Friday, January 31, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மானின் விழியும்

மான் விழியாலும்

எதிரெதிரே நோக்கினால்

வானத்து நிலவும் கூட

தண்ணீரில் மிதக்குமோ?

மிதந்த பந்தை கைப்பற்றுவதில் 

போட்டியும் உண்டோ?

யார் அழைத்து இந்த

பிரவேசம் இங்கே!

நதி நீரும் பூத்ததோ?

அவள் வெண்பற்களுக்கு நாணி 

நிலவும் நீரில் வெண்மை இழந்ததோ?

அழையாது செல்லும் விருந்து 

கூட மரியாதை இழக்குமே?

பெண் ஒருத்தியைக் காண 

இந்த செயலும் தேவையோ?

காதில் போட்டுக் கொள்ளாத வெண்ணிலா, வானத்தில் 

நகராது காத்திருக்கிறது, பெண்ணே!

நீயும் விடை கொடு அதற்கு

நீ இவ்விடத்து விலகி

நீ விலக மானும் 

துள்ளி ஓடிடுமே!

அவரவர் வேலையை

சிரத்தையுடன் காக்க,

நீயும் அகலுவாய் 

உன் அழகில் மயங்க ஓர் காதலன் உள்ள போது இவை யாவையையும் 

அதனிடத்தே விடுப்பாய்

Vidhya, 

நிலவே கண்ணாடியாக எதை நோக்கி நின்றாளோ!

எனது கண்ணாடி தண்ணீர் என்றது நிலவு!

உன்னுடைய புறஅக அழகை காட்டும் கண்ணாடி எங்கே?

அதை எதிர் நோக்கியே என்னுடைய உடல் காற்றில் மிதக்க, 

காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ரணமாக கனக்கிறது. 

கணநேரம் கூட பொறுக்கா இதயம்  படபடக்க, மானின் அழகில் மையல் கொண்ட கண்கள் ஏங்க..

மதிமயக்கும் நீயும் ,மாலை பொழுதும் என்னை கட்டிப்போட சிலையாக , அனைத்தும் மறந்து ,லயிக்க வைக்க தனிமையின் துணையே நிறைவு!

அதற்கு ஈடாக வேண்டுவன என்ன?

Thursday, January 30, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

இசைக்கும் கருவியை பொறுத்து

 அதன் இசை அமையலாம், அதை இசைக்க தெரிந்தால் மட்டுமே

இசை ரம்மியமாகும்

Veena Shankar: 

மீட்டும் விரல்களிலும்

ஈர்ப்பு உள்ள மனதினாலும்

அமைதியான சூழலிலும் 

மட்டுமே ரசிக்க இயலும்

இசையை

 Veena Shankar:

 தனிமை வெறுமையாகி விடாமல்

இருக்க கையில் இசைக்கருவி

நிழலிலும் இசைக்கும் ஜாலம் 

கைவிரல்களின் நடனம் எளிமையாய்

இருளும் தகர்ந்தது இசையின் நளினத்தில்

எதுவும் குறையல்ல பெருமையே

Vidhya, 

பதுமையின் கையில் வீணை

வீணாக போகதே ஒவ்வொரு

 நொடியும், நாடியும் உன் விரல்

 அசைவில் அசைய காத்திருக்கு

 அகிலமும் , இந்த காற்றின்

 திசையை மாற்றி நிற்க சொல்

 இடையூறு செய்யாமல் ..

பாவை பாடும் பாடல் கேட்க

 காத்திருக்கும் பாவலன் எங்கே!

Wednesday, January 29, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar:

 நம்மிடம் வேண்டுபவனிடம் நம் தேடலுக்கான வேண்டுதல்


இது வேண்டுபவனுக்கும் வெண்டியவனுக் கும் பொருந்தும்

 Veena Shankar: 

சரணாகதி என்றான பின் 

நம்முள் குழப்பங்கள் கூடாது

அவன் மேல் சந்தேகம் கூடாது

பிறர் செயலில் குற்றம் காண கூடாது

தெளிவான எண்ணத்திற்கு

தேடல் அவன் அடி தொழுவதே

Veena Shankar: 

கால்களும் கரங்களும் சேருமிடத்தில் தான் பக்தி தெளிவு பெறுகிறது

Vidhya, 

யாரும் யாருக்கும் அடி பணிய தேவையில்லை,

பாசத்தால், மரியாதையால் தவிர.

பெற்ற தாய் தந்தையரின் அன்பிற்கு முதலில் அடி பணியுங்கள் !

எந்த கடவுளும் தன் அடியே கதி என்று இரு என சொல்லவில்லை,

துன்பத்தில் நம்பிக்கையை தேடி என் அடியே கதி என இருந்து விடு,எதுவும் தானாக விலகும்.

Tuesday, January 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya


  

Veena Shankar:

 விடியும் இனிய காலைக்காக

இரவின் மடியில் ஓர் காளை 

நிலவும் வர மறுத்த வேளையில்

மறைந்து போன விளக்கும் உயிர் பெற்றது

காகையின் இரைத் தேடலுக்கு முன்னே

விழித்திடு 

வெளிச்சத்தின் போது இருள் 

மறைந்தே உள்ளதே

அன்றி 

இருள் அச்சம் கொள்ள அல்ல என்றென்றும்

 Veena Shankar: 

அறிவியலின் கண்டுபிடிப்பில் ஆச்சரியம்!!


இருளை போக்கிய விளக்கில் மட்டுமல்ல

அவன் காகையோடு

மரத்தின் நிழலில்

அமர்ந்து ரசிப்பது எதை?

எங்கிருந்து?


வேற்று கிரகவாசியின் சிந்தனையும் மலர்ந்தது பூமியின் வளமை கண்டு

அறிய முற்பட்டான் 

காதலும் உண்டோ அங்கே என்று

Vidhya, 

ஏய் நண்பா,

உனக்கும் பசி எனக்கும் பசி

விடியலுக்கு ஏங்கும் ஈர் உயிர்

 நானோ லாந்தர் ஒளியில்,கற்பனையில் மரத்தை வளைத்து, கனவை பிடிக்க பறக்க நினைக்கிறேன்..

நீயோ,நிலவொளியில்  நிஜத்தை பிடிக்க ,பறக்க மறுத்து, என் கனவில் நுழைகிறாய்..

பசி வேறு,உடல் வேறு ஆனால் மனதால் இணைகிறோம். 


Monday, January 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



Veena Shankar: போதையில் பாதை மாறிய இவர்கள்

பாதையிலும் பகையாயினர்

பகை என்றே அறியாத ஓர் நெஞ்சம்

நகையாடுதே!

நகைத்தும் விருந்தாகுதே!

விருந்தும் மருந்தாகாதே!

மருந்தும் மூன்று வேளையே !

வேளை பல கடந்தும் நம்பியவன் கைவிடுவான் நட்பு என்னும் போர்வையாலே !

இங்கே நட்பு என்பதும். வீண் வார்த்தைதானே !

வார்த்தையுள் வஞ்சம் இருந்தால் நட்பும் தானே மறையுமே!

மறையும் யாவும் மாயையே!

மாயையின் பின்னால் செல்வதும் போகம் தானே!

