தானத்தில் சிறந்த தானம்
தானத்தில் சிறந்தது கண் தானம்,
தானத்தில் சிறந்தது கல்வி தானம்,
தானத்தில் சிறந்தது அன்ன தானம்,
தானத்தில் சிறந்தது ஈகை தானம்,
தானத்தில் மிகமிகச் சிறந்தது நிதானம்.
தான் என்ற அகந்தையைக்
களைந்து
நிதானத்துடன்,
செயலாற்றினாலே,
மற்ற தானங்களை
சிந்தித்து, சிறப்பித்து,
மகிழ்ச்சியினை கொடுத்து, பெற்றிடலாம்.
தானத்தில் மிகச் சிறந்தது நிதானம்,
அதுவே நம் வாழ்வினில் என்றும் பிரதானம்.

அருமை..கண்டிப்பாக எதிலும் தேவை நிதானம்😊
ReplyDeleteநன்றி டா
ReplyDeleteஅருமை ஜெயா....Keep writing dear...adhuvae pradhaanam..we are waiting for your short and sweet posts!
ReplyDeleteஅனைவருக்கும் அவசியமான ஒன்று 👏👏👏👏👏❤️❤️❤️❤️
ReplyDelete