Monday, September 14, 2020

உடையார் பாகம் ஒன்று தொடர்ச்சி சுருக்க விளக்கம்:1 by Vidhya Nivash

 



அனைவருக்கும் வணக்கம் ,

பிரம்மராயர் குமுதினி வீட்டினுள் நுழைகிறார். ராஜராஜீ சந்தித்து வேறு ஏதும் விஷயம் இருக்கிறதா என்று கேட்கிறார். குமுதினி அவ்விடத்தை விட்டு விலக நினைக்கிறாள் ,ஆனால் ராஜராஜீக்கு அனைத்து விஷயங்களும் காஞ்சியிலேயே அறிவிக்கப்பட்டு தான் வந்திருந்தாள். இங்குதான் தங்க வைப்பார்கள், குமுதினி மற்றும் அவருடைய குடும்பத்தார் அனைவரும் பிரம்மராயரின் உளவுப் படையை சார்ந்தவர்களே. ஆம் ,ஐயா உங்களுக்கு சொல்ல மூன்று விஷயங்கள் இருக்கின்றன. இளவரசர் அவர்கள் எல்லைகளை வலுப்படுத்த வேண்டும், இந்நிலையில் அரசர் கோயில் கட்ட எண்ணுவது நியாயமா,என்று வருத்தப்பட்டார்.


இரண்டாவது செய்தி செம்பியன்மாதேவி பற்றியது, கோயில் கட்டுவதற்காக ஒரு சின்னக் கல்லை கொடுத்தாலும் செல்வத்தை அள்ளிக்கொடுத்து விரையம் செய்வதாக இளவரசன் வருத்தப்படுகிறார். திருவக்கரையில் செம்பியன் மாதேவி அவர்களை பார்த்துவிட்டு தான் வருகிறோம்.


செம்பியன் மாதேவி இராஜராஜ சோழன் அவர்களின் மூத்த பாட்டி .அவர் ஒரு சிவ தொண்டர் ஒவ்வொரு ஊராக சென்று காளி கோயில் கட்டுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இன்னும் சில காலமே உயிருடன் இருப்பார் என்று ஜோசியர் கூறிவிட்டார். இந்த செய்தியை இளவரசருக்கு அறிவிக்க ஆள் அனுப்பிவிட்டேன்.




மூன்றாவது செய்தி சில தினங்களுக்கு முன்னாள் இளவரசர் அவர்கள் அவருடைய பெரிய தந்தை ஆதித்த கரிகாலனுடைய வாழ்க்கையை ஒரு நாடகமாக நடத்தி கண்டு களித்தார். அதை பார்த்தவுடன் மனம் நொந்து போயி, ஆதித்த கரிகாலன் அவர்கள் இறந்த நாளை சோழ தேசத்தின் கருப்பு நாளாக எண்ணி ஒவ்வொரு ஆண்டும் படையெடுத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.


அதுமட்டுமில்லாமல் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து வீர நாராயண ஏரியை நிரப்பினால் தான் அவருடைய ஆத்மா சாந்தி அடையும் என்று எண்ணுகிறார்.

இதை யார் அறிவித்தது என்று கேட்டார் பிரம்மராயர் . இளவரசனின் அனுக்கியார் பரவை அவர்கள் தெரிவிக்கும்படி கூறினார் . இதைக் கேட்டவுடன் பிரம்மராயர் முகம் சுளித்தார். உடனே ராஜராஜீ கோபம் கொண்டு மன்னரின் நான்காவது மனைவியான பஞ்சவன்மாதேவி எங்கள் குலத்தவரே அதை யாரும் மறக்க வேண்டாம் என்று உரைத்தாள். உடனடியாக பிரம்மராயர் ஆமாம்மா எனக்கு வயதாகிவிட்டது மூளை சற்று குழம்பி விட்டது என்று வருத்தப்பட்டார்.


பஞ்சவன்மாதேவி பழுவூரில் பிறந்தவர். சிறந்த இறையடியாராக திகழ்ந்தவர். தில்லையில் அவருடைய சிவ நடனத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு அவரை காந்தர்வ விவாகம் செய்து கொண்டார் மன்னர் ராஜராஜ சோழன் அவர்கள். பின்பு அதை ஊர் முழுவதும் தெரியப்படுத்தினார். பஞ்சவன்மாதேவி அவர்களும் ஊரில் வந்தவுடனேயே அனைத்து மக்களின் அன்பையும் ,மன்னனின் பட்டத்து அரசியான உலகமாதேவியின் அவர்களின் அன்பையும் பெற்று விட்டார்.




