Monday, September 14, 2020

உன்னுடைய வார்த்தைகள் by Jaya

                       உன்னுடைய வார்த்தைகள்             

                                                       _ஜெயா




பலரின் பிணக்குகளின் 

காரணி தேடினால் முதன்மை

பெறுவது அவர்கள் பயன்படுத்தும் 

வார்த்தைகளே ஆகும் 


ஒருவர் வாயிலிருந்து

வெளிப்படும் வார்த்தைகள் வெளிப்பட்டவுடன்

காற்றிலே கரைந்து போகும் 

வெறும்

வார்த்தைகளே....ஓசைகளே

 

உறவில் இனிப்பையோ/கசப்பையோ உண்டாக்குவதில்

முக்கிய பங்கு வகிப்பது

நாம் உதிர்க்கும் சொற்கள். 


எனவே அடுத்தவரை 

வார்த்தைகளால்

காயப்படுத்தாமல்,

வாட்டம் போக்கும் 

வார்த்தைகளைப் பேசி

உறவினை வலுப்படுத்துவோம்

ஊட்டம் கொடுத்து 

உற்சாகப் படுத்தி

உயர்வடைவோம்...

2 comments:

  1. மிக முக்கியம் நாம் உதிர்க்கும் வார்த்தைகள்👏👏

    ReplyDelete
  2. நாவினால் சுட்ட வடு என்றும் ஆறாவது! வார்த்தைகளை உதிர்க்கும்போது அதீத கவனம் தேவை.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...