்டு சென்றுள்ளனர்.


பிறகு காந்தளூர் சாலையையும் படையெடுத்து அழித்துவிட்டார். திரும்பி வந்து பஞ்சவன்மாதேவி முறைப்படி திருமணம் செய்து ,அனைவருக்கும் அறிக்கை விடுகிறார்.


நன்றி.


மூன்றாம் பாகம் முடிவு பெற்றது .மீண்டும் நான்காம் பாகத்தில் சந்திப்போம்....

Click here for Udayar audio book part 3:4👇


Udayar audio book part 3:4








Tuesday, September 29, 2020

உடையார் மூன்றாம் பாகம் சுருக்க விளக்கம் 3 by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

தந்தை மற்றும் மகனுடைய உருக்கமான பேச்சை கேட்டவுடன். பிரம்மராயர் ராஜேந்திரனும், அருண்மொழியும் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டும், மற்ற அனைத்து பொறுப்புகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார் .அத்துடன் அரசவை கலைந்தது .


அன்றிரவு பெருந்தச்சன் மன்னரின் பேச்சை கேட்டு உற்சாகத்துடன் நாம் எப்படி செய்ய வேண்டும் என்று பல யுக்திகளை கலந்து ஆலோசித்தார்கள். அவருடைய சீடர்களும் பல புது யோசனைகளை கூறினார்கள். அதைக் கேட்டு தச்சரும் பெருமகிழ்ச்சி அடைந்தார் என்னுடைய பாக்கியம் நீங்கள் எனக்கு கிடைத்தது. அப்பொழுது அவருடைய சீடரான குணவன் நான் சென்று பிரம்மராயர் உடன் கலந்து ஆலோசிக்கிறேன் என்று கூறினான் .


அப்பொழுது பெருந்தச்சரை சந்திக்க சதா சிவாச்சாரி வந்திருந்தார் .இருவரும் ஒன்று சேர்ந்து பேசினார்கள் உடைத்த பாறைகளைக் கொண்டுவந்து கோபுரமாக அடுக்குவது ,பல யோசனைகள் பற்றி பேசினார்கள்.அப்பொழுது சதா சிவாச்சாரியார் கோபுரத்தை சுற்றிலும் மண் மேடை அமைத்து அதில் சவுக்குக் கட்டைகளை அடுக்கி அதன்மீது பாறைகளை நகர்த்த வேண்டும் என்று கூறினார். அதைக்கேட்ட பெருந்தச்சன் மழையில் கரையாத என பல கேள்விகளை கேட்டார் . கடைசியாக நான் முதலில் ஒரு மாதிரி உருவாக்குகிறேன். உங்களுடைய யோசனை மிக நல்ல யோசனை என்று அவரை பாராட்டிவிட்டு பெருந்தச்சன் அங்கேயிருந்து பிரிந்தார்கள்.




குணவன் அவனுடைய கூட்டாளியும் ஒரு பெரிய கூடம் அமைத்து அதிலே முதலில் மாதிரிகளை நாம் செய்ய வேண்டும் பின்பு தான் நமக்கு ஒரு தெளிவு வரும் என்றனர்.இப்படியாக அவர்கள் பிரம்மராயர் சந்திக்க சென்றார்கள். பிரம்மராயர் அவருடைய சொந்த ஊரான அம்மன்குடியில், இஷ்ட தெய்வம் காளிக்கு ஹோமம் நடத்தி கொண்டிருந்தார். அங்கு பல அந்தணர்கள் அந்த ஹோமத்தில் கலந்து கொண்டார்கள். ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை பேசிக்கொண்டு இருந்தார்கள். அதில் சிலர் நாம் ஏன் அரசரிடம் சென்று கோயில் கட்டுவதற்காக ஹோமம் வளர்க்கிறோம் என்று சொல்லக்கூடாது, யோசனை கூறினார் .அதற்கு மற்றவர்கள் ஏன் சும்மா இல்லாமல் பிரச்சனையை விலை கொடுத்து வாங்க .என்று அவருடைய கருத்துக்களை தெரிவித்தனர்.


குணவன் ஹோமம் முடிந்தவுடன் பிரம்மராயர் இடம் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். பிரம்மராயர் உடனடியாக ஆயிரம் பொற்காசுகளை செலவிற்காக கொடுத்தார் .அப்பொழுது அங்கே அவருடைய சீடரான சட்டநாதன் ,எனக்கு சிற்பக்கலையில் ஆர்வமாக இருக்கிறது உங்களிடம் வந்து கற்றுக்கொள்கிறேன்,என்று வந்து சேருகிறான் . சட்டநாதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் .ஆனால் பிரம்மராயர் ஒற்றன்அவன்.


