ஒற்றை வெளிச்சம் யாருக்காக?
சிந்தையில் புதிதாய் உதித்தவை
யாவும் சத்தமின்றி, சத்தியமாய்
உருப்பெற்றால் பிறர் சொல்வர் ,
இந்த ஒற்றை வெளிச்சம்
நமக்கானது என்று
- வீணா
பௌர்ணமி நாளில் முழு நிலவு
சிவந்த கண் ஒன்று
யாரும் இல்லா நடு
பாலைவனத்தில் நோட்டமிட
யாரும் மின்சாரத்தை கடத்த
முடியாது, ஒற்றை நிலாவிடம்
மின்சாரத்தை கடன் கேட்டு
நிற்கும் மின் கோபுரம்.

No comments:
Post a Comment