அனைவருக்கும் வணக்கம்,
பரஞ்சோதியும் இளவரசரும் தனிமையில் சந்தித்தனர் . இளவரசர் பரஞ்சோதியின் அன்னையை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் மரணப்படுக்கையில் மரணம் என்றால் என்ன என்று மகனிடம் கேட்டார் .நான் ஒரு போர் வீரன். போர்க்களத்தில் பலருடைய மரணங்களை கண்டிருக்கிறேன் பல பேர் என்னிடம் தன்னுடைய உயிரை காப்பாற்றும் படியும், சிலர் தன்னுடைய உயிரை எடுத்து விட வேண்டும் என்று வேண்டி இருக்கிறார்கள். இப்படியிருக்கையில் எனக்கு மரணம் என்பதற்கு சரியான பதில் தெரியவில்லை .பிறகு அவரே அதை விளக்கினார். மரணம் என்பது விடுதலை .கனவிலிருந்து நினைவிற்கு திரும்புதல் நம்முடைய ஆத்மா நம்மை விட்டு பிரிந்து ,மீண்டும் ஆசைகளுடன் புதிய கனவுகளை காண்பதற்காக பூமியில் பிறக்கிறோம் என்று விளக்கினார். நானும் மீண்டும் அடுத்த பிறவியில் உன் தந்தை மணந்து உன்னையே மகனாகப் பெற்ற எடுப்பேன் என்று என் அன்னையர் என்னிடம் கூறினார். அவருடைய கடைசி ஆசை தேவரடியார்களை பாதுகாக்க வேண்டும் .என் தாய் ஒரு தேவரடியார் என் தகப்பனை திருமணம் புரிந்த பின்பு பலருடைய கேலிக்கு ஆளானார் .அதனால் அவரை போல் போராடும் பெண்களுக்கு நான் பாதுகாக்க இருக்க வேண்டுமென்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆசையின் பலம் தானடா வாழ்க்கை என்னவாக இருக்க வேண்டுமென்று இறக்கும்போது எண்ணுகிறோமோ அதுவாகவே பிறக்கப் போகிறோம் என்று சொன்னார்.
நானும் என் தாயாருக்கு திருமணம் செய்யாமல் தேவரடியார்களை காப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தேன். திருமணம் சிலவிடங்களில் தடையாக இருக்கும் என்னுடைய கடமைக்கு அதனால் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன் .பெண்களை சரியாக கவனிக்கவில்லை என்றால் ,அந்த தேசம் பலவீனமாகி விடும் அதனால் பெண்களுடைய பாதுகாப்பு மிக முக்கியம் என்னுடைய அன்னையின் வார்த்தையை நான் என்றும் காப்பேன்.
பரஞ்சோதியை இளவரசர் கங்கதேசம் எப்படி இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தார். கங்கதேசம் அமைதியாகத்தான் இருக்கிறது .சாளுக்கிய வீரர்கள் சோழப் படையின் ஆதிக்கத்தை விரும்பாமல் மேல சாளுக்கியம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே யானையின் அறிகுறி பரஞ்சோதிக்கு தட்டுப்பட்டது. இளவரசன் இடமும் அதை பற்றி கூறினான் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே ஒரு பெண் யானை மதம் பிடித்து இளவரசனை நோக்கி ஓடி வருவதைக் கண்டார்கள். அந்தப் பெண் யானையை குண்டன் ஒருவன் ஈட்டியால் குத்தி ஒரு பாசையில் உத்தரவிட்டு கொண்டிருந்தான் .