போகத்தில் வீழ்ந்தவர் ஏழார் என்றும்

போதை மாற்றிய பாதையால்

Veena Shankar: தொலைந்த வாழ்வு பெற்றது சுகம்

போதை தரும் பொருளால்

மீட்டெடுக்க தெரியாமல் அவனும் அதிலே தானும் கரைந்தான்

போதை தந்த மோகப் பொருளால் மதி மயங்கியே நின்றான்

மதி உறக்கம் கொண்ட வேளையில்

அவன் மதி இறக்க வேண்டும் 

 எடுத்தான் கத்தியை மதி மழுங்கிய வேறொருவன்

காரணம் தெரியாமல் உயிர் துறக்க

காரணமானான் அவனுமே

உயிர் போவதும் உறுதியே

 கத்தியில் குத்துப்படுவதால் பெருகியது குருதி

வீழ்ந்தது உயிர்

பகையேன் என அறியாமல்

Vidhya, 

வேறென்ன சொல்ல 

தீதும் நன்றும் பிறர் தர வாரா?

எதை தொட்டாயோ அதுவே கொல்லும்!

இதில் பலருக்கும் நட்பு  ஒரு எளிய வழி!

Sunday, January 26, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: மதில் பிளவுகள் போலே சரிபாதி இங்கே

மனப் பிளவு கொண்டு நிற்கிறது

 Veena Shankar: ஒரே திசையில் வாழ்வை கடக்க எண்ணி

கூடிய கழுத்துப் பூண் 

இங்கே பிளவு கொண்டது

திசையையும் மாற்றிக் கொண்டது 

திசைகள் கூட ஓர் முனையில்

கூடுவது போல

வரும் நாட்களில் இவர்களும் 

இணைவார்கள் என்ற

நம்பிக்கையில்

எதிர் கொண்ட பயணம்

 Veena Shankar: இருவர் மட்டுமே ஆரம்பித்த வாழ்க்கை பயணத்தில்

பிள்ளைகள் சேர்ந்தவுடன் பெருகி

மீண்டும் சுருங்கியது

கடமைகள் முடிந்ததும்

இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் 

என்று விரும்பிய நாட்கள் போக

இப்போது இருவர் மட்டுமே 

தனிப் பயணம் எங்கும்

உலகில் நான் ஜனிக்க இருவர்

கொண்ட பயணத்தால் நானும் 

இன்று அவ்வழியே

 Veena Shankar: எதிரெதிர் திசை நோக்கி நின்றாலும்

ஈர்க்கும் காந்தம் போல் 

பற்றிக் கொள்ள துடிக்கும் மனமும் 

அவரவர் வழியில் சரி என்று எண்ணி தொடர்ந்தாலும்

வெற்றியும் கொள்ள முடியும் ஆங்கே

வெற்றிக்கு தேவை திறமை மட்டுமல்ல 

எதிர்பாரா நேரத்தில் வரும் திருப்பங்கள் கூட 

ஆதலின் துணை நிற்போம் துணையின் வெற்றிக்கு என்றும்

Vidhya, 

மனம் போட்ட பொய் பூசல் என்று அறியா மூளை..

கோபத்தில் எல்லா வார்த்தையை அள்ளி வீசி என்ன பயன்..

நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கு!

பாசத்தில் வேசத்தில்,பழையன புதியன உமிழ்ந்து என்ன பயன்..

விடிந்தால் வடியும் மழைநீர் போல் கோபம் இதில் பொய் பூசல் வேண்டாமே!

இருவர் தூக்கம் தொலைக்க ஒருவர் விட்டுக்கொடுத்தால் என்ன?

மழலை இல்லாத போது மழலையாக நின்ற இருவர்!

வறண்ட பூமியில் பூக்கும் கள்ளிப்பூவும் அழகே!



Saturday, January 25, 2025

ரயில் கொடுத்த உரிமை by Veena Shankar

 


ரயில் கொடுத்த உரிமை


வெளிநாட்டிலிருந்து திரும்பி நம் சொந்த ஊருக்கு வருவதென்றால் எல்லோருக்கும் குஷி தான். என்ன தான் அங்கே சம்பளம் கொட்டி கொடுத்தாலும் இங்கே இருக்கும் சுதந்திரம் நாம் இனிதாய் கடந்த நாட்களும் மக்களும் நினைவிலிருந்து நீங்க மாட்டார். இங்கே உள்ள காற்று மாசு, வெயில், குளிர் எதுவும் நமக்கு பழக்கமானதே. இங்கு இருக்கும் போது வெளிநாட்டை பற்றி பேசும் நாம் அங்கே சென்ற சில நாட்களில் நம்மூரை நினைக்க தொடங்கி விடுவோம் என்பதே உண்மை. அதை வெளிக்காட்ட மனம் சிலசமயம் மறுக்கவும் செய்யும்.

சென்னை வந்திறங்கியவுடன் அக்கம் பக்கத்து சுற்றத்தாரை காண வேண்டி கார் பிடித்து சந்தித்த நிலையில் நான்கு நாட்கள் கடந்து விட்டது. என் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் தான் முன் பதிவு செய்து பயணித்தேன். குளிர்சாதனப் பெட்டியில் வரும் அளவிற்கு வசதி இருந்தாலும் நம் ஊர் மண்ணைத் தொட்டதும் சிக்கனம் நெஞ்சை பற்றிக் கொண்டது. வளர்ந்த விதம் அப்படி. மேலும் அங்கே ஒவ்வொரு இடத்திற்கும் ஆகாய வழி பிராயணம் செய்து அலுத்து போய்விட்டது. அதான் சாதாரணப் பெட்டியில் பயணம் செய்து மக்களின் நிலையை அறிய ஆவலும் மேலோங்கி இருக்க பயணப்பட்டேன். இரவு நேரப் பயணம் என்பதால் அனைவரும் தூங்க நான் மட்டும் கோட்டானாய் விழித்திருந்தேன். டிக்கெட் பரிசோதகர் பல முறை வந்து தன் வேலையை செய்து கொண்டிருக்க ஒரு ஆணை சரமாரியாக கடிந்து கொண்டார். அவனும் அப்படி இப்படி என்று நடந்து மழுப்ப வேறு பெட்டிக்கு மாறும் படி சொல்லி நகர்ந்தார். அவனும் நான் மட்டும் விழித்திருந்ததால் தன் பெட்டியை ஒரு ஒரமாக வைத்து விட்டு அதை என்னிடம் பார்த்து கொள்ளுமாறு சென்று விட்டான். கதவோரம் என் இருக்கை என்பதாலும் அவன் பெட்டியின் சுமையை என்னிடம் ஒப்படைத்ததாலும் கண் அயர இருந்த நானும் முழித்து கொண்டே வந்தேன். இங்கே மட்டும் தான் அடுத்தவரிடம் நம் உரிமையை இலகுவாக திணிக்க முடியும் என்று எண்ண தோன்றியது எனக்கு. பிறகு என்ன? செய்யாத தவறுக்கு அனுபவிக்கும் தண்டனை போல நானும் அவனுடைய பெட்டியை பாதுகாத்து வந்தேன் அவன் இறங்கும் வரை. அவனுடைய என் மீதான நம்பிக்கை கூட எனக்கு பிடித்திருந்தது.


