Friday, June 7, 2024

அழகு ,அறிவு by Veena Shankar

 


காகம் கரைந்தாலும்

கிளி பேசினாலும்

தாங்கள் நினைக்கும்

நிஜத்தை சொல்லத்

தெரியாதவை


எதுவும் அழகே!


காகத்தின் அழகிய கருமை நிறமும் 


கூரிய அலகும் 


தலை சாய்த்து நோக்கும் பார்வையும் 


உண்ணும் போது பகிர்ந்து கொள்ளும் பழக்கமும் 


வஞ்சமில்லா அறிவும் 


அழகே!


கிளி பேசும் மொழியும்


அழகிய நிறமும்


அலகின் செந்நிறமும்


அழகின் சிரிப்பும் 


கூண்டை விட்டு வெளி வர துடிக்கும் மனமும்


அடிமையாக்கும் திரனும்


அழகே!


சைவமும் அசைவமும் கொண்டாலும் இரண்டும் அழகே! 

அதனதன் நிறத்தில்


 அழகு கூண்டில்

அறிவு சுதந்திரமாய்


 நான் தேடும் பறவைகள் இரண்டு


கருமை கடந்த காலத்தின் பயனுக்காக


பசுமை எதிர்காலத்தின் இனிமைக்காக

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...