பிரம்மராயரருக்கு பழைய நினைப்பு வந்துவிட்டது முதன்முதலாக மன்னரை இங்கேதான் சந்தித்தோம் .பல வருடங்களுக்கு முன்பு உத்தம சோழன் ஆட்சியில் , நான் மக்களை சென்று திரட்டப்போகிறேன் .நீங்களும் இங்கே உங்களால் ஆனவற்றை செய்யுங்கள். அவரின் உத்தரவின்பேரில் பல பயணங்களை மேற்கொண்டார், நமக்கு இன்று உறுதுணையாக இருக்கிறது என்று பிரம்மராயர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார்.


பிரம்மராயரை சந்திக்க மன்னரின் மகள் சந்திரமல்லிவந்திருந்தாள்.தூக்கிவாரிப்போட்டது எழுந்து வந்தார் பிரம்மராயர், வணங்கிக் கொண்டனர் இருவரும்.அவரைக் கண்டு பிரம்மராயர் என்ன செய்வது அறியாமல் திடுக்கிட்டார் .இனி நான் புத்தபிட்சு அல்ல அந்த வேஷத்தைக் கலைத்து விட்டேன் .நிரந்தரமாய் இங்கே தங்குவதற்காக வந்துவிட்டேன் .என்னுடைய தந்தை நோகடித்து விட்டேன். அதை சரி செய்ய அவருக்கு உதவி செய்ய வந்தேன். நான் புத்தமடத்தில் இருக்கும் போது பல வித்தைகளை கற்றுக் கொண்டேன். அதில் எனக்கு பல விஷயங்கள் கனவாக வரும். அதில் நான் கண்ட கனவுகள் இந்த கோவில் கட்டுவது பற்றி வந்தது.என் தந்தைக்கு ஆதரவாக இருக்க நான் இங்கே வந்துள்ளேன். அதற்கு பிரம்மராயர் வருத்தத்துடன் எண்ணமா நடந்தது .என்னை ஏமாற்றி விட்டார்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதை சொல்லுவதை விட நான் ஏமாந்து விட்டேன் .என்னுடைய காதல் கதை தான் உங்களுக்கு தெரியுமே.


காந்தளூர்ச்சாலை படையெடுப்பின் ,கீழச்சாளுக்கியத்தின் உறவை பெற முதல் மகளை மன்னர் விமலாதித்தருக்கு மணம் செய்து கொடுத்தார் .ராஜேந்திரனுக்கு இளவரசன் பட்டம் சூட்டினார். இரண்டாவது மகள் தொண்டை நாட்டைச் சேர்ந்தவரை காதலித்தாள். அவன் பெயர் சுகவனன் அவன் தொண்டை நாட்டை சேர்ந்த இளவரசன் கலைகளில் வல்லவன்.


ராஜராஜசோழன் கங்கபாடி நாட்டிற்கு படையெடுத்த சென்றபோது .இங்கே இவர்களுக்கு காதல் உண்டானது .ராஜேந்திரனுக்கும் அவனுக்கும் சுத்தமாக ஒத்துப்போகவில்லை .ராஜேந்திரன் ஒரு வீரன் ,சுகவனன் ஒரு கலைஞன் .சந்திர மல்லி பக்தி மிகுந்தவள்.


ராஜேந்திரனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சந்திர மல்லி நேரடியாக ராஜேந்திரனை எதிர்த்தாள் .இந்த பிரச்சனை அரசவை வரை சென்றது .இராஜேந்திரனை எதிர்த்து சுகவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாள் .என்னை விட்டு விடுங்கள் நான் என் தேசத்தை நோக்கி சென்று விடுகிறேன் என்று கெஞ்சிப் பார்த்தான் சுகவனன்.ஆனால் அவள் விடுவதாக இல்லை. ராஜேந்திரனும் நீ ஓடிப் போக நினைத்தாலும் உன்னை சந்திரமல்லி விடமாட்டாள் என்று கூறினார் .அவள் மீதுள்ள அன்பில் அவனுக்கு வீரப்பயிற்சி கொடுக்கும்படி இளவரசருக்கு உத்தரவிட்டார் மன்னர். யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக சந்திர மல்லி என்னை மணப்பதற்கு நீங்கள் வீரராக இருக்க அவசியமில்லை நல்ல கலைஞனாக இருந்தாலே போதும் என்று ஓலை அனுப்பியிருந்தாள் .இதைக்கண்ட ராஜேந்திரன் இன்னமும் கோபம் கொண்டான்.சுகவனன் ஓடிவிட்டான்.