 உரிமைகள் இலவசம் என்றாலும் அது பூப்பது அழகான அன்பினாலே!

Thursday, January 23, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: மயிலும் தோகை விரிக்க அழகு

இந்த பெண் சிகை விரிக்காமலே அழகு

Veena Shankar: காட்சிகள் விரிய விரிய 

சிந்தனைகள் விரியும்

சிந்தனைகள் விரிய விரிய 

கற்பனைகள் விரியும்

கற்பனைகள் விரிய விரிய

படைப்புகள் பெருகும்

படைப்புகள் பெருக பெருக 

மகிழ்ச்சி பிறக்கும்

மகிழ்ச்சி பிறக்க பிறக்க

அமைதி பிறக்கும்

அமைதி பிறக்க பிறக்க

எண்ணங்கள் விரியும்

எண்ணங்கள் விரிய விரிய

காட்சிகள் ரம்மியமாகும்

 Veena Shankar: புது உறவு தேடி தனிமையா?

உறவுகளில் கொண்ட ஏமாற்றமா?

காதலில் வெறுத்த மனமா?

அது தந்த மௌனமா?

இயற்கையோடு வாழ விருப்பமா?

அதன் சீரழிவை எண்ணி கலக்கமா?

தன்னிலை மறந்து சுணக்கமா?

பின்னழகில் அடுத்தவர் மயங்க காட்சியா?

சேலை உடுத்தியதால் வந்த வெட்கமா?

கேசத்தை அள்ளி முடித்து மலைக்கு சவாலா?

வெண்மதி காண வருகையா?

இது ஏதும் இல்லையாம்

பெண்ணிடம் நான் விசாரிக்கையில் அவள் சொன்னாள்

என்னை தூரத்தில் படம் பிடிக்கிறார்கள்

படக் குழுவினர்

பக்கத்தில் என் தலைவனின் துணையோடு

என்றாள் நாடக நடிகை

Vidhya:

சாலையில் போகும் போது சேலை உடையே ஒரு கம்பீரத்தை தரும் மனதில் ..

அதுவும் சோலையில் சேலை கட்டி மயில் தோகை போல் ஆட பாட்டும் சேர்ந்து வரும் காற்றோடு..

குயில் கூவும் சோலையில், மாலையில் ஜில்லென்ற காற்றில்,தனிமையில் அலை அலையாக ஆடும் மனம் ,கட்டுக்கடங்காத கடல் அலையாக மோத தோற்றுப் போகும் எதிரில் வரும் கண்கள்..

Wednesday, January 22, 2025

நீ வருவாய் என by Veena Shankar




 நீ வருவாய் என!


நான் இங்கே தான் இருக்கிறேன். உன்னை விட்டு இங்கிருந்து விலக மாட்டேன். உன்னை என் கண்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கும். நான் எதிர்ப்பார்க்கும் போது வர மறுக்கிறாய்? என் மேல் உனக்கு கோபமோ? அதென்ன நான் பக்கத்தில் நிற்கும் போது அமைதியாய் இருக்கிறாய்? நான் ஏதோ வேறு வேலைக்கு சென்றால் உடனே ஆர்ப்பரித்துக் கொண்டு வந்து என் சாம்ராஜ்ஜியத்தை நிலை குலைய வைக்கிறாய். எப்படி? வெள்ளை மனதுடைய என்னையே கலங்க வைக்கிறாய்? உன்னால் எனக்கு எவ்வளவு அவப் பெயர் தெரியுமா ? நீ வெளி வந்து என் சமையலின் மணத்தை சுருக்குகிறாய்? உன் ஆடையை கிழித்து கொண்டு வருவதில் தான் உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி? நீ வருக நான் பக்கம் இருக்கும் போது, நீ வருவாய் என நான் நினைக்கும் போது. உன்னை சூடேற்றினால் வெளி வருவாய் என்பதால் அதையே நான் கையாளுகிறேன் உன்னை நான் அடைய வேண்டி. பல சமயங்களில் உன்னை நேரம் பார்த்தே கையாள வேண்டியுள்ளது. அதுவும் காலை நேர அவசர கதியில் நீ படுத்தும் பாடு இருக்கிறதே. சொல்லி மாளாது. நீ நெகிழ்ந்து போகிறாய் என்பதால் தானே வர மறுக்கிறாய்? உன்னை கொண்டு சேர்ப்பவனின் கை வண்ணத்தால் தான் நீ இப்படி இருக்கிறாய் என நானும் அறிவேன். ஆனால் எதற்கும் ஓர் எல்லையுண்டு தானே? என வீர வசனம் சொல்லிக் கொண்டு சமையற்கட்டில் நின்று கொண்டிருந்தாள் தமிழ் ஆசிரியையான அந்த வீட்டின் புது மருமகள் நித்யா. அவள் மாமியாரும் நாத்தனாரும் நித்யா தனியே பேசுவதை கேட்டு மெல்ல அங்கே எட்டிப் பார்க்க, அந்த சத்தம் கேட்டு நித்யாவும் அவர்களைப் பார்த்து தன் அடுத்த வசனத்தை மறந்து நிற்க, புஸ் என்று அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிய, அச்சோ! நான் சொன்னதெல்லாம் வீணாகிப் போனதே என்று கரி துணியை தேடினாள் அடுப்பில் வழிந்த பாலை துடைக்க. மாமியாரும் நாத்தனாரும் அவள் செயலை பார்த்து சிரித்துக் கொண்டே நகர்ந்தனர்.

Tuesday, January 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வாசலில் ஓர் கோலம்

என்றும் சொல்லும் 


வாசலின் கட்டளை

கற்பனையின் கலவை

பொறுமையின் வெளிப்பாடு

விரல்களின் நளினம்

வரைந்ததில் பெருமை

அமைதியின் நேரம்

இயற்கையின் வருடல்

ஜீவன்களின் உணவு

காண்பவருக்கு மருந்து

ரசிப்பில் ஆனந்தம்

வேளைகள் மாறி 

மீண்டும் மீண்டும் களைத்து போடும் போது 

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சிந்தனை

காலம் சொல்லும் சிறப்பு

தியானம் சொல்லும் பயிற்சி

காலையில் மலர்ந்து

மாலையில் தொடர்வது இதுவே

- Veena 

அற்புதம் , என்ன கற்பனை!

 உள்ளங்கையில் அடக்கிய

 சிந்தனை ,வண்ணத்தில் ஒரு

 கோலத்தில் அடக்கிய அழகு,

எண்ணற்ற வளமைக்கொண்ட

 அழகை இவள் கோலத்தில்

 அடக்கினாளே !

ஒன்று ஒன்றை போட்டியிட 

குன்றாத வளத்தை தரும்

 சூரியனை வணங்கி நிற்கும்

 பேரினம்!

- Vidhya 

Monday, January 20, 2025

காதல் திட்டம் by Veena Shankar

 


காதல் திட்டம்


குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரவி . " என்ன விசயம்? எப்போதும் கம்ப்யூட்டர் கையுமாக இருக்கும் நீங்கள் அந்த காலத்து ஆம்பள மாதிரி ஹால்ல நடந்துக்கிட்டு இருக்கீங்க " என்று சமையற்கட்டின் ஜன்னல் வழியே பார்த்த கீதா, தன் கணவனைக் கேட்டாள். "இல்லடி கீது... நம் பையன் சிவாவை பற்றி தான் ஒரே யோசனையா இருக்கு."  