பெண் யானையும் அந்த உத்தரவிற்கு ஏற்றாற்போல் வந்து கொண்டிருந்தது. பரஞ்சோதி எப்படியாவது அந்த யானையை திசைதிருப்ப வேண்டும் என்று அந்த யானையை நோக்கி வாள் எறிந்தான் அந்த யானை இளவரசரை விட்டுவிட்டு பரஞ்சோதியை துரத்தியது. பரஞ்சோதி மணல் மேட்டின் மேல் ஏறி ஓடி சென்றான் .யானையும் அவனைப் பின்தொடர்ந்து சென்றது .இதற்கிடையில் காவல் படையினர் அந்த குண்டனை துரத்தினார்கள் இளவரசரும் செய்வதறியாது அவர்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். பரஞ்சோதி மறைந்துடன் யானை மீண்டும் இளவரசரை நோக்கி வந்தது. அந்தப் பெண் யானை கோயில் யானை அது இளவரசருக்கு அறிமுகமான ஒன்றே இளவரசரின் குரலை கேட்டவுடன் என்ன செய்வதென அறியாமல் யானை முன்னும் பின்னுமாக ஓடியது. மீண்டும் பரஞ்சோதியை கண்டவுடன் யானை பரஞ்சோதியை துரத்தியது .அஸ்திவாரம் நோக்கி ஓடும் போது அங்கிருக்கும் குழியில் யானை தடுக்கி விழுந்து விட்டது. விஷம் தீட்டப்பட்ட ஈட்டினால் காயம் அடைந்ததால் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை இறந்து விட்டது. பரஞ்சோதியும் இளவரசரும் யானை இறந்து விட்டதை உறுதி படுத்தி வருத்தப்பட்டனர் .
அங்கே பெண்களுடன் பேசிக் கொண்டிருந்த ராஜராஜன் இதை அறிந்து வருத்தப்பட்டார் .அவரும் எழுந்து வந்து யானை இறந்த இடத்தை பார்த்தார். இரண்டாம் நிலை கோபுரம் ,மண்டபம் ,கருவறை வரப்போகிறது. இங்கு விநாயகர் சிலை அமைத்து அதன் கீழே இந்த பெண் யானை என்றும் உறங்கட்டும் என்று உத்தரவிட்டார் பெருந்தச்சர் இடம்.அனைத்தும் ஈசன் செயல் ஈசன் என்ன விரும்புகிறானோ அதுவே நடைபெறுகிறது. என்று கூறிவிட்டு வருத்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்.
பரஞ்சோதி இளவரசனை எப்படியாவது இங்கிருந்து அரண்மனைக்கு சென்று விடுங்கள் நான் இங்கே பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் நீ இந்த இடத்திற்கு புதிதாக வந்திருக்கிறாய் .அருண்மொழி பட்டன் இடம் இந்தப் பொறுப்பை கொடுத்து விடுகிறேன் என்று இளவரசன் கூறினார் . ஏற்கனவே பரஞ்சோதிக்கு அருண்மொழி பட்டன் மீது கருத்து வேறுபாடு இருந்தது . இதைக்கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தான் பரஞ்சோதி. இதற்கிடையில் அந்த சேர குண்டன் அங்கிருந்து தப்பித்து காட்டிற்குள் சென்று விட்டான்.
தேவரடியார்களிடம் நான் உங்களிடம் பேசியதால் இன்று புத்துணர்ச்சி அடைந்தேன். உங்களுக்கு பாதுகாப்பாக இங்கு பரஞ்ஜோதி வந்துவிட்டான் நீங்கள் அமைதியாக உங்களுடைய வேலையில் ஈடுபடுங்கள் என்று கூறி விட்டு , பரஞ்சோதி மிகவும் வருத்தப்பட்டான் குண்டானை நழுவ விட்டு விட்டோமென்று,மன்னர் கவலைப்பட வேண்டாம். பசித்தால் மீண்டும் இங்கே வருவார்கள் அப்பொழுது ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு அரண்மனைக்கு சென்று விட்டார்.