அரண்மனைக்கு வந்த முதல் வேலையாக அங்கே வேலை செய்யும் வேலையாட்களின் ஊதியத்தை உயர்த்தி விட்டார். அனைவரும் வந்த உடனேயே அதிகாரத்தில் கையில் எடுத்துக்கொண்டார் என்று அரசல் புரசலாக பேச ஆரம்பித்தார்கள். அதற்கு அவர் சிதம்பரத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்ய யாரும் விருப்பப் படுவதில்லை. அதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். வேலையாட்களை உணவுக்காக வேலை செய்யும் விலங்குகள் போல நடத்தாமல் ,சமமாக நடத்த வேண்டும்.


செம்பியன் மாதேவியும் ஒரு முறை அவர் மீது கோபப்பட்டார் நீ உன்னுடைய நடனத்தாலேயே மன்னனை மயக்கினாய் என்று குற்றம்சாட்டினார். தேவாரப் பாடலை எடுத்து நடனமாடி சிவனையே கொண்டுவந்து நிறுத்தி இதைக் கண்டு தான், என்னை இறைப்பணி புரிவதற்காக மணந்துகொண்டார் என்று விளக்கினார். அதைக்கண்ட செம்பியன்மாதேவி அவர்களின் கண் கலங்கிவிட்டது. அவருடைய இறைத்தொண்டு கண்டு அவரும் அவர் மீது பற்றுக் கொண்டார்.


இளவரசருக்கு பத்துவயது அப்பொழுது ,அவரும் பஞ்சவன்மாதேவி மீது மிகுந்த அன்பு கொண்டார், அவரிடமே குதிரை பயிற்சி பெற்றார். அப்பொழுது உலகமாதேவி அவர்களுக்கு ஒரு மனக் கவலை வந்தது, அனைவருடைய உந்துதலால் வாரிசு பிரச்சனை வந்து விடுவோம் என்று எண்ணினார். அவர் பஞ்சவன்மாதேவி இடம் சென்று அந்த உரிமையை ராஜேந்திரனுக்கு கொடுத்துவிடு என்று கேட்டுக்கொண்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம் அக்கா நான் இங்கே அரசனுக்கும் ,நாட்டுக்கும் சேவை செய்யவே வந்துள்ளேன், வேறு எந்த உரிமை கொண்டாட நான் வரவில்லை என்று தெளிவாக கூறிவிட்டார்.



அதோடு மட்டுமில்லாமல் தன் சொந்த ஊரான பழுவூர் சென்று கர்ப்பப்பையை மலடாக்கி கொண்டாள். பின்னாளில் இது மன்னர் அறிந்து மிகவும் வருத்தப்பட்டார்.


திருக்காட்டுப்பள்ளியிலேயே ஒரு சிறிய அரண்மனை இருந்தது, அங்குதான் பஞ்சவன்மாதேவி அவர்கள் அரசருக்காக காத்திருந்தார். ஊர்க் கூட்டம் முடிந்தவுடன் அரசரும் ,ராஜராஜீயும் இங்கே வந்தடைந்தனர். அரசர் மேலே ஓய்வெடுக்க சென்று விட்டார் , அப்பொழுது ராஜீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய் என்று பஞ்சவன்மாதேவி அவர்கள் கேட்கிறார்கள். ஆமாக்கா முக்கியமான செய்தி இருக்கிறது என்று இருவரும் தனிமையில் செல்கிறார்கள். சேர தேசத்திற்கும் பாண்டிய தேசத்திற்கும் நடுவே காட்டில், கொல்லிமலையில் அரசருக்கு எதிராக கடந்த 5 மாதமாக அபிசார ஹோமம், சேர அந்தணர்களால் நடத்தப்படுகிறது. படைகளால் வெல்ல முடியாமல் இவ்வாறு குறுக்கு வழியில் முயற்சி செய்கின்றனர். ராஜராஜ சோழனை அழித்துவிட்டால் சோழ தேசத்தை கைக்குள் கொண்டு வரலாம் என்று எண்ணுகின்றனர். எப்படி கிடைத்தது இந்த செய்தி என்று ஆர்வத்துடன் கேட்கிறார்.. பாண்டிய நாட்டு ஒற்றர்கள் மூலம் வந்தடைந்தது. மன்னரின் உடல் நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும்.


