Sunday, September 27, 2020

லஞ்சம் by Veena Shankar

                                             லஞ்சம்

                                               -வீணா சங்கர்

                         தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு லஞ்சத்தை எப்படி ஒழிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தார் சுந்தரம். அவர் ஒர் நியாயமான அரசு அதிகாரி என்பதால் லஞ்சம் வாங்கியதே இல்லை. 

         சுந்தரத்தின் வீடு மிகவும் பரபரப்பாக இருந்தது. எல்லோரும் அவசரமாக கிளம்பி கொண்டிருந்தார்கள். புதுப் படத்திற்கு டிக்கெட் புக் பண்ணி இருந்ததால் தான் இந்த அவசரம். சுந்தரத்தைத் தவிர அனைவரும் போகிறார்கள். ரூ 50 டிக்கெட்டை ரூ 100 கொடுத்து படம் பார்க்க இவருக்கு விருப்பமில்லை என்பதால் இவர் போகவில்லை. யாரும் இவரை வற்புறுத்தவும் இல்லை. இது லஞ்சம் கிடையாது. அப்படியானால் இது என்ன என யோசித்துக் கொண்டிருந்தார். ' சார்,' என்ற திசையை நோக்கி திரும்பினார். ' எல்லாத்தையும் சுத்தமாக க்ளீன் பண்ணிட்டேன் சார். ' என்றான் வந்தவன். 'சரி இந்தா' என ஒரு ரூ 50 மற்றும் ரூ 10 தாள்களை நீட்டினார். அவன் அதிகமாக இருக்கு சார் என சொல்ல இருக்கட்டும் என்று சுந்தரம் பதிலளித்தார். இன்று ரூ 10 அதிகமாக கொடுத்தால் தான் நாளை கூப்பிட்டால் வருவான் என மனதினுள் எண்ணிக்கொண்டார். ஆனால் ' நான் அவனுக்கு கொடுத்தது அன்பளிப்பா? இல்லை லஞ்சமா? என மீண்டும் சிந்தனையில் மூழ்கினார் சுந்தரம். அவருக்கு பதில் கிடைக்கவில்லை. உங்களுக்கு...?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...