Tuesday, June 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



இதில் உள்ளே போடும் காசு யாவும் குட்டி போடுவதில்லை

ஆனால் நம் மனதில் போடும் குப்பைகள் யாவும் காழ்ப்புணர்ச்சியாய் வெளிப்படும்


 மண் இருந்தாலும் பொன் 

உடைந்தாலும் பொன்

சேமிப்பு என்னும் பழக்கத்தினால்


 நீ நிறையும் முன்னே துளை 

வழியே பார்ப்பதும்

நிறைந்த பின் உடைத்துப் பார்ப்பதும்

மனித இயல்பு


அங்கே நினைக்கத் தோன்றுகிறது

மனிதனின் இயலாமையை

சேமிக்கும் வரை அவசரம்

சேமிப்பு நிறைந்த பின் அசுர வேகம்

அதை செலவழிப்பதில்


மேலும் அவன் கைகளை கட்டி போடாமல் உண்டியலை பூட்டி வைத்தானே

அன்றே அவன் நம்பிக்கை கேள்விக்

குறியாகிறது


 வங்கியில் இருக்கும் பணம் போல் இல்லை இது

கடன் பெற சில மணி நேரமாகும்

அவசரத்திற்காக உடைபடும் இது வட்டியும் வசூலிப்பதில்லை


வயல் காட்டு மண்ணும் சேமிக்கும் கலன் ஆனது

விதையை சேகரிக்க அல்ல

இங்கே விளைந்ததின் பலனை அனுபவிக்க


 தேவையுள்ள போது உடுபடுபவன் தேங்காய் மட்டுமல்ல

இவனும் தான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...