Wednesday, September 16, 2020

உடையார் பாகம் ஒன்று முடிவு சுருக்க விளக்கம் by Vidhya Nivash



அனைவருக்கும் வணக்கம்,

கருவூரார் தஞ்சையின் எல்லைக்கு வந்து சேர்கிறார், அங்கு வந்தவுடன் செம்பியன் மாதேவி இறந்த செய்தி வந்து சேர்கிறது. அவர் நேராக அரண்மனைக்கு செல்கிறார்.அங்கே பஞ்சவன்மாதேவி அவரை வரவேற்கிறார், கண்ணப்ப நாயனார் கதையிலே மூழ்கிப் போயிருந்த மன்னர் சத்தம் கேட்டு அங்கே வெளியே வருகிறார். குருவை கண்டவுடன் அவருடைய ஆசீர்வாதத்தை பெறுகிறார் மன்னர்.



கருவூரார் மன்னரை உடனடியாக புறப்படு இப்பொழுதே கோயில் கட்டுவதற்கான நிலத்தை காண வேண்டும் , கோயில் கட்டுவதற்கான அஸ்திவாரம் போட வேண்டும் . மன்னர் அதற்காக நல்ல நாள் பார்க்க சொல்லி இருக்கிறேன் என்று கூறுகிறார். இன்றே இந்த பொழுதே மிகவும் நல்ல நேரம் உடனடியாக அதற்கான வேலையை ஆரம்பிப்போம்.


மன்னர் மிகவும் குழம்பிப் போயிருந்தார் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். இது அந்த இறைவனின் கட்டளை உன்னுடைய இந்த சிறப்பான செயலினால், தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு முறையாவது உன்னுடைய பெயரை சொல்லாமல் சாகமாட்டான்.


மன்னரும் ,பட்டத்து அரசி மற்றும் அனைத்து அமைச்சர்களும் கிளம்புகிறார்கள் கோவில் கட்டும் நிலத்தை நோக்கி. பெருந்தச்சர் அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்கிறார் ,மன்னரின் கட்டளையின்படி, மண் கொத்தியை பெருந்தச்சர் வணங்கி ,

நான் ஒரு கருவி. இதோ இந்த மண்வெட்டியை போல ஒரு கருவி. இந்த மண்வெட்டியை போல கூர்மையாகவும் உறுதியாகவும் அமைதியாகவும் இருப்பதற்கு எனக்கு கற்றுக் கொடு. என்னை ஆசிர்வாதம் செய். எந்த ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இந்த பணியை முழுமையாக முடிக்க நான் உன்னை நம்பி இருக்கிறேன். என்னுடைய கணக்கும்,கலை வித்தையும் நீ கொடுத்த பிச்சை. உன்னிடம் வாங்கிய பிச்சையிலேயே கோவில் கட்டு கிறேனே தவிர நான், என்னுடையது என்று எதுவும் இல்லை. நீயே உன்னை நிறுத்திக் கொள் என்று வணங்கினார் அரசரைப் பார்த்து ஆரம்பிக்கலாமா என்று கேட்டார். சரி என்று தலையசைத்தார்.


மண் கொத்தியை உயரப் பிடித்து மக்களுக்கெல்லாம் காட்டினார். பெண்கள் குலவை போட்டார்கள். ஆண்கள் துணிகளை மேலே விசினார்கள். ஜெய விஜயீ பவ ,ஜெய விஜயீ பவ என கோஷம்ப் போட்டார்கள் .அந்தணர்கள் வேதம் சொன்னார்கள் .புலவர்கள் பதிகம் பாடினார்கள். பைராகிகள் உடுக்கைகள் முழங்கினர் .முரசுகள் முழங்குப்பட்டது.எக்காளம் ஊதப்பட்டது.


கூட்டத்தைப் பிளந்துகொண்டு தளிச்சேரிப் பெண்கள் ஆடி வந்தார்கள் .வரிசையில் நின்றவர்கள் சிவ சிவ சிவ என்ற உரக்கப் பாடி ஆடினார்கள். தாளம் போட்டார்கள் .மத்தளங்கள் முழங்கின .வீனணகளில் வெகு துரிதமாக ஒருவர் சிவநாமத்தை வாசித்தார். மக்களும் கைகொட்டி சிவநாமத்தை பாடினார்கள். அந்த இடமெங்கும் சிவநாமம் பொங்கி படர்ந்தது .மன்னரும் கை கூப்பினார் சிவசிவ சிவசிவ என்று அவர் கூறினார்.



பலமுறை மண்வெட்டியால் கொத்தப்பட்டு ஆழம் தோண்டப்பட்டது . பெருந்தச்சரின் ஆட்கள் களத்தில் இறங்கினார்கள். மண் வெட்ட வெட்ட காவிரி நீர் கொண்டுவரப்பட்டு. அந்தக் குழியில் காவிரி நீரை மாமன்னர் ஊற்றினார் .ஊற்றும் பொழுது அவருடைய பட்டமகிஷி நவரத்தினங்களை போட்டார் .பொற்காசுகள் இடப்பட்டன. மற்ற மனைவியரும் அமைச்சரும் சுற்றி இருக்கும் அனைவரும் தங்களுடைய அணிகலன்களை கலட்டி போட்டார்கள்.


