Tuesday, September 15, 2020

உடையார் பாகம் ஒன்று தொடர்ச்சி சுருக்க விளக்கம்:2 by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

கருவூர்தேவர் ,ஒரு சிறந்த ஞானி ,சித்தர். ராஜராஜசோழன் அவர்களால் மனதால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட குரு. அவரே அனைவருக்கும் குரு அவர் அறியாமல் ஒரு தூசு கூட நகராது சோழ தேசத்தில், சேனாதிபதி பிரம்மராயர் உடைய மகன் அருண்மொழி பட்டன் கருவூர்தேவர் இடம்தான் வாழ்வியல் கற்றுக் கொண்டிருந்தார்.


அவருடைய தந்தையான பிரம்மராயர் தன்னுடைய குருவிடம் சென்று பயிற்சிபெற அனுப்பியிருந்தார்.

பயிற்சிக்கு வந்த மாணவர்களில் ஒருவன் கருவூர்த் தேவரை பார்த்து கேட்டான் நீங்கள் எந்த ஊரில் பிறந்தீர்கள். என்னுடைய தாயின் கருவறை தான் நான் பிறந்த ஊர் என்று கூறினார் குரு. 


உங்களுடைய பெயருக்கான காரணம் என்ன என்று அடுத்த கேள்வி கேட்டான். பதில் தெரியாது என ,விளக்க ஆரம்பித்தார் கருவில் வாழந்த காலம் தெரிந்தவர்கள் தேவன் , கருவில் வாழ்ந்த காலம் தெரியாதவர்கள் மனிதன். கருவில் தோன்றி, அதில் வாழ்ந்த காலம் தெரிந்ததால் ,கருவூர் தேவனுடைய பொருள்.



முதலில் அடுத்தவரிடம் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு , உன்னை உற்று கவனி. எப்படி ஐயா அது நடைபெறும். தியானத்தின் மூலமே அது நடைபெறும், இடைவிடாது மந்திர ஜெபம் அல்லது நாமத்தை திரும்பச் சொல்ல சொல்லவே அதை நீ அடைய முடியும். மரா மரா மரா மரா.. என சொன்னால்" ராமர்" இல் போய் முடியும். இதுபோல் இடைவிடாது ஜெபிக்கும் பொழுது தியானம் கைகூடினால் சகலமும் கைகூடும்.


அதற்கு கடுமையான வைராக்கியம் வேண்டும் வாழ்க்கையில் தோல்வியுற்ற வரே அதை அடைய முடியும். மனதில் அதிருப்தி ஏற்படும்வரை, வாழ்க்கையில் நசுங்கி வேதனைப்படும் வரை கடவுள் பற்றிய சிந்தனையே வராது. வெற்றிகள் உங்களுக்கு மயக்கத்தைக் கொடுத்து, கடவுளிடமிருந்து அப்பால் வைத்து போகும். நான் செய்தேன் ,என்னால் முடியும் என்ற அகங்காரம், அகங்காரம் வளரவளர சுற்றியுள்ள மனிதர்களைக் கூட நீங்கள் அறிய முடியாமல் போய் விடுவீர்கள். ஒரே ஒரு தந்திரம் தான் ,மனதை ஒருமுகப்படுத்தி உள்ளுக்குள் அமிழ்ந்துவிடுவது, அவனுக்கே சகல கலைகளும் கைகூடும். தானற்ற மனிதருக்கு மனம் வெள்ளை, எதைப் பற்றிய முன் அபிப்ராயமும் இருக்காது. அதனால் எளிதில் எதிரே வருபவர்களை அடையாளம் காணமுடியும், வெண்மை நிறத்தில் எதுவும் எளிதில் ஊடுருவிச் செல்லும். உன்னுள் நீ அமர்வதே மிகப்பெரிய தந்திரம்.


உடையாளூரில் கருவூர்தேவர் மாளிகை உள்ளது, வகுப்பு முடிந்தவுடன் அனைவரும் ஆற்றங்கரை நோக்கி செல்கிறார்கள் . அங்கே வயதானவர் ஒருவர் இளவயது பெண்ணுடன் வருகிறார். அவள் சில நாட்களாக சரியாக இல்லை என்று குறிப்பிடுகிறார். சிறிது நேரத்தில் அந்த பெண் கருவூர்த் தேவரை தாக்க வருகிறாள். கருவூர் தேவர் அவருடைய சக்தியை பயன்படுத்தி அவளிடம் உள்ள தீய சக்திகளை விரட்டுகிறார். இருவரும் வீடு திரும்புகிறார்கள். அருள்மொழி குருவை கேள்வி கலந்தபார்வையில் பார்க்கிறான்.