அங்கே அரண்மனையில் பாண்டிய கைதிகள் ,நாடகத்தை முடித்து விட்டு இங்கே தான் நம்முடைய அரசரின் தலை தொங்க விடப்ட்டது என்று சிலர் புலம்பிக் கொண்டிருந்தனர். அதற்கு சில கைதிகள் நாம் இங்கே இருந்து எவ்வளவு பயிற்சி பெற முடியுமோ அவ்வளவு பெற்றுவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வோம் அதுதான் நமக்கு நல்லது என்று கூறினார்.
அரசவைக் கூட்டம் கூட்டப்பட்டது, அதில் சேனாதிபதி, பழுவேட்டயர்கள் ,இளவரசன், பரஞ்சோதி , அருண்மொழி பட்டன் ,பெருந்தச்சர் ஆன குஞ்சமல்லன் மற்றும் நித்திய வினோத பெந்தச்சன் என்னும் குணவன், பலரும் அங்கே கூடியிருந்தார்கள்.
பிரம்மராயருக்கும் இளவரசருக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. பிரம்மராயர் இளவரசனிடம் எந்தவித முன்னறிவிப்புமின்றி இங்கே கைதிகளை அனுப்பியது தவறு என்று கூறினார் .அதற்கு இளவரசர் பாதுகாப்பு சரியில்லை .இங்கே வந்த கைதிகளையும் நீங்கள் சரியாக உபசரிக்கவில்லை என்று வயதை மீறி பல குறைகளை பிரம்மராயர் மீது சுட்டிகாட்டிக் கொண்டிருந்தார்.
நீ இப்படி அவசரப்பட்டு பிரம்மராயர் மீது குறை சொல்லக் கூடாது மிகக் குறைந்த கால அவகாசத்தில் இங்கு சரியான உபசரிப்பு கைதிகளுக்கு கொடுக்கப்பட்டது . பல பாண்டிய தேசத்து வீரர்கள் எல்லையில் இருந்து தப்பித்து ஈழத்திற்கும் பலர் சேர நாட்டிலும் சென்று திட்டம் தீட்டி கொண்டிருக்கின்றனர். இங்கே இருக்கும் கைதிகளை மிரட்டி அடித்து வேலை வாங்கக் கூடாது. அன்பால் அரவணைத்து இந்த இறை பணியில் ஈடுபட செய்ய வேண்டும்.
அரசருடைய சிந்தனை செயல் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்று வியந்தார் இளவரசன். தந்தையை நோக்கி வணங்கினார் ,கட்டித் தழுவிக்கொண்டார் .அப்பொழுது மன்னர் நமக்குள் முதலில் புரிதல் வேண்டும். அந்த புரிதல் இல்லையேல் மக்கள் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்று தவறாக எண்ணி விடுவர்.எந்த செயலும் ஒற்றுமையாக இருந்தால் தான் செயல்படுத்த முடியும் சபையில் இருக்கும் நாம் தான் அதன் தோல்விக்கும் வெற்றிக்கும் காரணம்.
இங்கு இருப்பவர்கள் என்னை அன்னியமாக எண்ணி , முதுகில் குத்தி,வஞ்சித்தாலொழிய தவிர நான் இந்த வேலையில் இருந்து பின்வாங்க மாட்டேன் .என்று அரசர் உரக்கக் கூறினார்
.இதைக்கேட்டு சபை பதறி எழுந்தது ,அனைவரும் எப்படி இப்படி நீங்கள் கூறலாம் என்று வருத்தப்பட்டார்கள்,கோபப்பட்டார்கள்.
பிரம்மராயர் ஒரு சிலர் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, நான் ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். இதை கேட்க நான் இங்கே இருக்கிறேன் என்று வருத்தப்பட்டார் .அருண்மொழி பட்டன் இளவரசனை அடக்கினான். பெருந்தச்சர் மட்டும் ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள். அதை தெளிவாக புரிந்து கொள்ளாமல் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று எடுத்துக் கூறினார் . அதை பழுவேட்டயார் ஒத்துக்கொள்ளவில்லை.