" அவனுக்கென்னங்க குறைச்சல், என்னை மாதிரி அழகோடையும் அறிவோடையும் இருக்கான். நல்ல வேலை. பத்தாதற்கு நமக்கு ஒரே பையன். கண்ணுக்குள்ள வைச்சு வளர்த்திருக்கிறோம்" என்றாள். 

" எனக்கென்னமோ அவன் மேல சந்தேகமா இருக்கு. யாரையாவது லவ் பண்ணிகிட்டு இருக்கானோன்னு என் மனசுல தோணுது. "  

" என்னங்க புதுசா சொல்றீங்க! சிவா நம்ம பையன்க. அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணமாட்டான்." என்று கீதா சொல்ல, அவளை மேலே கீழே பார்த்தான் ரவி. அவன் பார்வையை புரிந்து கொண்டவளாய் "இல்லைங்க, நாம அந்த காலத்துல சின்சியரா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம் . சிவாவும் லவ் பண்ணுவான்னு எனக்கு தோணலங்க" என்றாள். 

"இப்பதான் அவன் பெருசா நம்ம பையன், நம்ம ஜீன்னு சொல்லி கதை அளந்த, நம்மளை மாதிரி அவனும் காதல் கீதல் ன்னு மாட்டிக்காம இருக்கணுமே" என்று ரவி மாறினான் பொறுப்பான தந்தை ஸ்தானத்தில். கீதா அசடு வழிந்தவாறே அங்கிருந்து நகர முயல, அவள் கையை பிடித்து இழுத்தான் . "ச்சீ! விடுங்க, என்ன புதுசா கல்யாணம் பண்ணின மாதிரி" என்று சொல்லி அவன் கையை அவள் உதறி விட, "அடி மக்கு பொண்டாட்டியே! இங்க பாரு இது யாரோட மொபைல்?" என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த மொபைலை காண்பித்தான். 

" ஏங்க! இது கூட தெரியாதா? சிவாவோடது" என்று சொன்னாள். " அப்பா! இதுவாச்சும் தெரிஞ்சுதே, உனக்கெல்லாம் எப்படி கவர்ன்மென்ட் வேலை கிடைச்சதோ?" என்று சொல்லி தன் ஆதிக்கத்தைக் காட்டி அவளை ரவி பேச்சால் சீண்ட, அவள் பார்வையால் முறைத்தாள் . ஆனால் கணவர் ஏதோ முக்கியமான விசயம் ஒன்றை சொல்லப் போகிறான் என்பதை புரிந்துகொண்டு மீண்டும் " என்னங்க என்ன விசயம்? " என்று சீரியஸ் ஆனாள். " வா " என்று சொல்லி சிவாவின் போனை அவளிடம் காட்டி " பார்! இன்னிக்கி அவன் மொபைலை மறந்தாப்புல வச்சுட்டு போயிட்டான் . எத்தனை மிஸ்டு கால் வந்திருக்கு. ஆனா அதுல ஒண்ணு கூட

பசங்க நம்பர் இல்லை. எல்லாம் பொண்ணுங்க பேரா இருக்கு, பாரு !" என்று காட்டவும் கீதா நெற்றியை சுருக்கிப் பார்த்தாள். விசயம் விபரீதம் தானோ என நினைத்தாள்.  

அப்போது அவர்கள் பேச்சுக் குரல் கேட்டு ரூமை விட்டு வெளியே வந்த ரவியின் அக்கா லதாமணி, " என்ன விசயம்? நீங்கள் மட்டுமே முணு முணுன்னு பேசுறீங்க!" என்று காதை நுழைத்தாள் . அதற்கு கீதாவோ, "அக்கா! பாருங்க நம்ம சிவா பண்ணியிருக்க காரியத்த" என்று சொல்லி மொபைலை அவளிடம் காட்டி மிஸ்டு கால் வந்த பெயர்களை பார்க்க சொன்னாள். "என்னடி சொல்ற!" என்று அவளும் படப்படத்தாள்.  

லதாமணி அதைப் பார்த்ததும் விசயத்தை புரிந்து கொண்டாள். " உங்க ரெண்டு பேருக்கும் அறிவே இல்லை. நம்ம சிவாவிற்கு இருபத்தியேழு வயசு ஆகும் போதே ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க என்று சொன்னேன், கேட்டீங்களா? நல்லா மார்க் வாங்கின அவனை வெளில படிக்க அனுப்பாம பக்கத்திலேயே பொத்தி பொத்தி வைச்சுக்கிட்டீங்க. நீங்க மட்டும் அவன் வயசுல காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்க துடிச்சீங்க. நான் மட்டும் உங்களுக்கு ஆதரவா பேசாம இருந்தா உங்க கல்யாணம் நடந்திருக்குமா? இப்போ அவனை சொல்லி குத்தமில்லை" என்று இருவரையும் கடிந்து கொண்டாள். 

ஆம். அவள் சொன்னதும் உண்மையே. சொந்த அத்தை பையன் மாமன் மகள் என்றாலும் அவர்கள் காதலுக்கு அக்கா மட்டுமே பச்சை கொடி காட்டி, அவர்கள் கல்யாணத்தை சிறப்பாய் நடத்தவும் காரணமாகியிருந்தாள். ஆனால் அவள் துரதிருஷ்டம். அவளுக்கு திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவள் கணவன் இறக்க பிள்ளைகள் இல்லாததால் ரவி, அக்காவை தங்களுடனேயே இருக்க சொன்னான். சிறு வயது முதலே தம்பியின் மீதும் குடும்பத்தின் மீதும் பாசம் வைத்திருந்தாள் லதாமணி . சிவாவை தன் பிள்ளையாகவே பார்த்தாள். கீதாவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வீட்டோடு இருந்தாள்.

அக்காவின் பேச்சினால் தங்கள் தவறை உணர்ந்தனர் தம்பதியர். அத்தைக்கும் சிவாவின் விசயம் எல்லாம் தெரியும்.


 அந்நேரம் பார்த்து தன் செல்போனை வீட்டில் மறந்து வைத்து விட்டதாக வந்த சிவா, அது தன் அம்மாவின் கையில் இருப்பதைப் பார்த்து அவசரமாக வாங்கிக் கொண்டு வெளியேறினான் . தான் கோயிலுக்கு செல்வதாக கூறி லதாமணியும் கிளம்பி சென்றாள். காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களால் சிவாவையும் கண்டிக்க முடியாததால் மௌனம் காத்தனர் ரவியும் கீதாவும். சிவாவின் ஜாதகத்தை தேடும் வேட்டையில் இறங்கினர்.


அன்றிரவு சிவா தன் அத்தையிடம் " தாங்க் யூ அத்தை! என்று அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினான். "போடா! " என்று அவளும் சிவாவை செல்லமாக கடிந்தாள்.