சொந்த நாட்டிற்கு சென்ற போது அங்கே வழியில் மூன்று பேர் அவரை கொலை செய்து விட்டனர். இதைக் கேட்ட இராஜேந்திரன் மிகவும் வருத்தப்பட்டான்.எனக்கும் அவன் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சந்திரமல்லி சும்மா இல்லை நீ தான் அனைத்திற்கும் காரணம் என்று ராஜேந்திரனிடம் சண்டை போட்டாள்.அதோடு மட்டுமில்லாமல் விதவை கோலம் பூண்டாள் .நீங்கள் அனைவரும் என்னுடைய வாழ்க்கையை கேடுத்து விட்டீர்கள் .என்று ஒரு அறையிலேயே பித்துபிடித்தவள் போல் இருந்தாள்.கடைசியாக விசாரித்த போது தான் தெரிந்தது. அங்கே கடற்கொள்ளையர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஈழத்தில் இருந்து வந்ததாகவும் தெரிந்தது. மன்னரிடம் இளவரசன் வருத்தப்பட்டார் நீங்களுமா என்னை நம்பவில்லை .தந்தையே நான் எப்படி இப்பேர்பட்ட காரியத்தில் ஈடுபடுவேன் .அவன் மீது எனக்கு கோபம் இருந்தது .ஆனால் கொலை செய்யும் அளவிற்கு நான் துரோகி அல்ல என்று கூறினான்.


மகள் இப்படி இருப்பதை எண்ணி தந்தை வருத்தப்பட்டார் .அப்பொழுது அங்கு சில புத்தபிட்சுகள் வந்து அவளுக்கு மருத்துவம் கொடுத்தனர் .அவர்களுடைய பேச்சிலேயே அவள் ஆழ்ந்திருந்தாள் .பழைய நிலைக்கு திரும்பினாள் அதை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.இந்நிலையில் அரசர் இல்லாத போது இவள் பஞ்சவன்மாதேவியிடம் சொல்லிவிட்டு நாகபட்டினத்துக்கு சென்றாள் .அங்கே புத்த மத மாற்றம் அடைந்தாள். இதைக்கண்ட மன்னர் கோபம்கொண்டு நாகப்பட்டினத்திற்கு சென்றார். அங்கோ சந்திரமல்லி எனக்கும் உங்களுக்கும் இனிமேல் சம்பந்தம் இல்லை. நான் ஒரு புத்தபிட்சு என்று கூறி தந்தையைப் புறக்கணித்து விட்டாள். இதனால் கோபம் கொண்ட மன்னர் அங்கேயே சுற்றிலும் பாதுகாப்பு போட்டு ,அவர்களை அடக்கும் படி சேனாதிபதிக்கு உத்தரவிட்டார்.


அவளை எண்ணி மிகவும் துவண்டு போனார். என் தாயாக நினைத்தேன் .என்னை இப்படி விட்டு சென்று விட்டாளே.என்று மிகவும் வருத்தப்பட்டார்.


பிரம்மராயர் எங்கே தங்குவதாக உத்தேசம் என்று கேட்டார் .என் தந்தை ஏற்பது பற்றி எனக்கு கவலை இல்லை .நான் அவருக்கு அருகில் இருக்க விரும்புகிறேன். கனவுகள் அவர் சம்பந்தமாக எனக்கு வந்தன .நான் மதம் கடந்து நிற்கிறேன் .வெறும் சந்திர மல்லி எனக்கு கோயில் கட்டும் இடத்திற்கு அருகே வடமேற்கில் ஆற்றங்கரை அருகில் ஒரு குடிசை அமைத்துக் கொடுத்தால் மட்டும் போதும் .திடீரென்ற மாற்றம் ஏன் என்று கேட்டார் பிரம்மராயர், அது ஒரு கதை ராஜராஜசோழனின் பிள்ளைகளை தூண்டி விட்டு ,பின் மூளைச்சலவை செய்து அவருடைய மக்களைப் பிரிக்க எண்ணிய ஏமாந்த குள்ளநரிக்கூட்டம் கதை.