மதுராந்தகத் கண்டராதித்தர் இந்த செய்தியை ஓலையில் எழுதி, பல்லவராயன் இடம் கொடுத்து விட்டிருக்கிறார். மதுராந்தகரை கட்டிக்கொண்டு சென்று அரசருக்கு எதிராக ஹோமம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார்கள். அடி தாங்க முடியாமல் அவரும் ஒத்துக் கொண்டு நமச்சிவாய மந்திரத்தை மட்டும் மனதில் ஜெபித்து இருக்கிறார். அவர் எப்படியோ தப்பித்து வந்து மன்னனின் இரண்டாவது மகளான மாதேவடிகள் புத்தா மடத்தில் அடைக்கலம் கேட்டுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது.


மன்னரின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுமாறும், இதை கருவூர் தேவருக்கு அறிவிக்கும் படியும் .பிரம்மராயருக்கு தெரியாமல் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஏனென்றால் பிரம்மராயர் இதை அரசு ரீதியாக கையாள்வார் .இதை அப்படி கையாளக்கூடாது அறிவு ரீதியாகவே கையாளவேண்டும். இதை அங்கு இருட்டில் மறைந்து கொண்டிருந்த பிரம்மராயரின் ஒற்றனான, குமுதினியின் கணவனான ஆதிகேசவன் ஒட்டுக் கேட்டு கொண்டிருந்தார்.


மன்னருக்கு மூன்று குழந்தைகள் அதில் முதல் மகள் குந்தவை, இரண்டாவது மகள் மாதேவடி, மூன்றாவது தான் இளவரசன் ராஜேந்திரன். இரண்டாவது மகள் அவளுடைய பதினாறு வயதில் சைவ மதத்தை விட்டு ,புத்தமதத்தில் சேர்ந்து நான் இனி துறவியாக வாழப் போகிறேன் என்று கூறிவிட்டார். மதம் மாறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. என் தேசத்திற்கு விரோதமாக செயல்பட்டால் மட்டுமே நான் பகைவன் ஆவேன் என்று அறிவித்து விட்டார் மன்னர். சீர் வரிசையுடன் புத்த மடத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர். அதிலிருந்து வெளிவர மன்னருக்கு இரண்டு வருடங்கள் ஆகின. இதற்கிடையில்

திருவல்லத்தில் இருந்த மதுராந்தகரும் காணாமல் போய்விட்டார், சேர தேசத்தில் மட்டும் ,பாண்டிய தேசத்தில் சென்று மன்னருக்கு எதிராக செயல்படுகின்றார் என பல செய்திகளும் வந்தன.


கடந்த 20 வருடமாக கற்றளி எழுப்புவதையே ஆசையாக மனதில் கொண்டு இருக்கிறார் மன்னர்.அதற்காக பல கற்பனைகளை மனதில் கட்டிக் கொண்டிருக்கிறார் . ராஜராஜீ கூறிய செய்திகளை கேட்டு மிகவும் பெரிய குழப்பத்தில் இருந்தார் பஞ்சவன்மாதேவி, இன்னும் மன்னரின் பாதுகாப்புகளை கடுமை படுத்தப்பட வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

இங்கே ஒட்டுக்கேட்ட செய்திகளை எல்லாம் ஆதிகேசவன் நேரடியாக பிரம்மராயரிடம் சென்று கூறினார். கொல்லிமலைக்கு ஒரு ஒற்றனை அனுப்பிவிட்டு ,அவரே நேரடியாக கருவூர்த் தேவரை காண புறப்பட்டார் பிரம்மராயர்.


மீண்டும் முதல் பாகம் தொடரும்.....


(பின் குறிப்பு: மதுராந்தகன் ,செம்பியன் மாதேவி மகன் ராஜராஜ சோழனுக்கு முன் சில காலம் மன்னராக இருந்தவர்.)


Click here for Audio book👇

Udaiyar audio book part 1:1

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...