கடைசியாக சக்கரவர்த்தி எல்லோரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இங்கிருக்கும் அனைவரும் என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் .பெருந்தச்சர் சொன்னதுபோல இந்த இறைப்பணி ஒரு நாளும் நிற்காது.
மதுராந்தகன் ஆட்சியில் திருவிடைமருதூரில் ஒரு கோயில் எழுப்பினார் .அந்த கோவிலில் மகாலிங்கம் இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டார் .நானும் மிக ஆவலுடன் அந்த மகாலிங்கத்தை காண சென்றேன். அந்த லிங்கம் மிக சிறிதாக இருந்தது. அதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தேன். அப்போது என் மனதில் தோன்றியது இந்த ஆசை .என்னுடைய ஆட்சியில் மிகப்பெரிய கோவில் கட்டுவேன். காஞ்சியில் இருக்கும் கைலாசநாதர் கோயில் நினைவுக்கு வந்தது. அதை மனதில் எண்ணி மிகப்பெரிய கோயிலை ஆற்றங்கரையில் மணலில் வரைந்தேன். தமக்கை குந்தவை ஏழு பனை உயரம் இருக்கும் என்று ஆச்சரியப்பட்டார். நான் கோயில் கட்ட போகிறேன் என்று என்னுடைய விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தவுடன் அவரும் எனக்கு ஆதரவாக பேசினார் .
அப்பொழுது குஞ்சரமல்லன் திருவக்கரையில் இருந்து கற்கள் எடுத்து வந்து கோயில் கட்டலாம் என்று கூறினார் .நான் இல்லை அவ்வளவு தொலைவில் இருந்து எடுத்து வரவேண்டாம் .நார்த்தாமலையிலிருந்து வல்லம் வழியாக தஞ்சைக்கு கொண்டுவந்து கட்டுவோம். நானும், பெருந்தச்சர் ,வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டி யாரும் நார்த்தாமலைசென்று பார்வையிட்டோம்.
இதற்கிடையில் என்னுடைய அண்ணன் ஆதித்த கரிகாலன் மரணமடைந்து அனைத்தையும் புரட்டிப் போட்டது. பஞ்சவன்மாதேவி ஆதித்த கரிகாலனுடைய மரணத்திற்கான முக்கியமான காரணங்களை கூறினாள் .இதன்பின்னர் மதுராந்தகன் உடைய சேனாதிபதியாக இருந்த ரவிதாசன் பரமேஸ்வரனும் காந்தளூர் சாலைக்கு ஓடினர் .அங்கே சென்றும் மீண்டும் தாக்கினர். நான் படை திரட்டிச் சென்று காந்தளூர்ச்சாலையை வென்றேன் . இருவரும் அங்கிருந்து கிளம்பி ஈழதேசம் சென்றனர் பின்பு காந்தாரம் போய்விட்டார்கள்.
என்னுடைய முதல் போர் மிக மிக மோசமானது. என்னுடைய அண்ணனை கொன்றதால் வெறி பிடித்ததுபோல் போர்புரிந்து விட்டேன். அந்தணர்களை வெட்டி கொள்வது தவறு என்று வேதத்தில் உள்ளது. அதற்குப் பரிகாரம் செய்ய விரும்புகிறேன் .சாபம் என்னை அழிக்கும் என்பதற்கு அல்ல .என்னுடைய மகனை தாக்கி விடக்கூடாது . அதற்கு சிவனுக்கு மிகப் பெரிய கோயில் எழுப்புவேன் என்று .அதற்கு பின்னர்தான் மரணமடைவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டேன். என்னுடைய பெருமைக்காக இந்தக் கோயிலை கட்டவில்லை என்னுடைய குலத்தை தொடரக்கூடாது அவர்கள் சிவநெறியில் தழைத்து மக்களை காக்க வேண்டும்.
நன்றி.
மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம்...
Click here for Udayar audio book part 3:2👇




Super
ReplyDeleteThank you 😊
ReplyDelete