Wednesday, June 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 நிற்பவனுக்கு நடந்து செல்ல ஆசை

நடந்து செல்பவனுக்கு பறப்பதற்கு ஆசை

பறப்பவனுக்கோ மண்ணில் இருக்கவே ஆசை

 சிறைப் பறவைக்கு பறக்கும் எண்ணம் மேலோங்கினால் சங்கிலியும் ஓர் பொருட்டல்ல

 சிந்தையில் சிறகடிக்கும் ஆவல் உருப்பெற, உயிர்ப்பெற சங்கிலியின் திறவுகோலும் அவசியம்

அது மனதை திறப்பது போல கடினமில்லை என்றாலும் மனம் திறக்க வேண்டும் அடுத்தவர் எண்ணமும் ஈடேற வேண்டும் என்ற சிந்தனை சிந்தையில்

 வருத்தம் கொள்ளாத மனமும் வருந்தும் கட்டுப்பாடு என்ற சங்கிலியால் பிணைக்கப்படும் போது , என்றாலும் அதீத சுதந்திரமும் கொள்ளும் ஆபத்து தரும் வருத்தமே!

 தண்டனைக்கான சங்கிலி இதுவென்றாலும் ஓடும் கால்களும் பறக்கும் பறவையும் நிற்காது, வெளிவர எத்தனித்து கொடுக்கும் பிணைத்தவனுக்கு தளர்ச்சி எனும் தண்டனையை

 பிடிமானம் இறுகினால் வெகுமானம் உண்டோ? பிடி இறுக பலம் தேவை, பிடிப்பவனும் நாடுவான் இன்னொரு பிடிமானம்

 அகங்காரம் இல்லா அங்கீகாரம் பறவைக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் தேவை இங்கே ஆணிடத்தினின்று

கொலுசு சம்தம் மறுக்க சங்கிலியும் தேவைப்படுகிறதோ இங்கே

ஆணின் தேவையை பூர்த்தி செய்த பின்

மறுக்கவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

மறக்கவும் முடியாமல் தவிக்கும் நெஞ்சிற்கு இனியும் கிடைத்திடுமா சுதந்திரம் என்றும் சரித்திரம் படைக்க

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...