Tuesday, September 1, 2020

என் தாயுமானவன் by Kanchana

 

                      என் தாயுமானவன் 

                     -காஞ்சனா

இப்புவியில் பிறந்தது........ பெண் என வருந்தாமல் இப்புவியில் இளவரிசியாக வரவேற்ற என் தந்தை..... என்       * ஆண் தேவதை!



🧚🏾‍♀️ கிராமத்தில் ..... 

          இரட்டை ஜடையுடன், பாவாடை சட்டையுடன் வலம் வரும் மாணவிகளுக்கு மத்தியில்........ கிராப் வெட்டி 💇‍♀️💇‍♀️, கவுன் அணிவித்து, அதற்கு மேட்சாக ஒற்றை ரோஜாவை🌹 என் தலையில் சூடி அழகு பார்த்த என் தந்தை....... என் *சூடாமணி*!

              மிதிவண்டியில்🚲🚲 என்னை நிதமும் சுமந்து, பள்ளியில் விடும் போது.......5பைசாவே பெரிய விஷயமாக இருக்கும் காலகட்டத்தில் என் கையில் நாலணா, எட்டணா கொடுத்த என் தந்தை....... என் *லஷ்மி(மணன்)!* 🏹🏹

                       புத்தகங்களை சுமக்க மஞ்சப்பையும், ஜோல்னா பையும் எடுத்து வரும் மாணவிகளுக்கு மத்தியில் அலுமினிய பெட்டியை💼💼 கொடுத்த என் தந்தை....... என் *பொக்கிஷம்

                               ஒரு பவுன்💰 வாங்ககூடிய விலையில் எனக்கு புத்தாடை வாங்கி கொடுத்து அணிவித்து👗👗 அழகு பார்த்த என் தந்தை...... என் *தங்கம்* !🌟

                                        *நகரத்தில் . .......* பெண் என்பவள் இப்படி தான் வாழவேண்டும் என்ற வாழ்க்கை முறையினை தாண்டி ஆணிற்க்கு சமமாக வேலுநாச்சியாராக வளர்த்த என் தந்தை......... என் *கர்மவீரர்* ! 🤵🏻🤵🏻 

                                                  பெண்ணின் அருகாமை இருக்க வேண்டிய காலகட்டத்தில் எந்த சலனமும் இல்லாமல் எனக்காக துறவற வாழ்க்கையை மேற்கொண்ட என் தந்தை............ என் ராமலட்சுமணன் அன்றும்..... இன்றும்.... என்றும்...... மாறாத ஒரே அன்பு என் தந்தை....... என் *தாயுமானவன்* 🙏🙇🏻‍♀️🙏

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...