அனைவருக்கும் வணக்கம்,
இராஜ ராஜசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார் பாண்டிய கைதிகளால் உருவாக்கப்பட்ட நாராயண பூஜையில் கலந்து கொண்டார் .அப்பொழுது அங்கே அமைக்கப்பட்டிருந்த பெருமாளுடைய சிலை மண்ணால் வடிக்கப்பட்டு, சிலை மிகவும் அழகாக இருந்தது .அதை யார் வடித்தது என்று ,அந்த கைதியை கூப்பிட்டு பாராட்டினார் .நீங்கள் விரும்பினால் இதே மாதிரியான ஒரு பெருமாளுக்கு விண்ணகரத்தை இங்கே கட்டுங்கள் என்று அதிகாரமும் கொடுத்தார் .அதிலே பரவசமான அந்த கைதி என்னுடைய குடும்பத்தாரையும் இங்கே அழைத்து வந்து வைணவனாக வாழ ஆசைப்படுகிறேன். இங்கிருந்து ஒரு துளசிச் செடியை எடுத்து சென்று பாண்டிய தேசத்தில் நட்டுவைத்து அங்கேயும் என்னுடைய பிள்ளைகளை இதே மாதிரி ஒரு விண்ணகரத்தை உருவாக்க சொல்லுவேன் என்று அந்த கைதி மிகவும் உற்சாகத்துடன் குந்தவை பிராட்டியார் இடம் தெரிவித்தார் .அதுமட்டுமல்லாது இங்கே நான் எடுக்கும் விண்ணகரத்தில் தங்களுடைய பெயரை பொறிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
எதற்கு இந்த சலுகைகள்? குணசீலன் அவனோடு இருக்கும் சக கைதிகளிடம் பேசிக்கொண்டிருந்தான்,எப்படியாவது இங்கே இருக்கும் அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டு பாண்டிய தேசத்தில் சென்று மீண்டும் படையெடுத்து வருவேன்.அதில் கலந்திருந்த சோழப் படை வீரர்கள் உனக்கு இப்படியெல்லாம் ஆசை இருக்கிறதா? என்று கூறி குணசீலனுக்கு அவருடைய தோள்களிலே புலி முத்திரையை இட்டனர் அதுமட்டுமல்லாமல் கழுத்தில் இரும்பு வளையம் அடித்தனர் .கைதியின் தோளில் புலி சின்னம் இருந்தால் மிகவும் ஆபத்தானவன் என்று அர்த்தம் .
கைதிகள் அனைவரும் காஞ்சிபுரத்தில் இருந்து தஞ்சை நோக்கி நடக்க புறப்பட்டனர். இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பொழுது குணசீலன் தஞ்சையில் காவிரி ஆற்றை கண்டு வியப்படைந்தான். அங்கே அனைவரும் குளித்துவிட்டு உணவருந்தினார்கள். நெல்லரிசியை கண்ணில் பார்க்கும் போதே அவன் கண் கலங்கிவிட்டது .பாண்டிதேசத்தில் நெல் அரிசி என்பது மிகவும் அரிது எப்பொழுதோ ஒரு கைப்பிடி அரிசி குடும்பத்திலிருக்கும் அனைவருக்கும் கிடைக்கும். அவன் சொந்த தாய் நாட்டை எண்ணி கண் கலங்கினான். வளர்ச்சி அடைந்த சோழதேசம் ,எவ்வளவு அழகான தெருக்கள் ,அகலமான வீதிகள். எவ்வளவு இந்த தேசம் வளர்ச்சி அடைந்திருக்கிறது ,நம்முடைய தேசம் ..என்று மனம் வருத்தம் கொண்டான்.
வல்லவராயர் வந்தியத்தேவரை குணசீலன் சந்தித்தான் யாரப்பா? என்று விசாரித்தார் நான் பாண்டிய நாட்டின் படை உபதளபதியாக இருந்தவன்.என்னுடைய 12 வயதில் இருந்து பல போர்களிலும் கலந்து இருக்கிறேன் ,ஆனால் ஒன்றும் ஜெயிச்சது இல்லை . ஏன் ?தாய் நாட்டிற்கு செல்லவில்லை என்று வந்தியத்தேவன் கேட்டார் .அதற்கு சோழ நாகரிகத்தில் சன்மானம் கொடுப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் .இங்கு அவர்களுக்கு ஏதேனும் உதவி புரிந்தால் அதற்கு தக்க சன்மானமாக எனக்கு விடுதலை அளிக்கப்படும் .பின்பு எங்களுடைய ஒற்றர் படையில் சேர்ந்து மீண்டும் உங்களை எதிர்ப்பேன்.
