Tuesday, September 15, 2020

உனை செதுக்கம் உளி by Jaya

               *உனை செதுக்கும் உளி*

                                                            _ஜெயா




வாழ்க்கையில விழும் 

ஒவ்வொரு அடியும் 

நம்மை நாமே செதுக்கும் 

உளிகள் 


உளியின் அடியினால் 

உயிர் வரை வலித்தாலும் 

மீண்டு எழும் சிலை

மறையாது நிற்கும் உன் நிலை


என்றும் உனக்கான உளியை

பிறர் கையில் தந்தால்

பிறரின் சிலையாய்

தான் நீ இருப்பாய்..!


உனக்கான உளியை

உன் கையில் எடுத்துவிடு

உன் உள்ளம் விரும்பும்

சிலையாய் உனை நீயே

வடித்துவிடு..!


வலியில்லா வாழ்க்கையில்லை 

வழியில்லா  மனிதனுமில்லை 

ஓளியாய்  வீசிடு 

வசந்தமாய் மாறிடு!!!!

3 comments:

  1. என்றும் உனக்கான உளியை உன் கையில் எடு ...அருமை👌

    ReplyDelete
  2. Wonderful words.really excellent words.we are responsible for everything.valar.

    ReplyDelete
  3. ரொம்ப அழகாக இருக்கிறது ஜெயா,நம்மை நாமே செதுக்கி கொள்ளுவதே மிக சிறந்த வழி!

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...