Friday, June 7, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பாதை போட்டு வழி கண்டவன் பின்னால் கூட்டம்

ஒருவழி பாதையும் இல்லை, இரு வழி பாதையும் இல்லை

இங்கே எப்போதும் பல பாதைகள் உண்டு வாழ்வை எதிர்கொள்ள என்று

உணர்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள் பல


உண்மை வீணா,


ஒரு அற்புதத்தை தர காத்திருந்த

 அந்த மாலை நொடி

 பொழுது.இலக்கு வேறு வழியில்

 கண்ட பறவை கூட்டம் மனதை

 வசப்படுத்த. நெருங்கி சென்று

 அருகில் காண போன

 போது.இரை தேடி,பசியாற்றி,

 அன்றைய நாளுக்கு

 விடைச்சொல்லும்

 நேரம்,பகலவன் மெல்ல மறைய,

 சடசடவென நூற்றுக்கு மேலுள்ள

 நாரைகள் படபடவென பறந்த

 காட்சி,மனதை உலுக்கியது.

சற்றன நான் பார்க்க காத்திருந்தாயோ!

மனநோய் போக்க வந்த மருந்தோ!

முழுவதுமாக அருந்தும் முன் ஏன் பறந்தாயோ!

கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளை இளைப்பாற்ற சென்றாயோ!

மீண்டும் நாளை நீங்கள் வருவீர்! நாங்கள் வர எத்தனை வருடமோ!

போகும் முன் மனநிறைவை தந்தாயே!

அதுவே போதும் பேரானந்தம்!




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...