குரு யாரோ தீயசக்தியை ஏவி விட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் .பலவீனமானவர்கள் மீதுதான் அது சென்று தஞ்சம் அடையும்.



உடையார்குடி கதை உனக்கு தெரியுமா என்று கேட்கிறார் . சேர தேசத்தை சார்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்தார்கள் அங்கு , அவர்களே அரசனின் அண்ணனான ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு காரணம் என்று மன்னர் அறிந்தவுடன். அனைவரையும் ஊரோடு தேசத்தை விட்டு வெளியேற சொல்லிவிட்டார். அவர்களை நேரில் சென்று கூட தண்டனை கொடுக்கவில்லை, ஏனெனில் ஆத்திரத்தில் கொன்றுவிடுவேன். அவ்வாறு எளிதில் மரணம் அடையக்கூடாது, அந்த ஊரில் இருந்த ஒவ்வொருவரும் அதற்கு காரணமானவர்கள். அனைவரும் நடந்தே ஊரை கடக்கும் பொழுது பல அவமானங்களுக்கு

ஆளானார்கள், அதுவே அவர்களுக்கு விதிக்கப்பட்ட பெரிய தண்டனை.


உலகில் நம்மை தவிர இங்கே பல ஆத்மாக்களும் நம்மளை சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன .அவற்றை சிலர் தவறான முறையில் பயன்படுத்தி தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதை சேர தேசத்தில் பலரும் நம்புகிறார்கள் ,இந்த தேசத்தில் அது பழக்கத்தில் இல்லை. ஒருமுறை அவற்றை பயன்படுத்தினால் கடைசிவரை அதை கட்டிக்காக்க வேண்டும் இல்லையென்றால் அது விபரீதமாக சென்று முடிவடையும்.


அந்த சேர அந்தணர்களில் ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரனும் இருவரும் ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு முக்கியமான காரணமானவர்கள். அவர்கள் ஊரை விட்டு வெளியே போகும் போது சபதம் எடுத்துக் கொண்டே வெளியேறினர். அந்த சபதத்தை அவருடைய மகன்களையும் நிறைவேற்றும்படி வாக்கு வாங்கி கொண்டு, கடைசியாக ராஜராஜ சோழன் படையெடுத்து சென்ற போது ,எங்களுக்கு நிச்சயம் மரணமே சென்றனர்.


அவர்களுடைய மகன்கள் செம்பியன்மாதேவியை வைத்து மன்னருக்கு எதிராக ஹோமம் நடத்த ,அவர்களை அழைத்துச்செல்ல திருவக்கரை வருகிறார்கள். செம்பியன் மாதேவிக்கும் மிகப்பெரிய மன வருத்தம் தன்னுடைய மகன் நாட்டை ஆளவில்லையே என்று. அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்கள். எப்படியோ அவரை ஒரு வழியாக குணப்படுத்தி அழைத்து செல்லும் வழியில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது. பல்லக்கிலே கொங்கு தேசத்தில் உள்ள கூடலூரில் ஒரு மரத்தடியில் உயிர்நீத்தார். முதலாம் பராந்தகனின் மருமகள், கண்டராதித்தார் மனைவி, உத்தம சோழன் என்னும் மதுராந்தகன் அன்னை ,சுந்தர சோழன் பெரியம்மா ,ராஜராஜ சோழனுக்கு பாட்டி, என பல பெருமைகள் உடையவர்.


அதனால்தான் இளவரசன் ராஜேந்திரனுக்கு அந்தணர்கள் என்றாலே பிடிக்காது. இளவரசன் உடைய ஒற்றன் கடுவன்காரி, மருவூர் சென்று அங்கே தன்னுடைய இஷ்ட தெய்வமான காளியை வணங்கி .மகனுக்காக தந்தையே வேவு பார்க்கும் வேலையில் உள்ளேன் என்னை நீதான் வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான். மொத்தம் 36 ஒற்றர்கள் மன்னரையும் சோழ தேசத்தையும் நோட்டமிட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் அன்று இரவு ஆற்றங்கரையில் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இளவரசருக்கு அறிவிக்கப்பட்டது. கடுவன்காரிக்கு ராஜராஜீ மீது காதல் வந்தது எவ்வளவு நாள் இப்படி குடும்பம் இல்லாமல் வாழ்வது என்று எண்ணினான்.