இதைக் கேட்டு வியப்படைந்த வந்தியத்தேவர் ,என்னுடைய சேவகனாக இந்தக் கைதிகளின் படைத்தலைவனாக நியமிக்கிறேன் உன்னை என்று கூறினார். அந்தக் கைதிகள் படை தஞ்சை நோக்கி நகர்ந்தது. இந்தக் கூட்டத்தின் இடையிலேயே பிரம்மராயர் உடைய ஒற்றன் ஆனா வைணவ தாசன் ,குணசீலனை சந்திக்கிறார். எத்தனை காலம் இங்கே கைதியாக இருக்கிறாய் என்று கேட்கிறார். கடந்த மூன்று ஆண்டு காலமாக இங்கே நான் கைதியாக இருக்கிறேன் .நன்கு பயிற்சி பெற்று என் மக்களுக்கும் பயிற்சி கொடுக்கப் போகிறேன். இறைவனுக்கு செய்யும் தொண்டு மிகப்பெரியது அதற்காக கோயில்கள் கட்டும் பணியில் ஈடுபட போகிறேன்.
அங்கே குணசீலன் அரண்மனையின் வாசலில் கொண்டு நிறுத்தப்படுகிறான். அதிகாரச்சியின் பொறுப்பில் வந்திய தேவர் வீட்டிற்குஅழைத்து செல்லப்படுகிறான்.
அந்த அதிகாரச்சி பார்த்ததும் மிக ஆச்சரியமாக இருந்தது , ஒரு சாளுக்கிய கைதியை தண்டிக்கும் விதத்தை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான். ஆண்களுக்கு முன்பு பெண்கள் வருவதற்கு நாணப்படுவார்கள் அந்தளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன,பாண்டிய தேசத்தில் குடும்பங்களில் ,இங்கே ஒரு தனி பெண் அதிகாரம் கண்டு மிகவும் வியப்படைந்தான். அதை கண்டு பெருமை பட்டான் எவ்வளவு வளர்ச்சி அடைந்த சோழ தேசம் என்று ஆச்சரியப்பட்டான்.
அதுமட்டுமல்லாது குந்தவி பிராட்டியாருக்கு வந்தியதேவன் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், பெண்களுக்கு சோழ தேசம் கொடுக்கும் அதிகாரத்தையும் கண்டு வியந்தான்.
கடைசியாக கோயில் கட்டும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ,அங்கே இந்த மாதிரி அதிகாரம் கொடுத்து இருப்பதை கண்டு, அங்கே படை தளபதிகள் குணசீலனுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து அவனுடைய மனதில் இருக்கும் உண்மையை வெளியே கொண்டுவர நினைத்தார்கள்.
இதே மாதிரி கோயிலை பாண்டிய தேசத்தில் கட்டுவேன் மடையர்களே!! நீங்கள் மட்டுமா கட்டுவீர்கள்!! நாங்களும் கட்டுவோம். என்றும் அடி மனதில் இருந்து குணசீலன் பேச ஆரம்பித்தான்.
அங்கே வந்த ராஜராஜசோழன் ஏன் இப்படி நடத்துவீர்கள் முதலில் அந்த கைதிக்கு மாற்று மருந்து கொடுங்கள் என்று கூறினார்.அதன் பின்னர் மன்னர் குணசீலனை அழைத்து எதற்காக நீ கோவில் கட்டும் பணியில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய் என்று கேட்டார் .அதற்கு குணசீலன் உணர்வுகளைக் கொண்டு செல்லப் போகிறேன் இங்கு நன்றாக பயிற்சி பெற்று இதே போல் நான் என் தேசத்தில் உள்ளவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அவர்களையும் வளர்ச்சியடைய செய்யப்போகிறேன். உடனே மன்னர் அங்கிருந்த அனைவரையும் சோழ நாகரிகத்தை பற்றி கேட்டார் ,கடைசியாக குணசீலனை கேட்டார் இத்தேசத்தின் நாகரிகம் இறையாண்மை .ஒரு நாகரிகம் மதத்தால் ஒன்று படுவது நல்லது, அது வெகு வேகமாக வளர்ச்சி அடையும். சைவ வைணவ மத வேறுபாடுகள் இல்லை ,அதனால்தான் புத்த மற்றும் சமண மதம் இங்கே வளர முடியவில்லை .