 ஆம் . அத்தை ஜாடைமாடையாக சிவாவிற்கு பெண் பார்க்க சொல்லியும் அதை புரிந்து கொள்ளாத பெற்றோருக்கு அத்தையும் மருமகனும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் இது. அத்தையின் யோசனைப்படி தன் நண்பர்களின் பெயரையும், ஃபோட்டோ வையும் பெண்களின் பெயரில் பதிந்து வைத்தான். அதை ஏதேச்சையாக பார்த்த ரவி, தன் மகனுக்கு பெண்கள் மட்டுமே ஸ்நேதிகளாக இருக்கிறார்கள் , ஏதாவது தவறு நடந்து விட போகிறது என்று தவறாக எண்ணினான்.  


எது எப்படியோ தன் திருமணத்திற்கான முதல் படியில் ஏறினான் சிவா. கற்பனையை விரித்தான். பிள்ளைகள் திருமண வயதை தொடும் போது பெற்றவர்கள் தான் அவர்கள் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும். 


எதுவும் நம் கைப்பட இருக்கும் வரை பொக்கிஷமாகவே தெரியும். பிடி தளர்த்தினால் மட்டுமே பிடியிலிருந்து தளர்ந்தவை எதிர்நீச்சல் போட்டு பிழைக்கும். 

காலம் இருக்கும் போது எதையும் செய்வது சிறப்பே!

Saturday, January 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 கதிரவனையும் கரங்களில் ஏந்தும்

துணிச்சல் யார் தந்தது?

கதிரவனும் குளிர்ந்தானோ

ஏந்தியவர் யாரோ?

அவன் காதலியோ?

கடலன்னை தன் குழந்தையின் பிம்பத்தை நிழலாய்

தாங்கியதும் ஏனோ?

எவர் மறுத்தாலும் மறைத்தாலும்

தாயின் அன்பு என்றும்

கிடைக்குமே

எல்லா பிள்ளைகளுக்கும் சரிசமமாய்

இயற்கையும் விதி விலக்கோ இங்கே?

Vidhya:

ஒவ்வொரு முறை பார்த்தாலும் புதியவனே.. 

செக்கசிவந்த உன் முகத்தை பார்த்தவுடன் அந்த வான் மட்டுமில்லை நானும் உன் அடிமை..

நீரில் படரும் உன் அழகில் என் மனமும் படருதே..

தினமும் உன்னை அதிகாலையில் காதலிக்க நேரமில்லை  கிடைக்கும் வாய்ப்பில் மனதார பார்த்து ரசிக்கிறேன்,பைத்தியம் ஆகிறேன்...

நீ வந்தாலும் தொல்லை,வராவிட்டாலும் தொல்லை..

என் உருவை நிழலாக தந்த தோழனே உன் வருகை என்றும் வசந்தமே!


Friday, January 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya


 

Veena Shankar: 

வெயில் தகிக்கும் வேளையில்

மயில் மேல் மையல்

கயல் விழியாள் யாரேன

 கொண்ட ஆராய்ச்சியால்

மயிலின் விழி நோக்க விழைய , மயில் மறுக்க,

மைவிழியாள் என்னை அழைத்தாள் என 

 நினைத்து பக்கம் செல்ல 

விழிகள் பரிமாறும் முன் 

மயிலும் அச்சம் கொண்டு 

இடறி விழ 

வீழ்ந்தவளை காளையும் கலையோடு கரங்களால் லாவகமாய் பற்றிக் கொள்ள

வெயிலும் நிலவென குளிர்ந்தது அங்கே!

மயிலும் வெயிலும் சேர்கையில் வெல்பவனும் எவனோ! 

அவனே வீரன்,  

காதல் ஆனதால் மௌனம் பேசியது கயல் விழியாலே மட்டும் 

கையில் ஏந்திய அழகுக் கலவையை வலையில் அவன் சிக்கவும் வைத்தானோ?

எவரும் சளைத்தவரல்ல

 கலாபக் கலையில்

அகன்ற மனதில் 

சுழன்றது காதல்

 உழன்றது இதயமும்

முன் பயின்ற யாவும் வீணே!

வீழ்ச்சியில் இல்லை வெற்றி 

என்று யார் உரைத்தது உலகில். 

வீழ வீழவே பெறுகிறோம் எதையும்.

வீழ்ந்து பார் !

வாழ்ந்து பார்க்க தூண்டும் 

வெற்றி மட்டுமே கொடி அடையாது

தோல்வியும் மனத்திரையில் 

வீழ்ந்து நிலைக்கும் காதலில் மட்டுமே!


 Veena Shankar: அம்பு எடுத்த வேளையில் ஓர்

அம்பிகை எதிரே வந்தாள் 

ஐம்புலன்களை அடக்க வைத்தே என்னை அதிர வைத்தாள் 

ஐம்பொன் சிலை போலே

 காட்சிக் கொடுத்தவளை கண்டு 

அம்பலத்தில் ஆடும் நாதனும் நாணினான்

அம்பலவாணனின் ரகசியமும் வெளிப்பட்டது

அம்பாள் இதை அறிய அவனும் விலகியே அந்த

அம்புலிப் பெண்ணை

எனக்களித்தான் 

அம்புலி தேய

அம்பலமானது எங்கள் காதல் முடிவுக்கு வந்தது யானை மேல்

அம்பாரியில் திருமண கோலத்தில்


Vidhya ,


ஓவியங்கள் மட்டுமே

 கற்பனைக்கு உயிர் கொடுக்க

 முடியும். 

பார்த்த உடனே அதில் நம்மை

 லயிக்க வைக்க முடியும்.

வளைந்த உடலா? இல்லை

 வில்லா?

காதலில் மறக்கும் அகிலமும்!

 நான்கு கண்களின் சந்திப்பில்

மறக்கும் தன்னிலை ,அதுவும்

 அரிதே !

மனத்தில் வடித்த உருவிற்கு

 உயிர்க்கொடுக்கும் பிரம்மன்

கலைஞன்!

Thursday, January 16, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar:

 கரையும் காகத்திற்கு

இசைக்கும் மனிதனுக்கும்

ஒரே ராகம் 

குடும்பம் தொலைந்த தனிமையில்

சோகம் எனும் போர்வையில்

சொர்க்கமும் பக்கமே

மன்னிப்பு எனும் குரலிலே

Veena Shankar:

 கரைந்த இடத்தில் கரைந்த மனது

ஒரு வாய் சோறுக்காக

கறை படியா மனிதர்

உள்ளவரை

கரையும் நீளுமே


Vidhya:

காலையிலிருந்து பாடுகிறேன்

 தம்பி அந்த ஜன்னல் கதவு

 திறக்க மாட்டிங்குது ..

நானும் தான் அண்ணன் 

 காலையிலிருந்து வாசிக்கிறேன்

 அந்த ஜன்னல் கதவு

 திறக்கவில்லை..

அவங்க எதுவும்

 ஊருக்கு போயிட்டாங்களோ!

நான் ஒன்னும் படத்துல பாட

 வாய்ப்பு கேட்கல சோறு தானே

 கேட்டேன்..

நானும் தான் வாசிக்கிறத கேட்க

 சொன்னேன்.அன்றைக்கு மூடிய

 கதவு திறக்கவே இல்லை.

