Friday, August 28, 2020

அற்பணம் என் சமர்ப்பணம் by Jaya

 *அற்பணம் என் சமர்ப்பணம்*

                             -ஜெயா




அன்பிற்கு அகரமாய்

அன்பிலே சிகரமாய்

அன்பால் அரவணைத்து

இன்னல்கள் களைந்து

ஈரைந்து மாதங்கள்

உயிருக்குள் சுமந்து

ஊர் மெச்ச வளர்த்து

ஊனுருக தன் மகவுகளை

வளர்த்த அனைத்து

அன்னையர் தெய்வங்களே

எங்கள் நடமாடும் தெய்வமே!!!

என்றும் அனைவரையும் அன்பால் வழி நடத்தி..... 

நாம் நடக்கும் பாதையில்

மலர்களை கிடத்தி.....

எங்களை வாழ வைக்கும் எங்கள் அன்னையே......

வாழ்க பல காலம் நீடூழியே......


வணங்குகிறோம் சிரம் தாழ்த்தி🙏🙏

3 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...