பிரம்மராயர் கருவூர்த் தேவரை காலில் விழுந்து வணங்கினார் . என்ன செய்தி என்று நேரடியாக பிரம்மராயரை வினாவினார். ராஜராஜீ ஓலை கொண்டு வந்தது முதல் கடைசியாக மன்னர் சாப்பிட்டதை வயிற்றை புரட்டி வாயில் எடுத்தார் ,அனைத்தையும் ஒப்பித்தார். மன்னருக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று குறிப்பிட்டார். கருவூர்தேவர் யார் வந்தாலும் விசாரிக்காமல் விட்டு விடுவீர்களா என்று கேட்டார். ராஜேந்திரன் இடமிருந்து வருபவர்களை என்னால் தீவிரமாக விசாரிக்க முடியாது. இளவரசனை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.


பிரம்மராயர் ஏவல் சக்திகளைப் பற்றி குருவிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். தீயசக்தி எப்பொழுதும் கண்ணில் , மூக்கு மற்றும் பல்லில் இருக்கும் அழுக்கை எடுப்பவர்களை எளிதில் பற்றிக்கொள்ளும். பிரம்மராயர் பல்லில் மாட்டிக்கொண்டிருந்த உணவை எடுத்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது தீய சக்திகளின் அறிகுறிகள் அங்கு இருந்தது. குருதேவர் அவருடைய மாணவர்களை பார்த்தார் அனைவரும் தயாராக இருந்தார்கள். அவ்வளவு பெரிய பருத்த உடலை கொண்ட பிரம்மராயர் தீயசக்தி புரட்டிப்போட்டது. கருவூர்தேவர் தன்னுடைய முழு சக்தியை பயன்படுத்தி அதை விரட்டியடித்தார். என்னையே அசைத்து பார்க்கிறார்கள் ,நான் இருக்கும் வரை துரும்பைக்கூட அசைக்க முடியாது. பிரம்மராயர் கலங்கி போய் அவர் காலில் விழுந்து  வணங்குகினார்.உன்னுடைய மகன் அருண்மொழி நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டான் அடுத்த சேனாதிபதி தயாராகிவிட்டான். மன்னரை எங்கும் வெளியே செல்லாமல் அரண்மனையிலேயே இருந்து தியானம் செய்யும்படி கூறினார்.


ராஜராஜ பெருந்தச்சர் மன்னரை அரண்மனையில் சந்தித்தார். தாங்கள் கூறியபடியே ஆற்றங்கரை ஒட்டிய நிலம் தேர்ந்தெடுத்துவிட்டோம். மண் சோதனையும்,காற்று சோதனையும் முடிந்துவிட்டது. மன்னர் அஸ்திவாரம் போடுவதற்கு நாள் பார்க்க சொல்லி அனுப்புகிறேன் என்றார். பஞ்சவன்மாதேவி 5 பனை உயர கோயில் கட்ட வேண்டும் என்றால் மிக ஆழமாக அஸ்திவாரம் போடும் வேண்டுமல்லவா ?என்று கேட்டார். இல்லை அம்மா 1 1/2 ஆள் உயரம் மட்டுமே தோண்ட போகிறோம். அது எப்படி? உயரமான கோபுரம் எழுப்ப வேண்டும் என்றால் !!ஆழமான அஸ்திவாரம் போட வேண்டாமா?



இங்கே புதுவித யுக்தியை பயன்படுத்த போகிறோம், அகலமான அஸ்திவாரம் பலகை மற்றும் கற்களை அடுக்குகளாக அடுக்கப் போகிறோம். மெல்ல மெல்ல கோபுரத்தை குறுக்கி கொண்டே போய், மேலே உயரமாக எடுக்கப் போகிறோம். எவ்வளவு ஆட்கள் இன்னும் தேவை என்று கேட்டார் அரசர். எப்படியும் இன்னும் 400 தச்சர்கள் தேவை . இன்னும் சில தினங்களில் கங்கபாடி நாட்டை சேர்ந்த கைதிகள் தஞ்சைக்கு வர உள்ளார்கள். அப்படியா !!!கங்கபாடி நாட்டவர் மிகவும் வலுவானவர்கள் அல்லவா !!என்றார் பெருந்தச்சர்.