எடுத்துக்காட்டாக இங்கு திருத்தொண்டர் புராணம் அதில் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களையும் பார்க்கும் பொழுது மனம் உருகி விடுகிறது. இதுதான் சோழ தேசத்தின் நாகரிகம் இந்த நாகரிகத்தை நான் உள்ளங்கையில் எடுத்துச் சென்று ,என்னுடைய தேசத்தையும் இதேபோல் உருவாக்குவேன் .இதேபோல் ஒரு கற்றளி என்னுடைய பாண்டிய தேசத்தில் உருவாக்குவேன் என்று உறுதி கூறினான் .
குணசீலனை கண்டு வியந்து, மன்னர் அவருடைய சால்வையை பரிசாக கொடுத்தார்.
அப்பொழுது அங்கே மன்னன் மிகவும் சோர்வாக இருந்தால் வந்தியத்தேவனும் ,குந்தவை பிராட்டியார் ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய் அனைத்தையும் இறைவன் அடியில் விட்டு விடு .நீ எதற்காகவும் கவலைப்பட தேவையில்லை என்று வந்தியதேவன் மன்னரை தேற்றுகிறார்.
மன்னர் போர் ,கோயில் தவிர சோழ தேசத்தின் பெருமையை அருளுடைமை மூலமும் நாம் நிரூபிக்க வேண்டும் .ஒவ்வொரு ஊரில் இருந்தும் தமிழகம் முழுவதும் திரட்ட வேண்டும் .நம்பி ஆண்டவர் நம்மிடம் ஒப்படைப்போமா ?என்று ஆலோசனை கேட்டார்.
ஏற்கனவே நம்பியாண்டர் நம்பி தேவாரம் ,திருவாசகம் திரட்டுவதில் தீவிரமாக உள்ளார்.ஒவ்வொரு ஊரிலிருந்தும் திரட்ட வேண்டும் என்றால் அதற்கு போர் வீரன் போல் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் சரியான ஆள் என்று வந்தியதேவன் கூறுகிறார்.
ஆம் நானும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கும் ஒரு இடைவெளி வேண்டும் என்று மன்னர் குறிப்பிட்டார், குந்தவை பிராட்டியார் இல்லை உன்னை தவிர வேறு யாரும் கோயில் கட்ட முடியாது .யார் வேண்டுமானால் அந்த பணியை புரியலாம் ஆனால் இந்தக் கோயில் கட்டும் பணியை உன்னை தவிர வேறு யாராலும் முடியாது என்று வேண்டிக் கொண்டார் குந்தவை பிராட்டியார்.
பெரிய குழப்பத்தில் இருந்தார் சேனாதிபதி பிரம்மராயர்,இது பெரிய தவறு சரியான பாதுகாப்பு இல்லாமல் கைதிகளிடம் இவ்வளவு நெருங்கி பழகுவது .மன்னர் இவ்வளவு நெருங்கி பழகுவது மிகவும் தவறு ,இது ஆபத்தில் போய் முடியும் .ஒரு பக்கம் மன்னர் ,மற்றொரு பக்கம் இளவரசன் நான் சொல்லுவது என்ன வென்று கூட கேட்காமல் கடற்பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்.முதலில் அவனுடைய படைகளை சென்று அங்கே நோட்டமிட்டு பின்பு படை எடுத்துச் செல்லும்படி அறிவுரை கூறினாலும் கேட்பதற்கு தயாராக இல்லை , என்று மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் .
அந்த வேளையில் அருண்மொழி படடன் வருகை, இது அறிந்து தான் உடனடியாக இங்கே வந்தேன் .எதுவும் விவரிதமாக நடப்பதற்குள் நம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தந்தையும், மகனும் பேசிக் கொள்கிறார்கள்.
நன்றி.
மீண்டும் தொடரும் உடையார் பாகம் இரண்டு...
Click here for Udayar audio book part 2:1👇

Arumaiyana,story,super
ReplyDeleteThank you 😊
ReplyDelete