வடிவமும் அவனே
வடிக்க வைப்பவனும் அவனே
இலையில் ஓர் இல்லம்
மனதிருந்தால் புகுவதும் கடினமல்ல
விருட்சத்தி்ல் உதிர்ந்த இலையும்
விருட்சமாகியது நினைவில்
வடித்தவனின் கலை வண்ணமும்
கைது செய்தது
தோன்றலில் புனிதம் புதிதாய் புனைவதில் உண்டு தானே?
பல துளைகளின் சங்கமத்தில் பிரமிப்பு
சில கலையினால் மனதில் ஆக்கிரமிப்பு
இலைகளின் நரம்புகள் புடைக்க
வடித்த சிலையும் சொல்லுதே அமைதியாய்
ஞானத்தை தேடிக் கொள்ள ஓர் வழியை
வக்கிரம் இல்லா சித்திரம் இங்கே இலைகளில்

No comments:
Post a Comment