பஞ்சவன்மாதேவி அவர்கள் இளவரசன் பெருமையை சொல்ல தொடர்ந்தார் கைதிகளின் விலங்குகளை அவிழ்த்துவிட்டு கோயில் பணி செய்ய விருப்பமா? அல்லது சொந்த ஊர் திரும்ப விருப்பமா ?நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார். அதில் பலர் ஊர் திரும்பி விட்டனர் ,பலர் அங்கே சென்று அவமான படுவதற்கு கோயில் பணி செய்தாவது இங்கே வாழ விரும்புகின்றனர்.


இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே சில ஊர் மக்கள் அவர்கள் கிராமத்தில் பாம்பு புற்று இருப்பது மிகவும் தொந்தரவாக இருக்கிறது என்று வருகிறார்கள். பாம்பு புற்றின் மண் மிகவும் உகந்தது கோயில் கட்டுவதற்கு  என்று பெருந்தச்சர் உடனே கூறினார். இந்த பிரச்சனையை பஞ்சவன்மாதேவி இடம் மன்னர் விட்டுவிட்டார், பாம்புகளை அடிப்பது ஊருக்கு நல்லதல்ல, நீங்களும் பூர்வீக இடத்தை விட்டு செல்ல விரும்பவில்லை .கருவூர்தேவர் இடம் கேட்டு தீர்வு சொல்கிறேன் என்று அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டார். மன்னர் இதைக் கண்டு வியந்தார்.


தேசத்தின் நலனுக்காக மன்னர் வெளியே சென்று கொண்டிருப்பதால் அரண்மனையில் நேரம் செலவழிப்பதே இல்லை என்று அனைத்தும் மனைவியரும் , வானவன்மாதேவி கொடும்பாளூர் இளவரசி பஞ்சவன்மாதேவிடம் அன்புடன் கேட்டுக் கொண்டனர். மன்னரும் சிவனுடை பற்றை வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம், அவர்களை சுற்றி உள்ள உறவுகளும் கோயில் வேலைக்கு உடன் படுவார்கள். இவ்வாறு திருத்தொண்டர் புராணத்தில் கண்ணப்ப நாயனார் கதையை விளக்கினார். அனைத்து மனைவியர் நடுவில் அமர்ந்து உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தார். 


அப்பொழுது பஞ்சவன்மாதேவிக்கு வேலை இருக்கிறது என்று புறப்பட்டு விட்டார். மன்னரும் எனக்காக தானே உழைக்கிறாய் என்று மனதில் எண்ணிக் கொண்டார். இவ்வாறு நாட்டிற்காக ஒரு மனைவி வேண்டும், வீட்டிற்காக உலக மாதேவியும் வானமாதேவி எந்நேரமும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.


பஞ்சவன் மாதேவி இளவரசரின் ஒற்றன் ஆன கடுவன்காரி சந்திக்க வந்தார். ராஜராஜீ கொண்டு வந்த செய்திகளை தவிர, கைதிகள் ஊருக்குள்ளே வருவதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், யாரும் கைதிகளை சீண்டாத வண்ணமும் காவல்களை கடுமை படுத்த என்று இளவரசர் கேட்டுக்கொண்டார். மேலும் எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை புரிய சொன்னார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அதற்கு நான் பொறுப்பு.


அது இருக்கட்டும் வரும் வெளியில் எங்கே சென்றீர்கள் என்று பஞ்சவன் மாதேவி கேட்டார். அரசருக்கு எதிராக இளவரசருக்கு ஆதரவாக கம்மாளர் கூட்டமொன்று உருவாகி கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். போர் இருந்தால் மட்டுமா அவர்களுக்கு வேலை. கோயில் கட்டினால் கூட தான் வேலை உண்டு. இது நல்லதற்கல்ல என்று வருத்தப்பட்டார். கோயில் கட்டுவதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.


நன்றி.

முதல் பாகம் தொடரும்...

Click here for Audio book-Udayar-Part1:2👇


Udayar audio book part 1:2


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...