புத்தபிட்சு மரணப்படுக்கையில் என்னிடம் கூறினார் . சிங்களர்கள் ,பாண்டியர்கள் தூண்டுதலாலும் ,சேர வழிகாட்டலில் சோழ பௌத்த மதத்தினர் செய்த திட்டம். என்னை பலி கொண்டு விட்டது. யார் செய்த புண்ணியமோ அதோடு நின்றுவிட்டது .அவர்கள் எண்ணிய திட்டம் பலிக்கவில்லை. கீழை மற்றும் மேலை சாளுக்கிய சேர்த்து சோழத்தை வீழ்த்த அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் .


பாவம் சுகவனன் ,இழுத்துவிட்டு அவனுடைய மரணத்திற்கு நானும் ஒரு காரணம். அது ஒன்றை மட்டும் வேண்டிக்கொள்கிறேன். அவன் இறந்த இடத்தில் ஒரு விளக்கு ஏற்றும்படி உத்தரவிடுங்கள் .அனைவரையும் கண்டு நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.


ஏன் கோவில் கட்டும் இடத்திலேதான் இருக்க வேண்டுமா நாங்கள் எல்லாம் இருக்கிறோம் .நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் .எல்லை பாதுகாப்பு மட்டுமில்லை இங்கே சிலவற்றை அடக்கவேண்டும். அது இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது அதைப்பற்றிய வித்தை தெரியும். கருவூர்தேவர் இருக்கிறாரே,அவர் நிலையாக இருப்பதில்லை. நான் அங்கே நிலையாக இருந்து அதை கட்டுக்குள் கொண்டு வரப் போகிறேன், என்று கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றாள்.


பெரிய குழப்பத்தில் இருந்தார் பிரம்மராயர் அவள் கூறியதை அவர் நம்பவில்லை.


மன்னர் அழைத்தார் ராஜேந்திரன், வந்திய தேவர் மற்றும் பாண்டிய வீரன் குணசீலனை ,நார்த்தாமலையில் சென்று பார்வையிட விரும்புகிறேன்.


பஞ்சவன்மாதேவி மூலம் சந்திரமல்லி வந்திருக்கும் செய்தி மன்னருக்கும் வந்து சேருகிறது. அதை கேட்ட மன்னர் சிறிதுநேரம் நிலைகுலைந்து ,இதை விட பல முக்கியமான செய்திகள் இங்கே இருக்கிறது. அவளை சேனாதிபதி பார்த்துக்கொள்வார் என்று கூறி தந்தையும் மகனும் நார்த்தமலை செல்லப்புறபட்டார்கள்.


செய்தி ஊர் முழுவதும் பரவியது .அரண்மனையில் இருப்பவர்களும் சந்திர மல்லியை பார்க்க ஆசைப்பட்டார்கள்.

நார்த்தாமலையில் மன்னர் அனைவரையும் விசாரித்தார் உபசரிப்பு இங்கே எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு கைதிகள் அதற்கெல்லாம் ஒன்றும் குறை இல்லை. ஆனால் இங்கிருந்து பாறைகளை எடுத்து செல்ல மூன்று நாட்கள் ஆகும் என்று நினைக்கிறோம் என்று வருத்தப்பட்டார்கள். அதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று அரசர் கூறினார் .மக்களும் எங்களுக்கு உணவு உபசரிப்பு இல்லாமல் வேறு ஏதும் வேலை இருக்கிறதா? என்று கேட்டார்கள் .உங்களுக்கு அதை தவிர வேற பொறுப்பும் இல்லை அதை நீங்கள் செய்தாலே போதும் என்று கூறினார்.


குணசீலனும் ஒவ்வொரு பாறையாக ஏறி சென்று குணங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான். பாறைக் கற்கள் கோபுரம் கட்ட உதவும் ஆனால் சிற்பங்கள் செதுக்க இது உதவாது என்று கூறினான் .அப்பொழுது அங்கே கணக்கு பிரச்சனை சதா சிவாச்சாரியார் வைத்தார் .


ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும்போது ராஜேந்திரன் அந்தணர்கள் அந்த பொறுப்பை பார்க்கக் கூடாதா ?என்று கோபமாக கூறுகிறான் .அதற்கு சதாசிவா சாரி எனக்கு அந்தணர்கள் வேண்டாம் என் கட்டுக்குள் இருப்பவர்கள்தான் வேண்டும் என்று கூறினார்.


ராஜேந்திரன் நீ சொல்வது போல் கூறினால் உள்ளூர் குழப்பம் ஏற்படும் என்று கூறினார். வந்தியத்தேவனும் அவருடைய கருத்துகளை கூறினார் .அடித்து அவர்களை வேலை வாங்க வேண்டும் என்று சொன்னான் இளவரசன்.அரசர் எப்பொழுதும் போர்முனை வெறியுடன் இருக்காதே. மூர்க்கம் மிகப் பெரிய பலவீனம் ,காட்டுக் கூச்சல் போடாதே !!