கருவூராரும் அவர் பங்குக்கு சந்திரகாந்த கல்லை குழியில் இட்டார். குழி மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றப்பட்டது, நீர்மட்டம் குறையாமலும் ,அதிகமாகமலும் சரி சமமாக இருந்தது. மன்னரும் அவருடைய பட்டமகிஷியும் பெருந்தச்சரை சிரம் தாழ்த்தி வணங்கினார்கள். அந்தக் குழி முழுவதும் மூடப்பட்டு குச்சி ஒன்று வைத்து ,காப்பு கட்டி சிறப்பாக அஸ்திவார பூஜை முடிவு பெற்றது.


மன்னரும் அனைவரும் அரண்மனைக்கு திரும்பும் வழியில் செம்பியன் மாதேவி அவர்கள் இறந்த செய்தி வந்து சேர்கிறது. மன்னர் கருவூராரை திரும்பி இந்நிலையில் கோயில் கட்டும் பணி தொடரலாமா என்று கேட்கிறார். அது எந்த தடையும் இல்லாமல் நடக்கட்டும் அது இறைபணி. கருவூரார் எண்ணியபடியே அஸ்திவார பூஜையை முடித்து வைத்தார். மன்னர் இந்த துக்க செய்தியை எண்ணி அபசகுணம் என்று குழம்பி இருந்தார் நீ எதற்கும் கவலைப்படாதே ராஜராஜசோழ என்று கருவூரார் அவரைத் தேற்றினார்.


மன்னருக்கு பழைய ஞாபகங்கள் வந்தன செம்பியன் மாதேவி எவ்வளவு துணிச்சலாக அனைவருக்கும் முன்னால் அரச அவையில் தன்னுடைய தந்தையான சுந்தரசோழனிடம், அடுத்த அரசன் என்னுடைய மகன் தான் என்று கை நீட்டி கேள்வி கேட்டார். இதை அவையில் கூடியிருந்த சேனாதிபதியும் பழுவேட்டரையர்களும் ஒத்துக்கொள்ளவே இல்லை. சுந்தர சோழன் அவர்களும் இதற்கு என்ன அவசரம் என்று கேட்டார். ஆம் அவசரம்தான் ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்ட உள்ளதாக கேள்விப்பட்டேன் .இதை எதிர்த்து பல கேள்விகளும் எழுந்தன அவையில், மன்னர் யோசித்து இதற்கு ஒரு முடிவு சொல்கிறேன் நீங்கள் அவசரப்பட வேண்டாம் என்று பாட்டியை சமாதானப்படுத்தி அனுப்பினார்.


இதை அங்கே நானும் ,என்னுடைய தமக்கை குந்தவை பிராட்டியாரும் கவனித்துக் கொண்டிருந்தோம் . அப்பொழுது தமககை நீதான் அரசனாக வருவாய் என்று ,ஜோசியர் சொன்னார் என்று கூறினார்.


ஆதித்த கரிகாலனோ எப்பொழுதும் வெறி பிடித்தது போல், போர் போர் என்று போய்க் கொண்டு இருக்கிறான். அவன் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படுவதில்லை. ஊர்மக்களும் இவர் மன்னர் ஆனால் நிலைமை எப்படி இருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். அதனால் நீ தான் இந்த ஊர் மக்களையும், தேசத்தையும், கடல் கடந்து சென்று ஈழம் வரை சோழ தேசத்தின் புகழ் பரப்ப வேண்டும்.



அருண்மொழி வர்மன் ஈழம் நோக்கி படை எடுத்து சென்றார், ஆதித்த கரிகாலனோ பாண்டிய நாட்டை அழித்தே தீருவேன் என்று வெறி பிடித்து படையெடுத்துச் சென்றார். சொன்னது போலவே பாண்டிய தேசம் முழுவதும் அழித்துவிட்டு பாண்டிய மன்னனின் தலையோடு சோழதேசம் திரும்பினான். இதனால் ஆத்திரம் கொண்ட மிஞ்சிய பாண்டியர்களும் சேர அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சூழ்ச்சியில் ஆதித்த கரிகாலனை கடம்பூரில் வீழ்த்தினார்கள்.


இதனால் பெரிதும் கவலை கொண்ட சுந்தர சோழனும் ,மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டவில்லை என்றால் சோழ தேசத்தில் பிரிவினை உண்டாகும் என்று எண்ணி, செம்பியன் மாதேவியின் மகனான, உத்தம சோழன் என்னும் மதுராந்தகனுக்கு முடிசூட்டினார்.


