அனைவருக்கும் வணக்கம்,
நார்த்தாமலையில் சிற்பி சதாசிவாச்சாரி தலைமையில் பாறைகள் உடைக்கும் வேலை மங்களகரமாக கொடியேற்றத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது . சிற்பி சதாசிவாச்சாரி மிகவும் வயது முதிர்ந்தவர்.அவரிடமே அனைத்து பொறுப்புகளும் விடப்பட்டன. பாறைகளை எடுப்பதும் அதனுடைய கணக்குகளை கவனிப்பதும் கடினமாக இருந்தது இதற்காக தஞ்சையிலிருந்து கணக்கர் வர வேண்டியதாக இருந்தது . நார்த்தாமலையில் வசிக்கும் கிராம மக்களுக்கு மன்னருடைய உத்தரவு வந்தது .அங்கே வேலைசெய்யும் கைதிகளுக்கும் சிற்பிகளும் ஆதரவாகவும் உணவு மற்றும் வேண்டியவை கொடுக்கும்படியும் ஆணை பிறப்பித்தார். இதில் பாறை உடைக்கும் வேலை துரிதமாக நடந்தது. இவ்வாறு ஒரு பாறையை உடைக்கும் பொழுது தற்செயலாக அங்கே இருந்த ஒரு சாளுக்கிய வீரன் மீது அந்த பாறை உருண்டு வர அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
கோயில் கட்டும் இடத்தில் தளிச்சேரிப் பெண்கள் நடனத்தைக் கண்டு மகிழ்வது மட்டுமல்லாமல் அங்கே இருக்கும் பாண்டிய கைதிகளும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.அது அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அனைவரும் மிகவும் ரசித்து வியந்து பார்த்தனர்.
அந்தணர்கள் அனைவரும் அரசனை காண்பதற்காக அரண்மனைக்கு வந்திருந்தனர். பஞ்சவன்மாதேவி அரசரிடம் சென்று அந்தணர்கள் வந்திருப்பதாகவும், அவர்கள் தங்களை சந்திக்க ஆசைப்படுவதாகவும் கூறினார் .கோபமாக என்னால் அவர்களை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார். அப்பொழுது பஞ்சவன் மாதேவியும் நம்மளுடைய ஆசான குரு ஈசான சிவபண்டிதரைப் பார்த்து சிபாரிசுடன் வந்திருக்கிறார்கள் என்று கூறினார் .இதை கேட்ட அரசர் இன்னும் அதிகமாக கோபப்பட்டார் . அவர் களை பார்க்கமுடியாது, குருதேவர் சிபாரிசு எண்ணி மன்னர் வருத்தப்பட்டார்.
இதற்கிடையில் மூன்று மறவர்கள் கோயில் பணி நன்றாக நடக்க்க வேண்டும் என்று தற்கொலையில் ஈடுபட்டதாகவும் அந்த செய்தியை மன்னரின் காதில் வந்தடைகிறது. ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களை சரியான வழியில் செல்லும்படி வழிகாட்டுகிறார் . அப்பொழுது பாறைகளின் இடுக்கில் மாட்டி இறந்த சாளுக்கிய வீரனின் மரண செய்தி வந்து சேருகிறது .அதை மன்னர் கேட்டு வருத்தப்படுகிறார். அங்கே ஒரு விளக்கு ஏற்றி அதை கண்காணிக்கும் படியும் உத்தரவிடுகிறார். முதல் பலி இன்னும் எத்தனை இருக்கிறதோ, இறைவா நீயே நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார் .
பாண்டிய கைதிகளால் அரங்கேற்றப்பட்ட நாடகச் செய்தி அரண்மனைக்கும் வந்து சேர்கிறது. அரசனுடைய மனைவிகள் அந்த நாடகத்தை கண்டுகளிக்க ஆசைப்படுகிறார்கள்.அதை பற்றி பஞ்சவன்மாதேவி மன்னரிடம் பேசுகிறார் .மன்னரும் மெய்க்காவலர் பாதுகாப்பில் அரண்மனையில் நாடகம் அரங்கேற உத்தரவிடுகிறார்.
நான் இன்று இரவு தளிச்சேரிப் பெண்களைச் சந்திக்கப்போகிறேன் .அதுமட்டுமில்லாமல் பெருந்தச்சரையும் கண்காணிக்க வேண்டும் இல்லையேல் முழுப்பொறுப்பும் அவருடைய பணியில் நடக்கிறது என்று கர்வம் வந்துவிடும். அவர் பஞ்சவன்மாதேவியை உடன் அழைக்கிறார். அது முறையல்ல இங்கே நாடகம் அரங்கேற்றம் நடைபெறும் போது ,நான் மட்டும் உங்களுடன் வருவது முறையல்ல என்று பஞ்சவன்மாதேவி எடுத்துக் கூறுகிறார்.
இளவரசர் திருவல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய ஒற்றரான ராஜாராஜீ பஞ்சவன்மாதேவி சந்திக்க அரண்மனைக்கு வருகிறார். அவருடைய அத்தை குந்தவை அவர்களை சந்தித்து இளவரசர் பாறைகள் எடுக்கும் கணக்குகளை அந்தணர்களின் பொறுப்பில் ஏன் விடக்கூடாது என்று எடுத்துக் கூறுகினார். அதற்கு குந்தவை பிராட்டியார் ,பிரச்சினையில் போய் முடியும் வேணுமென்றால் பிரம்மராயர் இடம் இதை பற்றி பேசுகிறேன் என்று கடைசியாக கூறுகிறார் .
தனக்கும் அருண்மொழி பட்டனுக்கும் இடையே இருக்கும் காதலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் .அதற்கு பஞ்சவன்மாதேவி பிரம்மராயர் இதற்கு ஒத்துக்கொள்வாரா ?என்று தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது நான் இதைப்பற்றி அவரிடம் பேசுகிறேன் என்று கூறுகிறார்.
