*துலைந்து போன விளையாட்டுக்கள்*
-ஜெயா
துலைந்து போன நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் வெறும் விளையாட்டுக்களல்ல
நம் பண்பாட்டை
எடுத்துச் சொல்லும் ஆவணம்
தொழில் நுட்பப்பிடியில்
கனவாக, காணலாகிப்போன
நம் விளையாட்டுக்கள்
விடுமுறை தினங்களில்
வீதிகளிலும், திண்ணைகளிலும்
சிறார் முதல் பெரியோர் வரை
பலரையும் பலவகையாய்
அலங்கரித்த விளையாட்டுக்கள்
வீரம், வேகம்,
விவேகம், விடாமுயற்சி
முதற்கொண்டு கணிதத்தோடு
கண்- கை ஒருங்கிணைப்பு, சொல்லித்தரும்
விளையாட்டுக்கள்
என
பல்லாங்குழி, தாயம்
பாண்டியாட்டம், ஆடு-புலியாட்டம்,
நொண்டி, நாலு முக்கு கல்லு ,
கல்லான்கள், சில்லாக்கு,
கோலிகுண்டு, கிட்டிதாண்டு,
கண்ணாம்மூச்சி, கல்லா மண்ணா,
ஒத்தையா-ரெட்டையா, உப்பு மூட்டை ,
கலர் சொல்லி விளையாடுதல்,
கூட்டஞ்சோறு ........
எங்கே போயின இந்த விளையாட்டுக்கள் ?

நம் பண்டைய விளையாட்டுகள் எல்லாம் அண்டை நாடுகளில் மலர்ந்து கொண்டிருக்க....நம்நாட்டில் மறைந்து கொண்டிருக்கிறது....
ReplyDeleteS very true words.
ReplyDeleteஆம் உண்மை..
ReplyDeleteஉண்மை ஜெயா..பல நேரங்களில் இதனை நினைப்பது உண்டு...எத்தனை மகிழ்ச்சி தின்னைகளிலும்,வீதியில் விளையாடும் போது...
ReplyDelete