நாம வேணும்னா வீட்டுக்கு

 முன்னாடி போவோமா!

அடேய் போன வாரம் வாங்கினது

 பத்தல..ஆள விடுடா சாமி.

அடுத்த தெரு பார்க்கிறேன்.


- வித்யா

நட்புக்கு எல்லையில்லை

இசைக்கு மயங்காத ஆளில்லை 

நீ பாட நான் வசிக்க வந்தது

 தென்றல் காத்து.

இசையில் பசியும் மறக்கும்

  

Wednesday, January 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

  


எதுவும் அழகே எதிரியின் பார்வையில்

இரையை லாவகமாய் அடைய நினைப்பதால்


 தவிப்பிற்கு பின் வருவது ஞானம்

தன் தலையை காப்பது எப்படி என்று?

இரையை பார்க்கும் முன் உள்ள சுதந்திரம் ஓர் களிப்ப

தானும் இன்னொருவனுக்கு இரையாவோம் என்பதறியாமல்

- Veena Shankar 


சிறியவனே பெரிய தொல்லை தருவாய்..

உனக்கு விளையாட இடமில்லையா?

அவனாவது விளையாடட்டும் முடங்கிய சமையல் அறையில்..

உன்னுடன் பேசாதவர் இல்லை கோபத்தில்..

தேவைக்கு நண்பன் இல்லையேல் தொல்லை..

சிக்கும் வரை விளையாடு. 

- வித்யா

Friday, January 10, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஆர்ப்பரிக்கும் எதிரிக்கும் உணர்த்த வேண்டும் 

மௌனத்தின் மொழி

 மௌனத்தை விட சிறந்தது ஏதுமில்லை,

அதை விட ,

செவி கேளாமல் இருப்பது சிறந்ததே,

அதை விட 

கேட்டும் நகைத்திருப்பது சிறந்ததே

 எந்த கோணத்தில் பார்த்தாலும் வலியவன் சீறுவான் 

எல்லை மீறுவான் 

ஆனால் எளியவன் அமைதி காப்பான்

விலகி செல்லவே நினைப்பான்

படமும் கருத்தும் by Veena Shankar

 


கரைந்தாலும் கரையாத உடல்

மறைத்து கொண்டு செல்லும் 

உணவை எங்கேயும் மறைக்க தெரியாத மனம் 

பிறரை கரைந்து அழைப்பதால் 

வறுமை இங்கே பேச முடியாது தேவை சிறிது என்பதால்

கருமை கருணைக்கு இலக்கணம்

கொள்ளாது என்றுமே கருமித்தனம் 

தனக்கில்லை என்றாலும்

Thursday, January 9, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


கடந்த காலம் வரை தேடியது கிட்டியது

இப்போது கையருகில்

தேடிய உடலையும் பறிகொடுத்த நிலையிலே


 பற்றுதல் உள்ள வாழ்க்கையை பற்ற முதலில் அவன் மேல் பற்றுதல் வேண்டும்,. அவன் மேல் நம்பிக்கையை பற்றிய உடன் பணம் என்பவனை பற்றிக் கொள்ள வேண்டும். 

இவனையும் பற்றிய பின் மற்றவரை விலக்கி வைக்க வேண்டும். 

ஏனெனில் தான் பற்று கொண்டு பற்றிய எதையும் அடுத்தவர் கைப்பற்றாமல் இருக்க


 விரல்கள் எழுந்து பார்த்தன, பஞ்சத்தில் இருந்தவனிடம் தான் பெற்ற லஞ்சப் பணத்தின் ஊடே ,

தன் மறுகை மூழ்கியது தெரியாமல்

தன்னைத் தானே தொலைத்ததையும் அறியாமல் தேடினான் காலம் சென்ற பின்னே

Wednesday, January 8, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 



மழையோ வெயிலோ 

ஏதும் உன்னை அண்டாமல் இருக்க

குடை பிடிப்பேன்

உன் நினைவு என்னிடம் இருக்கும் வரை

என் ஆவி உள்ள வரை


குடை என்பதை தாங்கி பிடிக்க வேண்டுமென்றாலும்

தாங்கி நிற்பது எளிதே

நம் அன்பின் வழியில்


ஈரம் கொண்ட நெஞ்சினால்

ஏந்திய குடை

மழையின் ஈரத்தை

துடைக்கும் வண்ணம்


 ஊடலால் கண்கள் வேர்க்கையில் காதலால் ஓர் செயல்

 வானத்தின் கண்ணீர் தன் காதலி மேல் வீழாமலிருக்க குடை ஏந்தும் கரம்

Monday, January 6, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பூவென்று நினைத்தே

பக்கம் வந்தது

 வண்ணத்துப் பூச்சியும்  

வண்ண கனவுகளை தரும் காதலனும்

அவளின் நறுமணம்

நுகர்ந்து


 காதல்


எட்டி இருககும் மனங்களை பக்கம் சேர்க்கும்

பக்கம் இருந்த உறவுகளை எட்டி நிற்க வைக்கும்


எதிரும் புதிரும் அல்ல காதல் 

வினாவும் வீணும் அல்ல காதல்

தலைப்பும் முடிவும் அல்ல காதல்

கடனும் கருவியும் அல்ல காதல்

தொடுவதும் உரசுவதும் அல்ல காதல்

உரிமையும் பிரிவும் அல்ல காதல்


ஆதியும் அவதியும் காதல்

ஊடலும் கூடலும் காதல்

ரசிப்பும் ஆறுதலும் காதல்

பகிர்வதும் பாராட்டுவதும் காதல்

தெளிவும் துணையும் காதல்

வசந்தமும் வாழ்வுமே காதல்


 தோட்டத்து பூக்கள் எத்தனை இருந்தாலும்

பூவை சூடிய பாவையே 

அழகு இங்கே 

காதலன் மதி

மயங்கி நிற்பதால்

வண்ணம் ஏந்திய பூச்சியும் தன்னிலை

வெட்கி எட்டி நின்றதோ?

யார் அறிவார்?

ஒருவர் மனதை மற்றொருவர் பிழையில்லாமல் இங்கே

Sunday, January 5, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


தேநீர் சூடாக குடித்து

உதட்டை சுட்டுக் கொண்டதால் நடந்த முத்த பரிமாற்றம் இங்கே வெகு சூடாக


எவரோ தயாரித்த தேநீரில் இரு மனங்கள் சங்கமம்,

சங்கமித்ததால் பிறந்த மௌனம்

மௌனத்தின் வெளிப்பாடே

சத்தமில்லா முத்தம்

பரிமாறப்பட்ட வேளையில் இரண்டிலும் மனம்

கொண்டதும் திருப்தியே


பேச்சு தொடங்குவதும் இங்கே


தொடர்வதும் இங்கே


முடிவதும் இங்கே


அதனுள்

எத்தனை துக்கங்கள்

எத்தனை இன்பங்கள்

எத்தனை நினைவுகள்

எத்தனை நெருடல்கள்

எத்தனை பரிமாற்றங்கள்

எத்தனை விவாதங்கள்

எத்தனை வினாக்கள்

எத்தனை சமாதனங்கள்

எத்தனை குறைகள்

எத்தனை வரைமுறைகள்


இப்படி பல இருந்தாலும்

மௌனத்தை விரித்தால் முத்தத்தை கொள்ளலாம் எதையும் வெல்லலாம்

ஸ்மைல் பிளீஸ் by Veena Shankar

 


'ஸ்மைல் பிளீஸ்", கொஞ்சம் சிரிங்க


"என்னங்க! கொஞ்சம் வாய மூடுங்க" என்று பாந்தமாக சொன்னாள் மனைவி. 

