Tuesday, September 1, 2020

ரேடியோபெட்டியும் நானும் by Vidhya Nivash

               ரேடியோபெட்டியும் நானும்

அனைவருக்கும் வணக்கம்,

ரேடியோவை பிடிக்காதவர்களே கிடையாது, இன்னும் ஞாபகம் இருக்கு எனக்கு என்னுடைய சிறுவயதில் அம்மாச்சி வழக்கமாக காலையில் எழுந்தவுடன் ரேடியோவை ஆன் பண்ணி விடுவாங்க .மங்கள வாத்தியத்துடன் ஆரம்பிக்கும் ரேடியோ அலைவரிசை அதை தொடர்ந்து எல்லா மத சாமி பாட்டும் ஒலிபரப்பு வாங்க.

இன்னமும் என் காதுகளில் அது ஒலித்துக் கொண்டிருக்கிறது .அங்கே ஆரம்பித்தது என்னுடைய ரேடியோ பயணம்.



அதேமாதிரி என்னுடைய அம்மாவும் காலை எழுந்தவுடன் ரேடியோ பெட்டியை ஆன் பண்ணுவாங்க. காலையில் அதில் ஒலிக்கும் செய்தி சுருக்கமும் ,விளம்பரங்களும் மற்றும் ஊரில் நடக்கும் அனைத்து செய்திகளையும் அதில் அறிந்துகொள்ள முடியும்.


என்னுடைய பெரியப்பா போடுவார் பட்டா சாலையில் அதுவும் ரொம்ப பழைய ரேடியோ பெட்டி , எங்கிருந்தாலும் கேட்கும். கையளவு உள்ள டிரான்ஸிஸ்டர் அதிலிருந்தும் பாட்டு இனிமையாக வரும். சிறுவயதில் ரசித்த காட்சி பக்கத்து வீட்டு தாத்தா தோட்டத்துக்கு நடுவுல குடிசை அவருடைய தனி உலகம் ரேடியோவுடன்...


ரேடியோ தான் எல்லோருக்கும் வெளி உலகை காட்டியது. அதில் ஒலிபரப்பாகும் நாடகங்கள் , ஞாயிற்றுக்கிழமை ஆனால் திரைப்பட நிகழ்ச்சியும் மறக்க முடியாத நினைவுகள். அதன் பின் வந்தது தொலைக்காட்சிப் பெட்டி அனைவரது பார்வையும் அதன் பின் சென்றது.



எனக்கும் ரேடியோவிற்கும் உள்ள தொடர்பு குறையவில்லை. குறிப்பாக பேருந்தில் பயணிக்கும் போது ரேடியோ கேட்பது யாரோ நம்மிடம் பேசிக் கொண்டே வருவது போல் தெரியும். ரேடியோ இருந்தால் போதும் தொலைதூரப் பயணம் இனிமையாக முடியும்.


என்னுடைய கணவரும் எனக்கு ரெண்டு ரேடியோ பெட்டி வாங்கிக் கொடுத்தார் எதுவும் எனக்கு செட் ஆகல கடைசியாக கைப்பேசி இலேயே ரேடியோ கேட்க ஆரம்பித்தேன். சமையலறையில் வேலை செய்யும் பொழுது எப்பொழுதும் பாட்டு கேட்கும் பழக்கம் இருந்தது இப்படி இங்கு இருக்கும் ஒரு பிரபலமான அலைவரிசையை கேட்க ஆரம்பித்தேன். இங்கு உள்ள செய்திகளை தெரிந்து கொள்வதற்காக.

எனக்கு காலையில அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கமுண்டு. அப்பொழுது ஒரு தொகுப்பாளர் அதிகாலையில் பேசுவார் புதிய சிந்தனைகளுடன்,இரண்டு நிமிடம். அதை தொடர்ந்து ஒரு பெண் தொகுப்பாளர் பேசுவார் நிறைய செய்திகள் மற்றும் தெளிவும் கிடைக்கும் ,பல பிரபலமானவர்கள் அனைத்து துறையிலிருந்து வந்து பேசுவார்கள் ரொம்பபயனுள்ளதாக இருந்தன.


அதிகாலையில் சாமி பாட்டு கேட்கும் பழக்கம் இருந்தது.. இவருடைய ப்ரோக்ராமை கேட்க ஆரம்பித்தவுடன் என்னை அறியாமல் தினமும் ஆர்வமாக இருந்தேன். அவரே அதே அலைவரிசையில் 10 மணிக்கு ஒரு ப்ரோக்ராம் பண்ணுவார். ஒரு நாள் காலையில் அவரே விளக்கினார் அதிகாலையில் பேசுவதற்கும் ,10 மணிக்கு பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று ஒருவர் கேட்டார் என்று.அதன்பின் அவருடைய மற்றொரு ப்ரோக்ராமையும் கேட்டேன் பல வித்தியாசங்கள் இருந்தன .அதிகாலையில் பேசுபவர் மிகவும் பக்குவப் பட்டவர் போலவும் 10 மணிக்கு பேசுபவர் ரொம்ப ஜாலியா ஆனவர் போலவும் இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது ரேடியோ டிரிக்ஸ் என்று ஒரு திரைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.


அதன்பின் திடீரென்று இருவரும் வருவதே இல்லை ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. ஆனால் என்னால் அந்த ரேடியோ அலைவரிசையை திரும்பிப் கேட்கமுடியவில்லை . வேறு பல அலைவரிசைகள் டிரை பண்ணினேன் இருந்தாலும் அவர் பேசிய மாறி யாரும் தெளிவாக பேச முடியவில்லை ,பழையமாதிரி எதுவும் இல்லை.. அந்த அளவிற்கு ரேடியோவில் வரும் தொகுப்பாளர் பழகி விட்டார்.



அப்புறம் ஒரு வழியா மீண்டும் ரேடியோ கேட்க ஆரம்பித்து இருக்கேன் எவ்வளவு பேரு வெறித்தனமாக ரேடியோ கேக்குறாங்க.. குடும்பத்தை விட்டு இங்கே வந்து வேலை செய்பவர்களுக்கு அது ஒரு உறவாக இருக்கிறது.


ரேடியோ கேட்கும்போது எவ்வளவு மன கவலையாக இருந்தாலும் பறந்து போயிடும் அதில் வந்து பேசுபவர்கள் அந்த அளவிற்கு பேசுவார்கள். என்னதான் டிவி வந்தாலும் ரேடியோ பெட்டி மாதிரி ஒரு நல்ல நண்பன் கிடைக்க மாட்டான்..

நன்றி

8 comments:

  1. ரொம்ப சரி வித்யா, நவீன தகவல் தொழில்நுட்பத்திற்க்கு முன் நாம் அனுபவித்த பொக்கிஷம் ரேடியோ!

    ReplyDelete
  2. உண்மைதான் வித்யா...நான் நடைபயிர்ச்சி போகும்போது,பயணம் செய்யும் போது ரேடியோ கேட்பது உண்டு..அதில் கிடைக்கும் மனமகிழ்ச்சியே தனி..

    ReplyDelete
  3. Very good share vidhya.i need to experience it.romba asaiya ieuku ne sollum pothu.ne rasithathai ne sollum pothu na rasikiren romba alaga eluthi irukinga. Keep it up.valarmathi.

    ReplyDelete
  4. Next to next advertisement kooda sernthu dialogue pesirukkom,school ready agum podhu💓💓😍lovely memories..vidhya u r bringing back lovely moments🥰

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...