எத்தனை முறை சொன்னாலும் உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது.விஷயத்தை உன் வாங்கிக்கொள்ள பழகிக்கொள் .எதற்கெடுத்தாலும் ஆத்திரம் அடைந்தால் எப்படி மன்னனாக இருக்கப் போகிறாய்


அந்தணர்கள் எப்போது நல்ல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள் .இது தவறு இது மிகப்பெரிய தவறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வெறுப்பது

.கவனமாக இரு ராஜேந்திரா ஒவ்வொரு செயல்களையும் நன்கு யோசித்து செயல்படு .சந்திரமல்லி புத்த மதம் மாறியதால் நான் புத்த மதத்தை வேரோடு அறுக்கவில்லை .சட்டங்களை விதித்து அதை அடக்கி வைத்தேன். எதிரிகளை நண்பர்களாக மாற்றலாம் .நண்பனை எதிரி ஆகாதே அது உன்னுடைய நிம்மதி கெடுக்கும்.


எனக்கு பிரச்சனை என்று கேள் அவர்கள் தானாக வருவார்கள் .அப்பொழுது அவர்களை எப்படி அடக்கி ஆள்வது என்று யோசி .இதைக் கேட்டு ராஜேந்திரன் தந்தையை வணங்கினான். வந்திய தேவர் மன்னரை எண்ணி பெருமை பட்டார்.


அந்தணர்கள் புலம்பல் எவ்வளவு நாள் இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். மனதில் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் வேதம் மறந்து ஆடல் , பாடல் கூத்து நோக்கி செல்கிறார்கள். இந்த அந்தண இளைஞர்கள். தேவையில்லாத வீண் வம்புக்கு தான் செல்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார் .


அங்கிருந்தவர்கள் கருமார்கள் கேட்பது நியாயமா அவர்கள் கோரிக்கைகளுக்கு நாம் இடம் கொடுத்து விட்டால் .நம்மை யார் மதிப்பது என கேட்டார்கள். அவர்கள் அவர்களுடைய உரிமைகளை கூறுகிறார்கள் .நாம் வேதம் படிப்பது தான் நம்முடைய தொழில் அதை விட்டுவிட்டு ஏன் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம் .அதில் என்ன தவறு என்று அவர் கூறினார் .அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஒருபுறம் தொண்டைநாடு, நடுநாட்டிலிருந்து 500 அந்தணர்கள் குடந்தைக்கு வந்தனர் .ஈசான சிவபண்டிதர் ஆசிர்வாதத்துடன் அவர்கள் பார்ப்பதற்கு கருப்பாகவும் குள்ளமாகவும் இருந்தனர் .ஆனால் வேதத்தில் மிகவும் தெளிவாக இருந்தனர் .அவர்களைப் பார்த்து மற்றவர்கள் வியந்தனர் .தஞ்சை அந்தணர்கள் அவர்களை வரவேற்றனர் ,மட்டுமல்லாமல் தஞ்சையை சேர்ந்தவர்கள் கர்வமும் கொண்டனர்.


நார்த்தாமலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மன்னர் வண்டியில் புறப்பாடு செய்ய வேலை நடந்தது .ஆனால் குணசீலன் இந்த வண்டி சரியாக இல்லை .இதனோடு அச்சாணியில் பிரச்சனை இருக்கிறது என்று அதை விரிவாகக் கூறி எடுத்துக்கூறி நல்ல யோசனை கூறினான் .அதைக் கண்ட அரசர் மெய்சிலிர்த்தார் .


அங்கிருந்த ஊர்மக்கள் அனைவரும் அருகில் வந்து மன்னரை நலம் விசாரித்தனர்.

இதைக்கேட்ட பஞ்சவன்மாதேவி மன்னர் சரியான பாதுகாப்பில்லாமல் எல்லோருடன் இப்படி பழகுவது பிரச்சனையில் போய் முடியும். எங்கே யார் இருப்பார்கள் என்று தெரியாது. காவல்படையினர் இடம் கடுமையாக நடந்து கொண்டார்.அதுமட்டுமில்லாமல் பிரம்மராயர் மகனுக்கும் ஓலை சென்றது .அவர்களும் கலந்தாலோசித்து கொண்டிருந்தார்கள்.

நன்றி.

மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம்..

Click here for Udayar audio book part 3:3👇


Udayar audio book part 3:3

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...