Friday, June 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நிலவினை கவர்ந்த கள்வர்கள் தாம் இவர்கள்


சிறிது நேரத்திலேயே கவர்ந்ததை துறப்பர்

நிலாவின் பெயர்ச்சியால்


கவர்வதும் எளிதல்ல

அதை 

தன்னகத்தே கொள்வதும் அழகல்ல

எளிதல்ல


கவர்பவர் உண்ணாமல் அடுத்தவருக்காக நிலவினை பகிர்ந்த பறவைகள்


 வானம் வசப்பட்டது

அடுத்து நிலவு

தற்போது

நம் பாரத்தின் நிலை


 தெரிந்து செய்தால் தவறு

தெரியாமல் செய்தால் அழகு

தெரியாமல் சுட்ட தோசையில்

தெரிந்த நிலா


 காதல் பறவைகளின் அலகிலும்

அழகிலும் சுருண்டது நிலா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...