சேர நாட்டு அந்தணர்கள் ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரன் மதுராந்தகனை கையில் வைத்துக் கொண்டார்கள். நாட்டையே ஆட்டிப் படைத்தனர், பின்பு ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களே தன்னுடைய அண்ணனின் மரணத்திற்கு காரணம் என்று உண்மை அறிந்தவுடன் அவர்கள் தேசத்தை விட்டு விரட்டப்பட்டார்கள்.


மதுராந்தகன் எங்கே இருக்கிறார் என்ற சரியான தகவல் தெரியாத காரணத்தினால் ராஜராஜசோழன் முறைப்படி செம்பியன்மாதேவியை அடக்கம் செய்தார் .அவருடைய மரணத்தை ஒட்டி பல தானங்களும் கொடுக்கப்பட்டது.




அந்தணர்களின் வாரிசுகள் கொல்லிமலையில் ,போட்ட திட்டம் நடைபெறவில்லை என்று வருந்திக் கொண்டிருந்தனர். அங்கு சில பாண்டிய நாட்டை சேர்ந்த பெண்கள் வந்தார்கள் கணவரன்மார்கள் பற்றி ஏதேனும் விஷயம் தெரியுமா என்று அறிவதற்காக வந்தார்கள். அதில் ஒரு பெண் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் வயதிற்கு வரும் முன்னே கல்யாணம் ஆகி விட்ட காரணத்தினால் தன்னுடைய கணவன் யார் என்று கூட அடையாளம் தெரியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தால், அனை வரையும் சமாதானப்படுத்த ஒரு மூட்டையை கொண்டுவந்து கொட்டினார்கள். அவர்களுடைய கணவன்மார்கள் அனுப்பி விட்ட தூது அணிகலன்கள் இருந்தன. அதைக்கண்டு ஒவ்வொருவரும் ஆனந்த பட்டார்கள் .என்னுடைய கணவன் உயிரோடு தான் இருக்கிறார் என்று. அந்த இளம்பெண் மற்றும் ஏதும் அறியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் மலை உச்சியிலிருந்து குதித்து தன்னுடைய உயிரை நீக்கிக் கொண்டாள்.


காஞ்சிபுரத்தில் பாண்டிய நாட்டில் இருந்து வந்திருக்கும் கைதிகளில் ஒருவரான குணசீலன் கண்டு வியந்தான் இளவரன். நீ தானே போரின் போது கோட்டை வாசலைத் திறந்து விட்டது என்று கேட்டான். நீ ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டான். அப்படி திறக்காமல் இருந்தால் நீங்கள் வைத்த தீ அரண்மனையிலிருந்து அனைவரையும் அழித்து இருக்கும். ஏதாவது மிஞ்சினால் தான் அடுத்த தலைமுறையாவது வந்து உங்கள் சோழ தேசத்தை தோற்கடிக்கும்.


இதைக் கேட்டு வியந்த இளவரசன் நீ எதுவும் அமைச்சரா ?என்று கேட்டார் இல்லை நான் வெரும் கோட்ட வாயில் காவலன் தான். என்னுடைய தந்தையார் தான் அமைச்சர். இங்கே உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்று கேட்டார் இளவரசர். அதற்கு குணசீலன் தலையைக்குனிந்து அழுவ ஆரம்பித்தார், ஏன் ஏதும் சௌகரியங்களும் குறைபாடு இருக்கிறதா ?என்று கேட்டார். அதில் ஒன்றும் குறை இல்லை தினமும் துளசியை கொண்டு நாராயணன் மந்திரம் சொல்லுவது எங்களது வழக்கம், அதற்கு இங்கு வழியில்லை. உனக்குத் தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு இங்கேயே அதை நீ தொடர்ந்து செய்யலாம் நான் உனக்கு அனுமதி அளிக்கிறேன் என்று கூறினார்.


குணசீலனும் வலுவான 10 ஆட்களை ,அவர்கள் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து துளசி மாடம் அமைத்து நாராயணனை வழிபட தொடங்கினர். திடீரென்று அதில் ஐந்து பேர் காணவில்லை, இளவரசன் அழைத்து விசாரித்தார் எங்களில் 5 பேர் தாய் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள், நாங்கள் இங்கே அழைத்து வந்த பிறகு அதையே எண்ணி அன்னம் தண்ணி இல்லாமல் எங்களுடைய மனைவிமார்களும், அம்மா மார்களும் ,தங்கைமார்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் .


அவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சென்றிருக்கிறார்கள். நம்பவில்லை என்றால் மிச்சம் ஐந்து பேர் இங்கே இருக்கிறார்கள். இதைக் கேட்ட இளவரசர் மீண்டும் வாயடைத்துப் போனார்.


தொடர்ந்து நாராயண வழிபாடு நடைபெற்றது, குந்தவை பிராட்டி யாரும் அதில் சரி சமமாக கலந்து கொண்டார்.

நன்றி

முதல் பாகம் முடிவடைந்தது ,இரண்டாம் பாகத்தில் சந்திப்போம்......


Click here for Udayar audio book part 1👇


Udayar audio book part 1:3 

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...