Monday, August 31, 2020

வார்த்தை விளையாட்டு by Jaya

           வார்த்தை விளையாட்டு

                                                           -ஜெயா


வார்த்தைகள் பலவிதம் ,

மழலையாய் சில வகை,

மழையாய் சில வகை,

மெளனமாய் சில வகை,

இனிமை கூட்டுவன சில வகை,

கடுமையாய் கடுப்பன சில வகை,

விருந்தாய் ருசிபன சில வகை,

மருந்தாய் கசபன சில வகை,

கவிதை நயமாய் சில வகை,

காரசாரமாய் சில வகை,

கனிவு ததும்பும் சில வகை,

கண்டிபாய் கணக்கும் சில வகை,

மரியாதை குறையா சில வகை,

மரியாதை அறியா சில வகை,

வண்ணமயமாய் சில வகை,

வெறுமையாய் சில வகை,

மனதை கவரும் சில வகை,

மனதை வருத்தும் சில வகை,

வகைவகையாய் பல வகையாய் வார்த்தைகள் உண்டு,

உபயோகிக்க,

உபசரிக்க 

உச்சரிக்க

ஆனால்,

ஒரு போதும் வேண்டாம் 

வன்முறை வார்த்தைகள்

வார்த்தைகளிலும் களைவோம் வன்முறையை!!!!!

4 comments:

  1. வார்த்தைகளிலும் களைவோம் வன்முறையை அருமை😍

    ReplyDelete
  2. Super jaya semma eluthuringa ellame.valar.

    ReplyDelete
  3. வார்த்தைகளின் பலவிதங்களை வகைபடுத்திய ஜெயாக்கு வாழ்த்துக்கள் 👍

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...