புத்த மதம் பற்றிய பெருமையையும் அங்கே தனக்கு தற்காப்புக் கலைகள் சொல்லிக் கொடுத்ததை பற்றியும் விரிவாக கூறுகிறாள் ராஜாராஜீ.அதுமட்டுமில்லாது மன்னரின் இரண்டாவது மகள் சந்திரமல்லி பெருமைகளையும் அவர்கள் புத்த மதத்தில் செய்யும் தொண்டு களையும் பஞ்சவன்மாதேவியுடன் கலந்து பேசிகொண்டிருந்தாள்.அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வீணை ஆதித்தன் அன்று இரவு நடக்கும் தளிச்சேரிப் பெண்களின் ஆட்டத்திற்கு பஞ்சவன் மாதேவியும் அழைக்க வருகிறார்.அதோடு மட்டுமில்லாமல் அங்கே இளவரசனது அனுக்கி பரவை வருவதையும் தெரிவிக்கிறார் .பஞ்சவன் மாதேவி மன்னர் என்னுடைய பொறுப்பிலேயே இங்கு நாடகத்தை அரங்கேற்ற சொல்லி இருக்கிறார் .இந்நிலையில் நான் அங்கு வருவதில்லை என்று கூறி அனுப்பி வைத்து விடுகிறார் .
அவரைத் தொடர்ந்து பின்பு பஞ்சவன்மாதேவியை ரத்தினடத்தையர் மற்றும் சேணியர் சந்திக்கிறார்கள் .அவர்கள் சாவூர் பரஞ்சோதி தேவரடியார்கள் பாதுகாப்பிற்கு வரப்போகிறார் என்ற செய்தியை தெரிவிக்கிறார்கள். அங்கே வந்திருந்த ஒருவரிடம் தளிச்சேரிப் பெண்களைப் நோட்டமிடும் வேலைக்கு கட்டளையிடுகிறார் .அவர்கள் தங்களால் ஆன உதவியை நாங்களும் கோயிலுக்கு செய்கிறோம் என்று வேண்டிக் கொள்கிறார்கள் .அதற்கு இந்த ஒரு வேலை எனக்கு நீங்கள் செய்யுங்கள் நேரம் கிடைக்கும் போது நானே உங்களிடம் வந்து கேட்கிறேன் .இதற்கிடையே எங்களையும் சிற்பிகளையும் கம்மாளர்கள் அந்தணர்களுக்கு எதிராக தூண்டினர். ஆனால் பெருந்தச்சரும் , நாங்களுக்கும் இதில் விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டோம். அதற்கு பஞ்சவன்மாதேவி உங்களுடைய பணி கோயிலுக்கு மகத்தானது கண்டிப்பாக அங்கே நடனமாடுவதற்கு தேவையான உடைகளை செய்து கொடுத்து உங்களுடைய உதவியை செய்யுங்கள் என்று தெரிவித்தார்.
தளிச்சேரி பெண்களுடைய நடனம் ஆரம்பித்தது அங்கே இளவரசன் அனுக்கி பரவையும் வந்து அதில் கலந்துகொண்டார் .அவரைத் தொடர்ந்து இளவரசனும் அங்கே வந்தடைந்தார் .அங்கே பரஞ்சோதி, அன்றிலிருந்து தேவரடியார்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இளவரசர் ,பரஞ்சோதியை சந்தித்தார் .
மற்றொரு பக்கம் சேர தேசத்து அந்தணர்கள் மாறுவேடத்தில் மறைந்திருந்து, எங்கள் நாட்டை அழித்து விட்டு இவர்கள் இங்கே ஆடி ,பாடிக்கொண்டிருக்கிறார்கள். அதை கண்டு எப்படியாவது இவர்களை அழித்து ஆக வேண்டும் என்று திட்டம் தீட்டினர் .அன்று இரவு நேரத்தில் அனைவரும் நரசிம்மவனத்தில் சந்திக்க முடிவு செய்தனர்.
மன்னர் தளிச்சேரிப் பெண்களின் நடுவே அமர்ந்து உங்களுடைய வேலை மகத்தானது. உலகம் மாயை, அதை ஒரு நாராயணன் நாரதர் கதை மூலம் விளக்கி கூறினார். வேதம் கூறுகின்ற கடினமான ஒரு விஷயத்தை இந்தப் புராணம் எளிமையாக விளக்க முயற்சி செய்கிறது என்று எடுத்துக் கூறுகினார் .மன்னரை மகனும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார் .போர்க்களத்தில் கண்டிருக்கிறார் ,தத்துவ செறிவில் அனைவரும் தன்னிலை மறந்து மன்னரின் பேச்சில் மூழ்கி இருந்தனர்.அதைக் கண்டு இளவரசன் வியப்படைந்தார் .இதுதான் ,இதுதான் மக்களை பெரிதும் இவரிடம் ஈர்க்கிறது.
இங்கிருக்கும் கைதிகள் ஒரு நாள் முழுதும் வேலை செய்து,குடும்பங்கள் இல்லாமல் தனிமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு வேலையின் நடுவே இது மாதிரியான இறை தொண்டை ,நீங்க நாடகங்கள் ஆடுவதன் மூலம் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி இந்த வேலை கோயில் கட்டும் வேலை திறம்பட முடித்து தர நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள். என்று தளிச்சேரி பெண்களை உங்களுடைய பொறுப்பு மிகவும் மகத்தானது என்று விளக்கிக் கூறுகிறார்.
நன்றி! மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம்.
Click here for Udayar audio book part 3:👇

No comments:
Post a Comment