ஆனால் கணவன் தன் வாயை மூடின பாடில்லை. மீண்டும் மீண்டும் மனைவி சொல்ல கணவன் கேட்காததால் இம்முறை கொஞ்சம் ஆக்ரோஷமாக மனைவி கத்த, அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் கணவன் மனைவியின் சண்டையை வேடிக்கை பார்க்க வேண்டி வாசலில் ஒருமித்து நின்றனர். 

" ஏங்க ! இதுக்கு மேல என்னால கத்த முடியலங்க. கொஞ்சம் வாயை அஷ்டகோணலா வைச்சிக்காம உதட்டை அழகா விரித்து சிரிச்சா மாதிரி வாயை வைங்க. அப்போதானே ஸ்டுடியோவில் எடுக்குற மாதிரி ஃபோட்டோ அழகா வரும்" என்று மனைவி சொல்ல ,

"சரி ! சரி! நான் சரியா உட்காறேன். நீ கோவிச்சிக்காம படம் எடு. " என்றான் கணவன் . 

மனைவியும் " ஸ்மைல் பிளீஸ்" என்று சொல்லி கேமராவை கிளிக் செய்தாள். 

"ச்சே! என்னமோ ஏதோ ன்னு நினைச்சிட்டு வந்தா

  ஃபோட்டோ எடுக்கவா இந்த அலப்பறி" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே வீடு திரும்பினர் அக்கம்பக்கத்தினர்.

" வெரி குட்! சூப்பரா ஃபோட்டோ வந்திருக்கு பாருங்க!" என்று தன் கணவனிடம் காண்பித்தாள் மனைவி. தங்கள் திருமண நாளுக்கு கணவன் புதுசா வாங்கிக் கொடுத்த அலைபேசியில் ஃபோட்டோ எப்படி வருது என்று டெஸ்ட் செய்ய நினைத்த மனைவி. 

" ஓகே! இதையே ஸ்டுடியோவில கொடுத்து டெவலப் பண்ணி பாஸ்போர்ட் அப்ளிக்கேஷன் ல ஒட்டிடறேன். கொண்டா பார்ப்போம்" என்றவன் "ஃபோட்டோ எடுத்திருக்கிறா பாரு ஃபோட்டோ ? என்னை வச்சு படம் எடுக்க சொன்னா பின்னாடி இருக்கிற தோட்டத்தை எடுத்திருக்கிற " என்று கடிந்து கொண்டான் கணவன். 

"ஐயையோ! நான் உங்களை படம் எடுக்கலைங்க, அந்த மரத்தில இருக்கிற பறவையத்தான் எடுத்தேன் " என்று நக்கலாக திருப்பி பதிலடி கொடுத்தாள் மனைவியானவள். 

"பின்ன எதுக்கடி வாயை அப்படி வைங்க, இப்படி வைங்கன்னு சொன்ன, " என்று தலைக்கேறிய கோபத்தில் கேட்க, " உங்களை படம் எடுக்க நினைச்சு தான் சொன்னேன். ஆனால் உங்களை விட அந்த பறவை அழகா போஸ் கொடுத்தது. அதான் அதையே எடுத்திட்டேன் " என்று அவள் சொல்ல, மீண்டும் சண்டை புது கதையுடன் ஆரம்பமானது அதுவும் அதிக சத்தத்துடன்.


இம்முறை யார் வருவார் வேடிக்கை பார்க்க?

Thursday, January 2, 2025

ஆறுதல் அல்ல வெற்றி by Veena Shankar

 


ஆறுதல் அல்ல வெற்றி


எப்போது காலை ஐந்து மணியாகும் என்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தன் அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா. அலாரம் அடித்ததும் எழுந்து காலைக் கடன்களை முடித்து அங்குமிங்குமாக நடக்க, நேரம் ஐந்தரையை தொட்டது. காலை இந்நேரத்திற்குள் வரும் அவர் இன்னும் காணவில்லை ஏன் என்ற கேள்வியோடு. " டப் " என்ற சத்தம் கேட்டு ஓடி வந்து வாசலை அவள் பார்க்க, அடுத்த வீட்டில் பேப்பர் பையன் பேப்பர் போட்டு சைக்கிளை வேகமாக மிதித்து தெரு முனையை தொட்டான். சரி காபியாவது குடிப்போம் என்று பாலை பிரிட்ஜ் லிருந்து எடுத்து காய்ச்சினாள். முன்பெல்லாம் "சார் பேப்பர்" என்று பேப்பர் பையன் கூப்பிடுவான். அவன் ஒலி கேட்டே பேப்பர் வந்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும். சென்னையிலேயே இவ்வளவு லேட்டா பேப்பர் போட்டா கிராமங்களில் எப்படி என்ற சிந்தனையும் அவளுள் எழுந்தது. மறுபடியும் பார்ப்போம் என்று வாசலுக்கு வரவும் பேப்பர் பையனும் சரியாக வர, அவனிடம் தாமதமாக வர காரணம் என்ன என கேட்க வேண்டும் என்றிருந்தவள், பேப்பரைக் கண்டதும் மறந்தாள். அன்றைய தினம் அவளுடைய வாழ்க்கையில் இன்னும் ஒரு படி உயரம் கொள்ள வேண்டி எதிர்பார்ப்பில் நாளிதழை பிரித்தாள். ஞாயிறன்று இலவச இணைப்பாக வரும் வாரமலர் ஒன்றில் தன் படைப்புகள் வெளிவர உள்ளது என்பது தெரிந்ததால் ஆவலுடன் பார்க்க , ஓர் கதைக்காக அவள் வரைந்த படம் வந்திருந்தது. அதை பார்த்தவுடன் ஆனந்தம் அவளுள். மீண்டும் பக்கங்களை வேகமாக புரட்டியவள் , 

" கவிதைச் சோலை" யில் தன் படைப்பு பிரசுரமானதைப் பார்த்தாள். ஒன்றல்ல இரட்டிப்பு மகிழ்ச்சி அவளுக்கு இருந்தது. என்ன தான் அந்த நாளிதழில் ஒரு கிளார்க் ஆக வேலை பார்த்தாலும் தன் சிந்தனையை தூண்டி உருவான படைப்பு வெளி வரும் போது எவரும் ஆவலாக தான் இருப்பார்கள். சிறு வயதில் அவள் கவிதைகள், ஓவியங்கள் படைத்திருந்த போதும் தன் அண்ணனும் தந்தையும் தான் சரியாக படிப்பதில்லை என்ற ஒரே காரணத்திற்காக கிழித்து எறிந்த நிகழ்வு அவளிடம் அணையா நெருப்பாய் இருந்தது. எப்படியும் தன் படைப்பை ஊரறிய நினைத்தாள். அது இன்று நிறைவேறியது அவளின் மேலதிகாரியின் துணையோடு. இந்த ஆண் வர்க்கத்தின் பிடியில் ஓர் பெண்ணின் படைப்பு வெளி வருவதும் ஆறுதல் அல்ல வெற்றியே! என்றும் உணர்ந்தாள். மேலும் தாமதமாக வந்த நாளிதழை கருத்தில் கொண்டு மீண்டும் எந்த பகுதியிலும் இது நடக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க மேலதிகாரியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். வருடங்கள் பல ஓட , பன்முகத் தன்மை கொண்ட சரண்யாவும் தன் மேலதிகாரியின் ஓய்விற்கு பின் அந்த இருக்கையில் அமர்ந்தாள். இது வெற்றியல்ல, சாதனையே!


