ரசிக்க ரசிக்க ...
எழுத தோணும்..
-கிருத்திகா
நமக்குள் அலையென ஊற்றெடுக்கும் பல-
எண்ணங்களை....
காதில் நுழைந்து -
மனதை பாதித்த கதைகளை....
சொல்ல தவிக்கும்-
ஆதகங்களை...கோபங்களை....
காட்சி படுத்த முடியாத-
காதல் நேசங்களை...
என எதை வேண்டுமானாலும்..
எழுத்துக்கள் கோர்த்து -
வார்த்தைகள் வடிகட்டி..
படைத்திடலாம்.. இங்கே -
இனிக்கும் தமிழில் ...!!!!
எல்லைகள் இல்லாது........
ஒரு கவிதையே
பிரசவித்தது இங்கே... !!!
இதான் நம் மொழி -
செம்மொழி..!!!!
ரசிக்க ரசிக்க...
ஊட்டி -வளர்க்க வளர்க்க..
தாய் ஒருத்தி இருந்தால் போதும்..
தமிழ் குழந்தை தவழ்ந்து -கொண்டே சிரிக்கும்.....
எங்கேயும் எப்பொழுதும்...

அருமை..தங்கள் தமிழ் புலமை கண்டு வியந்தேன் இன்று😊
ReplyDelete