Tuesday, June 18, 2024

மாற்றம் கொண்ட விலங்குகள் by Veena Shankar

 


மாற்றம் கொண்ட விலங்குகள்


அமைதியை விரும்பும் மனிதர்களும் காட்டை பற்றிய செய்திகளை அறிய நினைத்து தங்கள் விடுமுறையை அங்கே கழிக்க எண்ணும் மனிதர்களும் பெருகி விட்டனர்.

 அப்படி காட்டை சுற்றி பார்க்க அவர்கள் செல்லும் போது தங்கள் உடனே தேவையான பொருட்களை எடுத்து செல்வது வழக்கம். அதில் முக்கியமானது அலைபேசி. 


தங்கள் பொழுதை அமைதியாக கழிக்க எண்ணிய அவர்களைப் பார்த்து பயந்த வன விலங்குகள் தங்கள் இருப்பிடத்தை ஆக்கிரமிக்க நினைப்பதாக எண்ணி அவர்களை எதிர்த்தன. நாளடைவில் விலங்குகளும் அவர்கள் பயன்டுத்தும் டெக்னாலஜியை கற்க விரும்பி அவர்களிடம் நட்பு பாராட்ட, சுமூகமானது அவர்கள் இருவரின் உறவும்.   


மனிதர்களுக்கு காட்டில் வாழும் ஆசையும் அங்கே நிலவும் அமைதியும் இயற்கை காற்றும் சண்டை சச்சரவு அற்ற சூழலும் பிடித்து போயிற்று. ஆனால் காட்டில் வாழ்ந்த விலங்குகளுக்கு சுதந்திரம் இல்லாமல் போனது. 


இருந்தாலும் அவை நாட்டு மக்கள் பயன்படுத்தும் வசதிக்கு மெல்ல மெல்ல ஆசைப்பட அவற்றை கற்றுக் கொண்டு அந்த வசதிக்கு அடிமையானது.  


காட்டை துறந்து வாழ ஒவ்வொரு விலங்கினமும் தங்களுக்குள் முடிவெடுத்து நாட்டுக்கு செல்ல விழைந்தன. 


 மேலும் மனிதர்கள் கூட்டம் காட்டை படிப்படியாக ஆக்கிரமிக்க தொடங்கியது.


அறிவியலின் வளர்ச்சிக்கு அடிமையான விலங்குகள் காட்டில் அலைபேசி அலைவரிசை சரியாக கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் நாட்டிற்கு குடியேற தங்களுக்குள் பேசி முடிவெடுத்தன. 


இதில் என்ன கொடுமை என்றால் மனிதன் தான் அடிமையானதோடு மட்டுமல்லாமல் காட்டு விலங்குகளையும் இந்த செயற்கை வாழ்விற்கு அடிமையாக்கி விட்டான். சுதந்திரமாய் சுற்றி திரிந்த விலங்குகளின் இடத்தை தன் சுயநலத்திற்காக ஆக்கிரமித்தது கொண்டான் என்பதே உண்மை.


விலங்குகளுக்கு இது தெரியுமா இல்லை புரியுமா இந்த மனிதனின் சுயநல நடவடிக்கை? மனிதன் தங்களை ஏமாற்றி விட்டான் என்பதை எப்போது புரிந்து கொள்ளும்?


நாமும் இப்படித்தான் பகட்டான ஆசைக்கும் நிரந்தரமில்லா வாழ்வுக்கும் அடிமையாகி நிம்மதியை தொலைக்கிறோம். வளமாக வாழ மனத்தை சுருக்கினால் போதுமே!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...