ஆறுதல் தரும் யாவும் வெற்றிக்கு வித்து, வெற்றி கொள்ளும் யாவும் சாதனைக்கு வித்து.

Wednesday, January 1, 2025

விதை by Akhiladevi Kumaran

 


*விதை*


2024 இறுதியில் என் மனதில் விதைத்த துளிர்கள்- சில துளிகள் இங்கே…


வியட்னாம் போர் விதைத்த விதைகள்-

உலுக்கிய உண்மைகள்-

காட்சிகள் கொடுத்த அனுபவங்கள்- உருக்கமானவை!

பல்லுயிர்கள் விலை கொடுத்து, பலரின் பலத்தின் ஒட்டுமொத்த பரிசு - இறுதியில் வெற்றி!!


நேரில் கண்ட போர்க்களம் - 

கடந்த அடர்ந்த காடுகள்- 

10000 நாட்கள் நடந்த போர் கொடுமைகள்- 

போரை தீரத்துடன் எதிர் நோக்கிய உத்திகள்-

உலகை உணர்வுப் பூர்வமான தருணங்கள்- 

கண்முன்னே நிழற்படங்களாய் நிழலாட -


மனதில் தோன்றிய ஒரே விதை - வீரம்!!!

வீரம் எதையும், எப்போதும் வெல்லும்!

வீரனின் போராட்டம் எவரையும் துரத்தும்!

தலைமையின் வீரமும், விவேகமும் நாட்டை ஒன்றுபடுத்தும்!!

விடுதலைப் பரிசு அளிக்கும்!!

எதிர்கால தலைமுறையை தலை நிமிர வைக்கும்!!!

விதை by Veena and Vidhya



 Vidhya Nivash விதைத்த விதை முளைக்காவிட்டாலும் விதைக்க மறக்காதே

 Veena Shankar: பிறப்பு எனும் விதையின் உந்துதலும்

பிள்ளை எனும் மழலையின் தேடலும் ஒன்றே!


சரியான விதையே முடிவு செய்யும் பலன் தரும் செடியை , 

தேடிய விதை கிடைக்காமல் அறிவியலின் உதவியால் ஒளிந்திருந்த விதையை உயிருக்குள்ளே தேட,


அது கிடைத்ததும் 

கருப்பை எனும் மண்ணில் ஊன்றி வைக்க , 


மண்ணில் இட்ட விதைக்கு நீருற்றுவது போல

ஏந்தும் தாய் தன் அகத்தில் உள்ள சிசுவிற்கு உணவினை மறைமுகமாய் ஊட்ட,


விதை செழிக்க வேண்டி மண்ணும் கூடுதல் உரமிட்டுக் கொள்ள, சிசுவிற்கோ தன் வளையோசையை இசைத்து புத்துணர்ச்சி கொடுக்க,


செடி தள்ளாடாமல் வளர ஊன்றும் கோல் போல சிசுவின் பிறப்பிற்கு பின் 

 பாசம் எனும் கோலால் தாங்கி பிடிக்க,


காற்றிற்கேற்ப ஆடும் செடியின் ஆட்டமும் 

மழலை செல்வத்தின் விளையாட்டும் என்றும் நினைவே!


செடியும் வளர்ச்சி பெற்று விருட்சம் ஆவது போல மழலையும் உருப்பெற்று பருவம் வர , 


தேவை கவனம் செடிக்கு விருட்சம் ஆகும் வரை,

மனம் கோணாமல் பிள்ளையை காக்க,


விருட்சம் பலன் தருவது போல்

பெற்றப் பிள்ளையும் நிழலாய் மாற,


விருட்சமும் இலையுதிர் காலத்தில் உதிர்க்கும் இலை போல,

தாயவளை பிள்ளையும் தனியே தவிக்க விட்டாலும்


மீண்டும் துளிர்க்கும் மரம் போல

தாயானவள் ஒட்டிக் கொண்டே வாழத் துடிப்பாள் உற்றத் துணையோடு, பிள்ளையும் 

உண்மையில் நிழல் தரும் தரு என்பதால்

 Veena Shankar: விதை விருட்சம் ஆவது எப்போது?


 காலம் பதில் சொல்லுமே! 

சரியான விதை

தரமான உரம்

தேவையான பராமரிப்பு

மெய்யான மழை

உண்டெனில் 

சுவாசிக்கும் விருட்சமுமே!

Vidhya Nivash: விதை வளர்ந்தாலும் அதன் வளர்ச்சியை தடுக்கும் களையாக இல்லாமல் இருக்க விதை விதைக்கிறேன் .

மகிழ்ச்சி,அமைதி,முயற்சி இவற்றை தொடர விதை விதைக்கிறேன்.

Veena Shankar: ஓர் விதையில் விருட்சம் ஒளிந்துள்ளது போல,

 உயிரும் உணர்வும் உண்டு அதனுள்ளே

உயிர் பெற்று விதையும்

நிலைத்த பின் அது 

செய்யும் தியாகமும்

நாம் உயிர் வாழ தானே! 

 உண்பதும் காணுவதும் அன்றி

அதன் வளர்ச்சியும் மர்மமே!

எதுவும் பிரம்மிப்பே இவ்வுலகில் !


உலகமத்தை தாங்குவது ஓர் விதையா?

உந்துதல் இல்லாமல் யாதும் பிறக்காது என்பதும் நிஜமே!

மண்ணின் பிரசவம்

இங்கே சப்தமில்லாமல் 

நமக்கு மாறியது கடவுளின் பிரசாதமாய் .

 Veena Shankar: விதையில்லாமல் பிறப்பு கிடையாது


விதையாய் நான் இல்லாவிட்டாலும்

அதனடியில் வளரும் வேராக இருக்க நினைக்கிறேன்


இல்லையென்றால்

அதன் மேல் வளரும் கிளையாக இருக்க விழைகிறேன்


ஒரு கால் அதுவும் 

இல்லையென்றால்

அதனின் பிறக்கும்

பூவாகவும் காயாகவும்

கனியாகவும் உருபெற ஆவலே!


இவ்வேதும் நடக்கா சூழலில் மறுமுறை சுழன்று உயிர் கொடுக்கும் விதையாக மாறவும் அந்த விதைக்கு தேவையான வித்தாகவும்


சூழலுக்கேற்ப வளைந்து நெளிந்து வளரவே என் 

கண்ணுக்கு தெரியா 

வித்தகனை, விந்தையாளனை

வேண்டி வணங்குகிறேன்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...